Tuesday, June 9, 2009

ஆம்புலன்ஸ் இல்லாத பரமக்குடி அரசு மருத்துவமனை

பரமக்குடி: பரமக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.பரமக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால் மேல் சிகிக்சைக்கு நோயாளிகளை மதுரை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதற்காக மருத்துவமனை துவக்கப்பட்ட சமயத்தில் அரசால் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது தற்போது பயன்படுத்தும் தேதி காலவதியாகி பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இதையடுத்து அவசர சிகிக்சைக்கு முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த ஆம்புலன்சும் பழுதாகிவிட்டது.

அதை சரி செய்ய மதுரை பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது என்றும் இரண்டு மாதங்கள் கடந்தும் அது சீரமைக்கப்பட்டு திரும்ப வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடி விபத்து மீட்புச் சங்கம், தமுமுக போன்ற சில நல்ல தொண்டு நிறுவனங்கள் விபத்து நடந்த இடங்களுக்குச் சென்று காயமுற்றவர்களை இலவசமாக உடனே ஏற்றிவந்து மருத்துவமனை களில் சேர்க்கின்றனர்.

மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்வதற்கு டீசல் செலவுக்காக ரூ. 1,000 வாங்குகின்றனர். மக்களின் அவசிய தேவைகளை செய்ய வேண்டிய அரசு முக்கிய தேவையான உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வசதிகளை செய்யாமல் இருந்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags: ambulance, paramakudi, hospital, mudukulathur, madurai, ஆம்புலன்ஸ், பரமக்குடி, மருத்துவமனை, முதுகுளத்தூர், மதுரை.

No comments:

Post a Comment