Wednesday, June 3, 2009

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி. அப்துல் ரகுமான் பேட்டி


வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் நாடாளுமன்ற உறுப்பினராக தான் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:நிச்சயம் எம்.பி.க்களின் இமேஜை மாற்று வொம்.
அதற்காக இப்போதே களத்தில் இறங்கிவிட்டோம். தெரு முனையிலே மைக் பிடித்து வாக்காளர்களுக்கு நன்றி சொல்லாமல், தேர்தலின் போது எப்படி வீடு, வீடாகச் சென்று வாக்கு கேட்டேனோ அதேபோல் வீடு வீடாக அனைவரையும் சந்தித்து நன்றி சொல்லி வருகிறேன்.


இந்த தொகுதியைச் சுற்றி வந்ததில் இருந்து குடிநீர் பிரச்சினைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது என்பது தெரிகிறது. முதலில் அந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுப்பேன். என் முழுநேரப் பணியே வேலூர் தொகுதியையும், அங்குள்ள மக்களையும் சுற்றி வருவதுதான். இந்தத் தொகுதி மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் என்னை ஆதரித்த பெருந்தன்மையுடைய வர்கள். அவர்கள் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றிக் கடனாக நானும் யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவருக்கும் பணியாற்றப் போகிறேன்.

மேலும், பொது மக்களுக்கான சேவையை நான் இளம் வயதில் இருந்தே செய்து வந்திருக்கிறேன். எம்.பி. பதவி என்பது எனக்கு மெருகூட்டுவதாக இருப்பதோடு, நிறைய பொறுப்புகளை யும் வைத்திருக்கிறது. நிச்சயம் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பார்க்க முடியாதவர்கள் எம்.பி.க்கள் என்ற இமேஜை உடைத்துக் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment