Saturday, June 13, 2009

சவுதியில் பஸ் தீ விபத்து - கதவுகள் மூடிக்கொண்டதால், பயணிகளும் மரணம்

சவுதி அரேபியாவில் பஸ், வெளிநாட்டு பிரஜைகள் அடங்களாக 29 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் பயணம் செய்த 19 பேர் கொல்லப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் 5 இலங்கையர்களும், 3 இந்தியர்களும், பாகிஸ்த்தான்,பங்களாதேஷ்,எகிப்தை சேர்ந்த தலா ஒவ்வொருவரும், சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நேற்ற (வெள்ளிக்கிழமை காலை) நடைபெற்றுள்ளது.சவுதி அரேபியாவின் அசிசியா (Aziziyah), வின் பிரதான பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பஸ், வழிநடுவே பாரிய ட்ரக் வண்டியுடன் உரசியதால் தீப்பற்ற தொடங்கியதும், கதவுகள் யாவும் தன்னிச்சையாக மூடிக்கொண்டுவிட்டதால், வெளிவரமுடியாமல் பஸ்ஸினுள்ளேயே 29 பயணிகளும் சிக்கிகொண்டனர்.

தீப்பற்றிக்கொண்டதாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த 15 தீயணைப்பு படை இயந்திரங்கள், தீயை அணைக்க கடும் பிரேயர்த்தனம் மேற்கொண்ட போதும், கண்முண், எரிந்துகொண்டிருந்த பஸ்ஸினுள் அகப்பட்டிருந்த பயணிகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அம்புலன்ஸ் வண்டிகள், பிரதான நெடுஞ்சாலை காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும், சம்பவ இடத்தில் இருந்த போதும் ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட, சில நிமிடங்களில் பஸ் முழுதாக தீப்பற்றி எறியத்தொடங்கி விட்டது.

பஸ்ஸினுடைய சாரதியும், ட்ரக் வண்டியினுடைய சாரதியும் உயிர் பிழைத்த போதிலும், மற்றவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

இது வரை 21 உடலங்கள் பஸ்ஸில் இருந்து மீட்கப்பட்டுள்ள போதும், மிகுதி பயணிகளின் உடலங்கள் முற்றாக எரிந்து சாம்பலாக்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பஸ்ஸினுள் பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையோர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் எனினும், வெளிநாட்டு பயணிகளும் பயணித்தமை, பஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்து, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment