Sunday, June 14, 2009

வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும் (28/05/08 to 31/05/09 - 53 வாரங்கள்) தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி சரித்திரம் படைத்துள்ளது.

தமிழகத்தில் எவ்வளவோ முஸ்லீம் அமைப்புகள் , கல்வி அறக்கட்டளைகள் இருந்தும் நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. காரணம் கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் இவர்கள் கல்வி சேவைக்காக அறக்கட்டளைகள் நடத்தாமல் காசு சம்பாதிக்க அறக்கட்டளை நடத்துகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்களை நிருவி சிறுபாண்மை கல்வி நிறுவனம் என்று அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு உதவாமல், கல்வியை வியாபாரமாக்கி முஸ்லீம்களிடமே ஒரு சீட்டுக்கு இலச்சகணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களால் அடித்தட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை கல்வி செவையில் ஈடுபட்டவர்கள் வயதானவர்களாக இருந்த காரணத்தினாலும், தவ்ஹீத் இல்லாமையும், பெருமை, புகழ் விரும்பும் மனப்பான்மையும் பெரிய அளவில் இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது. இதனால் தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையையும் , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் ஒர் ஆண்டில் மட்டும் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி உள்ளனர். இதுவரை எந்த முஸ்லீம் இயக்கமும் செய்திறாத சாதனையை நமது TNTJ மாணவரணி செய்துள்ளது. தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டம் முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது,

தவ்ஹீத் தங்களின் வளர்சிக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களால் இதை சாதிக்க முடியவில்லை.( ஓட்டும் வாங்க முடியவில்லை). இந்த கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருப்பதினால்தான் உலக ஆதாயம் கருதாமல் மறுமை வெற்றி மட்டுமே குறிக்கோளக கொண்டு வேகத்தோடும் , வீரியத்தோடும் இத்தகைய சாதனைகளை புரிய முடிந்தது,
கல்வி சேவையோடு, முஸ்லீம் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் த்மிழகத்தில் 120 -க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவரணியை வழுப்படுத்தி உள்ளனர். முஸ்லீம்களை வைத்து உலக ஆதாயம் தேட முயலும் போலி முஸ்லீம் அமைப்புகளை மாணவர்களும் இளைஞர்களும் புறகணித்து இம்மை மறுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழக முஸ்லீம் இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்த்தியாக நமது மாணவரணி உருப்பெற்றுள்ளது..


நமது மாணவரணி வரும் ஆண்டுகளில் கல்வி சேவையை தமிழகத்தின் அனைத்து கடை கோடி முஸ்லீம்களுக்கும் சென்றடையும் வகையில் தனது செயல்பாடுகளை பண்மடங்காக பெருக்க திட்டமிட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். நமது மாணவரணியின் சேவை இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாரு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி,

No comments:

Post a Comment