Sunday, May 31, 2009

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

புது தில்லி, மே 29: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இரண்டாவது முறையாக வியாழக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர்களும், அவர்களது இலாக்காக்களும்:

பிரதமர்: மன்மோகன் சிங்

பிரணாப் முகர்ஜி - நிதி
சரத் பவார் - வேளாண்மை, உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம்
ஏ.கே.அந்தோனி - பாதுகாப்பு
ப.சிதம்பரம் - உள்துறை
மம்தா பானர்ஜி - ரயில்வே
எஸ்.எம். கிருஷ்ணா - வெளியுறவு
வீரபத்ர சிங் - உருக்கு
விலாஸ்ராவ் தேஷ்முக் - கனரகத் தொழில், பொதுத்துறை நிறுவனங்கள்
குலாம் நபி ஆசாத் - சுகாதாரம் மற்றும் குடும்பநலம்
சுஷில்குமார் ஷிண்டே - மின்சாரம்
எம்.வீரப்ப மொய்லி - சட்டம் மற்றும் நீதி
ஃபரூக் அப்துல்லா - புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி
எஸ்.ஜெய்பால் ரெட்டி - நகர்ப்புற வளர்ச்சி
கமல்நாத் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம்
மீரா குமார் - நீர்வள ஆதாரம்
தயாநிதி மாறன் - ஜவுளி
ஆ.ராசா - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்
முரளி தேவ்ரா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
அம்பிகா சோனி - செய்தி மற்றும் ஒலிபரப்பு
மல்லிகார்ஜுன் கார்கே - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
கபில் சிபல் - மனித ஆற்றல் மேம்பாடு
பி.கே.ஹண்டிக்- சுரங்கம், வடகிழக்கு பிராந்திய மேம்பாடு
ஆனந்த் சர்மா - வர்த்தகம் மற்றும் தொழில்
சி.பி.ஜோஷி - ஊரக மேம்பாடு, பஞ்சாயத்துராஜ்
செல்ஜா - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா
சுபோத் காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்
எம்.எஸ்.கில் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு
ஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்து
பவன் கே.பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்
முகுல் வாஸ்னிக் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
காந்திலால் பூரியா - பழங்குடியினர் விவகாரம்
மு.க.அழகிரி - ரசாயனம் மற்றும் உரம்

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

பிரபுஃல் படேல் - விமானப் போக்குவரத்து
பிரித்விராஜ் சவாண் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலக இணையமைச்சர், பணியாளர் மற்றும் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம்
ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்
சல்மான் குர்ஷீத் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலம்
தீன்ஷா ஜே.படேல் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
கிருஷ்ணா தீரத் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்
ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல் மற்றும் வனம்

இணை அமைச்சர்கள்

ஸ்ரீகாந்த் ஜெனா - ரசாயனம் மற்றும் உரம்
இ.அகமது - ரயில்வே
முள்ளபள்ளி ராமச்சந்திரன் - உள்துறை
வி.நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்
ஜோதிராதித்ய சிந்தியா - வர்த்தகம் மற்றும் தொழில்
டி.புரந்தேஸ்வரி - மனித ஆற்றல் மேம்பாடு
கே.எச்.முனியப்பா -ரயில்வே
அஜய் மக்கான் - உள்துறை
பனபாக லட்சுமி - ஜவுளி
நமோ நாராயண் மீனா -நிதி
எம்.எம். பல்லம் ராஜு -பாதுகாப்பு
செüகதா ராய் - நகர்ப்புற வளர்ச்சி
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - நிதி
ஜிதின் பிரசாத் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
ஏ.சாய் பிரதாப் - உருக்கு
பிரணீத் கெüர் - வெளியுறவு
குருதாஸ் காமத் - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்
ஹரீஷ் ராவத் - பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு
கே.வி.தாமஸ் - வேளாண்மை மற்றும் நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம்
பாரத்சிங் சோலங்கி- மின்சாரம்
மகாதேவ் எஸ்.கண்டேலா - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை
தினேஷ் திரிவேதி - சுகாதாரம் மற்றும் குடும்பநலம்
சிசிர் அதிகாரி - ஊரக மேம்பாடு
சுல்தான் அகமது - சுற்றுலா
முகுல் ராய் - கப்பல்
மோகன் ஜாதுவா - செய்தி மற்றும் ஒலிபரப்பு
டி.நெப்போலியன் - சமூக நீதி, அதிகாரமளித்தல்
எஸ்.ஜெகத்ரட்சகன் - செய்தி மற்றும் ஒலிபரப்பு
எஸ்.காந்திசெல்வன் - சுகாதாரம் மற்றும் குடும்பநலம்
துஷார்பாய் செüத்ரி - பழங்குடியினர் விவகாரம்
சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அருண் யாதவ் - இளைஞர் விவகாரம், விளையாட்டு
பிரதிக் பாட்டீல் - கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
ஆர்.பி.என்.சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை
சசி தரூர் - வெளியுறவு
வின்சென்ட் பாலா - நீர்வள ஆதாரம்
பிரதீப் ஜெயின் - ஊரக மேம்பாடு
அகதா சங்மா - ஊரக மேம்பாடு

Friday, May 29, 2009

சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படும் குர்ஆன்


தேவ்பந்த்: ஏறத்தாழ 114 மொழிகளில் இதுவரை சர்வதேச அளவில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ள இறைமறையான குர் ஆன் தற்போது சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது. புகழ்பெற்ற நூலாசிரியரும் பேராசிரியருமான முஹம்மது சுலைமான் அவர்களின் பேத்தியான ரஜியா சுல்தானா இப்பணியைச் செய்யத் துவங்கியுள்ளார்.



பேராசிரியர் முஹம்மது சுலைமான் ஏற்கனவே குர் ஆனின் ஹிந்தி மொழிபெயர்ப்பையும் குர்ஆன் விரிவுரையையும் இரு பகுதிகளாக ஜம்மியத்-உலமா-யே- ஹிந்த் மூலம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
21 வயதான சகோதரி ரஜியா சுல்தானா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். இப்பணியினை மனதிற்கொண்டே தான் சமஸ்கிருதத்தில் M.A படிநிலையைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். இஸ்லாமிய நூல்கள் சமஸ்கிருதத்தில் மிகக் குறைந்து இருப்பதால் உயர்தர இத்தகைய நெறிமுறைகள் சமஸ்கிருதம் அறிந்த மக்களுக்குக் கொண்டு சேர்க்க தாம் விரும்பியதாகவும் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.


முழுமையான தொகுப்பிலும், பகுதி மொழிபெயர்ப்புகளும் சேர்த்து இறைமறை குர்ஆன் இதுவரை 114 மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.


சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கத் துவங்கியுள்ள இச்சகோதரியின் தூய குறிக்கோள் சிறந்த முறையில் வெற்றி பெற இறை பிரார்த்தனைகளுடன் சத்தியமார்க்கம்.காம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது

வேலூர் மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு கூட்டத்தில் அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

வேலூர் மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு கூட்டத்தில் அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு


உள்ளுர்க்காரர் - வெளி யூர்க்காரர் என்ற எத்தகைய வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பயன ளிக்கும் வகையில் சேவை யாற்றுவதையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்களும் நமக்கு அவ் வாறே வழிகாட்டித் தந் துள்ளார்கள். அந்த வகை யில் நானும் நாடாளு மன்ற உறுப்பினர் என்ற முறை யில் வேலூர் தொகுதி மக்க ளுக்கும் - நாட்டு வளர்ச் சிக்கும் சிறப்பான முறை யில் பணியாற்றுவேன் என்று வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தெரி வித்தார்.

வேலூர்தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் எம்.பி., அப்துல் ரஹ்மானுக்கு வேலூர் மாவட்ட அனைத்து அஹ்லுல் சுன்னத் ஜமாஅத் தார்கள் சார்பில் பாராட்டு கூட்டம் ஆம்பூர் பூவா ஷாதி மஹாலில் நேற்று (செவ்வாய்) மாலை நடை பெற்றது.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரை முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மாநிலத் தலைவருமான பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிவாசல் களின் நிர்வாகிகளும், ஜமாஅத் பிரமுகர்களும், சமுதாய தொழிலதிபர் களும் பெருமளவில் கலந்து கொண்டு வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானை வாழ்த்தியும், தொகுதி வளர்ச்சிக்காக அவர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கைகள் வைத்தும் உரையாற்றினார்.

இறுதியில் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு ரைக்கு ஏற்புரையாற்றும் வகையிலும் எம். அப்துல் ரஹ்மான் உரையாற்றினார்.

அப்போது அவர் குறிப் பிட்டதாவது-

இந்த இனிய நிகழ்ச்சி யில் உங்களையெல்லாம் சந்தித்து உரையாடவும், நன்றி தெரிவிக்கவும் வாய்ப் பினை ஏற்படுத்தித் தந்த எல்லாம் வல்ல இறைவ னுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றேன்.

தொடக்கத்தில் நான் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தி ருக்கலாம். ஆனால், இந்த தொகுதியின் வேட்பாள ராக நான் அறிவிக்கப் பட்ட நொடி முதல் நான் உங்களில் ஒருவனாக ஆகும் வகையில் தொகுதி யின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்து உங்களுடன் அறிமுகமாகிக் கொள்ளும் வாய்ப்பினை தந்து தேர்த லில் மாபெரும் வெற்றியை நல்கி இந்த தொகுதிக்கு பணியாற்றும் வாய்ப் பினைத் தந்து உங்களில் ஒருவனா கவே என்னை மாற்றிய எல்லாம் வல்ல இறைவனை நினைத்து நன்றி பாராட்டு கிறேன்.

என்னை வேட்பாளராக அறிவித்ததும் எனக்கு ஆதரவளித்து சமுதாய மக்கள் அனைவரையும் எனக்கு வாக்களிக்க செய் யும் வகையில் வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஜமாஅத்தார்களும் ஒன்று கூடி வேட்பாளர் கலந் துரையாடல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தீர்கள். அதேபோன்று இப்போது நான் வெற்றி பெற்றதை யடுத்து பாராட்டும் வகை யிலும தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன் வைக்கும் வகையிலும் அனைத்து ஜமாஅத்தார் களும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இங்கு பேசிய பலரும் மாவட் டத்துக்குட்பட்ட அனைத்து ஜமாஅத் தார்களும்இப்போதுதான் பல ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒன்று கூடியதாக குறிப்பிட்டார்கள்.

நோக்கம் எதுவாக இருந்தாலும் சமுதாய மக்கள் எல்லோரும், ஜமா அத்தார்கள் எல்லோரும் இப்படி ஒன்று கூடுவதற்கு நான் காரணமாகி உள் ளேன். வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப் பட்ட அப்துல் ரஹ்மானா கிய அறிவிக்கப்பட்ட என்னை வெற்றி பெறச் செய்வதற்காக நீங்கள் எல்லாம் ஒன்றுகூட நேரிட் டது என்பதை நினைத்துப் பார்க்கையில் இப்படி ஒரு பாக்கியத்தை எனக்கு அளித்த இறைவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவிக்க கடமைப்பட் டுள்ளேன்.

ஆரம்பத்தில் என்னை குறித்து அவ்வளவாக தெரி யாமல் இருந்திருந்தாலும் என்னை குறித்து விசாரித்து அறிந்து நான் எல்லோருக் கும் சேவையாற்றக் கூடிய வன். சாதி மத வேறுபாடு களுக்கு அப்பால் பொது சேவையாற்றி வருபவன். சமுதாய உணர்வுடன் நல்ல பல காரியங்களை செய்து வருபவன் என்பதையெல் லாம் அறிந்து கொண்டு உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சகோ தர சமுதாயத்தவர்களுக் கும் என்னை பற்றி எடுத்து ரைத்து எனக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து மாபெரும் வெற்றி பெறச் செய்து நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப் பேற்கச் செய்துள்ளீர்கள். இதற்காக உங்கள் ஒவ் வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயற் குழு கூட்டத்தை தொடர்ந்து வேலூர் தொகுதியின் வேட் பாளராக என்னை தலைவர் பேராசிரியர் காதர் மொகி தீன் அவர்கள் அறிவித் தார்கள். தொடர்ந்து தமிழக முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் அவர் களையும், தமிழக நிதி யமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாள ருமான பேராசிரியர் அன்பழகனார், தமிழக உள் ளாட்சித்துறை அமைச்சரும், கழக பொரு ளாளருமான தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்துக்களை பெற்று வேலூர் தொகுதியில் நான் கால் பதித்தது முதல் எனக்கு தொகுதியின் நிலவரங்களையெல்hம் எடுத்துக் கூறி தேர்தலை சந்திப்பது குறித்த வழி முறைகளை எடுத்து விளக்கி தி.மு.க.வினரையும், கூட்டணி கட்சியினரையும் ஒருங்கிணைத்து தேர்தல் வியூகங்களை அமைத்து மாபெரும் வெற்றியினை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் அண்ணன் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன். அவர் களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அண்ணன் துரைமுருகன் அவர்களுடனான எனது தொடர்பு தேர்தல் கால நட்பு அல்ல. நீண்ட கால நட்பாகும். நட்பை கடந்த உறவுமாகும். அவர்கள் வீட்டின் வரவேற்பையை யும் தாண்டி அடுப்பங் கரை வரை அழைத்துச் சென்று அவர்கள் கையா லேயே உணவு பரிமாறும் அளவுக்கு எனக்கு அவரது குடும்பத்தினரிடம் அன்பும், பாசமும், நெருக்க மும் உண்டு. எனக்காக மிகுந்த பிரயாசைப்பட்டு வெற்றியினை தேடித் தந்த அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமை கட்சியி னருக்கும் என்றும் நன்றி யுடையவனாக இருப்பேன் என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

என்னை வேட்பாளராக அறிவித்த போதும் சரி, இப்போது வெற்றி பெற்று இந்த தொகுதியின் நாடா ளுமன்ற உறுப்பின ராக பொறுப்பேற்றுள்ள நிலையிலும் சரி என்னை பற்றி ஒரு விமர்சனம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. நான் வெளியூர்க் காரன். நான் எப்படி இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்பதுதான் அது. நான் உங்கள் அனைவ ருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள் ளேன். நான் எப்பொழுது இந்த தொகுதியின் வேட் பாளராக அறிவிக்கப் பட்டேனோ அப்போதே இந்த தொகுதியின் ஒருவ னாக உங்களில் ஒருவனாக மனரீதியாக என்னை மாற்றிக் கொண்டுள்ளேன். நான் பிறப்பாக வெளியூரை சேர்ந்தவனாக இருந் தாலும் என் மீது நம பிக்கை வைத்து என்னை இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ராக ஆக்கிய உங்களின் நம்பிக்கைகளை - எதிர் பார்ப்புகளை என்னால் முடிந்த அளவில் நிச்சயம் நிறைவேற்றி தருவேன். நாடாளு மன்ற தொகுதி உறுப்பினர் என்ற பதவி எனது பொதுச் சேவைக் காக கூடுதல் தளம் தவிர வேறல்ல. நான் இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு தாய்ச்சபை ஊழியனாக இருந்தபடியே சாதி மதங் களை கடந்து உள்ளுர் - வெளியூர் என்ற வேறுபாடு களுக்கப்பால் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையி லான சேவைகளை செய்து வந்துள்ளேன் - செய்து கொண்டுதானிருக் கிறென்.

நான் அரசியல் பதவி களை கொண்டு எதையும் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இல்லை. இறை வன் எல்லா வகையிலும் என்னை சிறப்புள்ளவனா கவே ஆக்கியுள்ளான். வசதி வாய்ப்பிலும், செல்வத்தி லும் இறைவன் எனக்கு கிருபை செய்துள்ளான். அதன் மூலம் ஏராளமா னோருக்கு நான் உதவிக் கொண்டிருக்கிறேன். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறை யில் கூடுதலாக உதவும் வாய்ப்பினை பெற்றுள் ளேன்.

உள்ளூர் - வெளியூர் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோருக்கும் பயன் அளிக்கும் வகையில் சேவையாற்றுவதையே மார்க்கம் நமக்கு கற்றுத் தந்துள்ளது. அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந் திருந்தாலும் மதீனாவில் தான் ஆட்சிப் பொறுப் பினை ஏற்றார்கள். அன்ஸாரி சஹாபா பெரு மக்கள் அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களிடம் தாங் கள் எப்போதுமே எங்களு டன் மதீனாவிலேயே இருக்க வேண்டும். மக்கா விற்கு சென்றுவிடக் கூடாது என வாக்குறுதி கேட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கா, மதீனா என்றில்லாமல் உல கத்திற்கே பயனளிக்கும் வகையில் சேவையாற்றியுள் ளார்கள் நமக்கு வழி காட்டி தந்துள்ளார்கள்.

அதேபோன்று நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தனிப்பெரும் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் அவர்கள் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் பேட்டையில் பிறந்தவராக இருந்தாலும் கேரள மாநில தொகுதியிலிருந்து தான் நாடாளுமன்ற உறுப் பினராக தேர்வு செய்யப் பட்டு இந்திய மக்கள் அனைவருக்கும் பயனளிக் கும் சேவை புரிந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சுலைமான் சேட் அவர் களும், பனாத்வாலா அவர் களும் பிறந்த ஊர் வேறாக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஊர் வேறாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் வெற்றி பெற்ற தொகுதி மக்களின் எண்ணங்களை யும் - எதிர்பார்ப்புகளை யும் பூர்த்தி செய்ததுடன் நாட்டு மக்கள் அனைவருக் கும் சேவையாற்றினார்கள். தாய்ச்சபை தலைவர்கள் காட்டித்தந்த வழியில் எனது ஆசான் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்க ளின் ஆலோசனையின்படி நானும் இந்த தொகுதி மக்க ளின் எண்ணங்களுக்கு - எதிர்பார்ப்புகளுக்கு மதிப் பளித்து தொகுதி வளர்ச் சிக்கு பாடுபடுவேன். மேலும் நாட்டு மக்கள் அனை வருக்கும் சேவை யாற்றும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்வேன்.

இவ்வாறு அப்துல் ரஹ்மான் பேசினார்.

Wednesday, May 27, 2009

தமிழக தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை (தமிமுன் அன்சாரி)


மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முடிவை எதிர்பார்த்துதான் நாம் போட்டியிட்டோம். இருபெரும் கூட்டணி களையும், அவர்களது பணபலத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்கு தெரியும்.

ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை வாக்குகளைப் பெறுவோம் என எதிர் பார்த்தோம். ஆனால் நம்மை அதிர்ச்சி யில் ஆழ்த்தும் விதமாக குறைவான வாக்குகளை நாம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை நம்மால் நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை.


உதாரணத்திற்கு, மத்திய சென்னை தொகுதியில் துறைமுகம் பகுதியிலும், பொள்ளாச்சி தொகுதியில் குனியமுத்தூர் பகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபத்திலும், மயிலாடுதுறை தொகுதி யில் கும்பகோணத்திலும் ஒரு வாக்குச் சாவடியில் குறைந்தது ஆயிரம் வாக் காளர்கள் ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் மிகமிகக் குறைவான வாக்குகளே கணக்கில் வருகிறது.


'வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது' என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானது தான் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. (இதுகுறித்து தினமணி நாளிதழில் மே 14 அன்று வந்த செய்தி தனியாக உள்ளது).மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட நாச்சியார்கோவிலில் பூத் ஒன்றில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது கை சின்னத்தில் ஒலி எழுப்பியது. உடனே ஜே.எஸ்.ரிஃபாயி தலைமையிலான குழு ஒரு புகார் கொடுத்த பிறகே அது சரி செய்யப்பட்டது.


அதுபோல் பாபநாசம் அருகே ஒரு கிராமத்தில் இதே குற்றச் சாட்டை மக்கள் கூறிய பிறகே அது சரிசெய்யப்பட்டது. நமது கவனத்திற்கு வராமல் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த சதி நடத்தப்பட்டிருந்தது என்று தெரிய வில்லை.ஆளும் கட்சியினர், அரசு ஊழியர் களின் உதவியுடன் பல தில்லுமுல்லு களை செய்ததாக சில பத்திரிகையாளர் கள் நம்மிடம் தெரிவித்தனர்.ம.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் நமது வாக்குகளை பத்தில் ஒரு பங்காக குறைத்து காண்பிக்க திட்டமிட்டு சதி செய்திருக்கிறது ஆளும் கட்சி.


எதிர்காலத்தில் முஸ்லிம்கள் வலுவான அரசியல் பேரம் செய்யக் கூடாது என்பதற்காக இச்சதி அரங்கேற்றப் பட்டுள்ளது.நாம் பல பூத்துகளில் நமது சகோதரர் களை ஏஜென்டுகளாக போட்டிருந்தோம். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தி னரும் போட்ட வாக்குகள் கூட காணா மல் போய், அங்கே பூஜ்யம் வாக்குகள் என உள்ளது. இது நமது குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.அதுபோல் பா.ம.க.வை ஏழு தொகுதிகளிலும் தோற்கடிக்க திட்டமிட்டு தில்லுமுல்லுகள் நடத்தப்பட்டிருக்கிறது.


மதுரையில் அழகிரிக்கு கடும் போட்டி யைக் கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சியைப் பழிவாங்கும் விதத்தில் கன்னியாகுமரி தொகுதியில் அக்கட்சி 'டெபாசிட்' இழந்த தாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னியா குமரி மார்க்சிஸ்டுகளின் கோட்டை மட்டுமல்ல, அதிமுகவின் வலுவான பகுதியுமாகும்.திமுகவை கடுமையாக எதிர்க்கும் வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.


வைகோ தொகுதியில் பதிவான வாக்கு களை விட கூடுதலான 22 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்டு வைகோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப் பட்டிருக்கிறார். தா.பாண்டியன் தொகுதி யில் தலைக்கு 1000 ரூபாய் பணம் வினி யோகிக்கப்பட்டு கட்சி சாராத வாக்காளர் கள் தா.பாண்டியனுக்கு எதிராக கடைசி நேரத்தில் திசை திருப்பப்பட்டனர்.முதலில் 330 வாக்குகள் வித்தியாசத் தில் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரம், பிறகு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாயாஜாலமும் நடந் துள்ளது.


திடீரென எங்கிருந்தோ வந்த தொலைபேசியினால் சிதம்பரம் வெற்றி பெற்றுவிட்டதாக கொஞ்சமும் மனசாட்சி யின்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமுமுக நிர்வாகிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் கூட ரயில் எஞ்சினுக்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்று கூறு வதை நம்ப முடியாமல் வாக்களித்தவர் கள் குமுறுகிறார்கள்.


முஸ்லிம்களின் எழுச்சியை அச்சுறுத் தும் வகையில் மத்திய சென்னை தொகுதியில் திமுகவினரால் நடத்தப்பட்ட கலவரம் பலரையும் வாக்குச்சாவடி பக்கம் போகவிடாமல் தடுத்துவிட்டது.மத்திய சென்னையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப் பதிவு அனுமதி கேட்டும் மறுக்கப் பட்டிருக்கிறது.தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட முடியாத பலகீனமான நிலை யில் உள்ளது.


நமது இக்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் நடைபெற்ற தில்லுமுல்லுகள் அனைத்தும் அம்பலமாகும்.

இனி குர்ஆன் ஓதாமல் இருக்கவே முடியாது!


அன்புள்ள‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,அஸ்ஸ‌லாமு அலைக்கும்முத‌ல் முறையாக‌ த‌மிழ் குரானை அத‌ன் உண்மையான‌ புத்த‌க‌ வ‌டிவில் வ‌லை உல‌கில் அறிமுக‌ப்ப‌டுத்துகிறோம். குரானின் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்டுவ‌து போல் நீங்க‌ள் புர‌ட்டி உங்க‌ளுக்கு தேவைப்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளையோ, திருகுரானின் அத்தியாய‌ங்க‌ளையோ புர‌ட்டி பார்த்துக் கொள்ள‌லாம்.



நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌ முய‌ற்சிக்கு உங்க‌ள் முழுமையான‌ ஆத‌ர‌வே கார‌ண‌ம்.திருக்குர்ஆனை இந்த‌ப் புதிய‌ வ‌டிவில் காண‌ கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் அழுத்த‌வும்.




த‌ய‌வு செய்து இந்த‌ ம‌ட‌லை உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கும் அனுப்பித் த‌ந்து அனைவ‌ரும் ப‌ய‌ன் பெற‌ச் செய்ய‌வும்.



என்றும் உங்க‌ள‌ ஆத‌ர‌வை நாடும்


Adminstrator

Friday, May 22, 2009

ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியின் சேர்மனாக தமிழர் தேர்வு.



சவுதி அரேபியா ரியாத் மாநகரில் கடந்த 26 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியத் தூதர் மேதகு M.O.H பாரூக் அவர்களால் திருச்சியைச் சேர்ந்த அஹமது இம்தியாஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆண்டு காலமாக ரியாத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பள்ளியில் ஒரு தமிழர் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.திருச்சியைச் சேர்ந்த அஹமது இம்தியாஸ் அவர்கள் ரியாத் நகரில் பலராலும் அறியப்பட்டவர் அண்ணா பல்கலைகழகத்தில் B.A. Economics முடித்து, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் M.B.A பட்டம் பெற்றவர். 1985 முதல் சவுதி அரேபியாவில் பல்வேறு முன்னனி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இவர் பல்வேறு பொதுநல அமைப்புகளில் நிர்வாகியாகவும் பொருப்பு வகித்துவருபவர் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் பொதுச் செயலாளரும் ஆவார்.
2000க்கும் அதிகமாக உறுப்பினர்களைக் கொண்ட (TAFAREG) தஃப்ரஜ் குழுமத்திற்கு தலைவராகவும் பொருப்பு வகித்து வருகிறார் பல்வேறு பொது நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளராகவும் சில நேரங்களில் த.மு.மு.கவின் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளராகவும் சிறப்பாக சேவையாற்றியுள்ளார்.அவரது சேவைகள் இந்தியச் சமூகத்திற்கு குறிப்பாக நமது தமிழ்ச் சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் அமைய இறைவனிடம் பிரார்த்திப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

மாபெரும் திருக்குர் ஆன் மாநாடு


மாபெரும் திருக்குர் ஆன் மாநாடு

Friday, May 15, 2009

திமுக குண்டர்கள் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல்





தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை. மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார்.

அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை
(Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்போது எமது கட்சி வேட்பாளரைக் கண்டவுடன் அவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட ஆயுதங்களுடன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனே கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ஹைதர் அலி அவர்கள், மத்திய சென்னை தேர்தல் அதிகாரியிடம் மேற்கண்ட அசம்பாவிதங்கள் குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார்.






மேலும் காவல்துறையிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே கலவரச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக குண்டர்கள், மேற்கண்ட 10 வாக்குச் சாவடிகளிலும் எண்ணற்ற கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும் கொடிய ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து தொடர்ச்சியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளார்கள்.

இதனால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல பயந்து தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை. இந்த அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஐஸ்’ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் மனிதநேய மக்கள் கட்சியினருக்கு எதிரான வன்முறையை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் அதிகாரிகளும் அலுவலர்களும் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

இச்சூழ்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வன்முறைகள் நடந்தேறிய வாக்குச் சாவடிகள் எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட பத்து வாக்குச் சாவடிகளில் மத்திய காவல் படை உதவியுடன் மறு தேர்தல் நடத்துமாறும், அதுவரை மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மேலும் திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவும், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.



(மு. ஜைனுல் ஆபிதீன்) செய்தித் தொடர்பாளர், ம.ம.க. செல்: 99942 92932

Wednesday, May 13, 2009

மத்திய சென்னையில் திமுக-மமக மோதல்: ஹைதர் அலியைத் தாக்க முயற்சி-பலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினருக்கும், மனித நேய மக்கள் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே இன்று பெரும் மோதல் மூண்டது. திமுகவினர் சரமரியாக அரிவாள்களால் வெட்டியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். மனித நேய கட்சி வேட்பாளர் ஹைதர் அலியையும் வெட்ட முயன்றனர்.

காவல் நிலையத்திற்குள் ஓடிப் பதுங்கிய மமகவினரும் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்கப்பட்டனர். இதைப் பார்த்த வாக்காளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

தயாநிதி மாறன் திமுக சார்பிலும், மனித நேய கட்சி சார்பில் ஹைதர் அலியும் மத்திய சென்னையில் போட்டியிடுகின்றனர்.

போட்டியிலிருந்து விலகுமாறு தன்னை தயாநிதி மாறன் தரப்பு கேட்டுக் கொண்டதாக முன்னர் ஹைதர் அலி புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று மனித நேய மக்கள் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.

திமுகவினர்தான் முதலில் தாக்குதலைத் தொடுத்ததாக கூறப்படுகிறது. சரமாரியான அரிவாள் வெட்டு விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் ஹைதர் அலி தனது கட்சியினரோடு அங்கு வந்தார். அவரையும் வன்முறைக் கும்பல் தாக்க முயன்றது. இதையடுத்து ஹைதர் அலி காவல் நிலையத்திற்குள் புகுந்து தப்பித்தார்.

அவருடன் மமகவினரும் காவல் நிலையத்திற்குள் புகுந்தனர். ஆனால் உள்ளேயும் புகுந்த வன்முறைக் கும்பல் காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து மனித நேயக் கட்சியினரை வெறித்தனமாக தாக்கியது.

இந்த கண்மூடித்தனமான வன்முறையைப் பார்த்த வாக்காளர்கள் அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடினர். போலீஸாரும் பின்னர் வந்து சேர்ந்தனர்.

யாரும் ஓட்டுப் போட வர வேண்டாம், வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று போலீஸார் கூறியுள்ளதாக தெரிகிறது. அந்தப் பகுதியே தற்போது போர்க்களம் போலக் காணப்படுகிறது. பதட்டமும், பீதியும் நிலவுகிறது.

Monday, May 11, 2009

சிங்கப்பூரில் பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

அல்-மவத்தாஹ் (Al-Mawaddah Masjid) பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஸா அல்லாஹ் வருகின்ற மே 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை புவாங்காக் ரயில் நிலையத்திற்கு (BUANGKOK MRT) எதிரே அமைந்துள்ள
அல்-மவத்தாஹ் பள்ளிவாசல்
திறப்பு விழா நடைபெற உள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திறப்பு விழாவினை தொடரந்து மே 16ம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிமுதல்
மௌலவி. ஹாபிஸ். அப்துல் கையும் பாகவி அவர்கள்
அவர்கள்
(இமாம். பென்கூலின் பள்ளிவாசல்)
“பள்ளிவாசல் ஓர் விளைநிலம்”
என்ற தலைப்பினிலும்
மௌலவி. யூசுப் காசிமி அவர்கள்
(இமாம். சூலியா பள்ளிவாசல்)
“தொழுகை உண்டாக்கும் பண்பாடுகள்”
என்ற தலைப்பினிலும்

இஸ்லாயமியச் சொற்பொழிவுகள் நிகழ்த்திட உள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:
ஷாகுல் ஹமீது - 90621340
அஸ்ரப் அலி - 97870817
இப்ராஹிம் - 91066652
முஹம்மது அசீம் - 90813520




(குறிப்பு : மே 16ம் தேதி இஸ்லாமிய சொற்பொழிவிற்குப் பின் இரவு உணவு வழங்கப்படும்)
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

இணைப்பு : பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

தயவுசெய்து இந்த இமெயிலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பார்வேட் செய்யவும்



இறைப்பணியில்
அல்-மவத்தாஹ் பள்ளிவாசல் நிர்வாகக்குழு மற்றும் இந்திய முஸ்லீம் நற்பணிக் குழு
சிங்கப்பூர்

Sunday, May 10, 2009

தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!

தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!
தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி சேவை
போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்
சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழி-தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.

பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.

பி.எஸ்.என்.எல். தொலைபேசி- 044 28447200
டாடா இண்டிகாம் தொலைபேசி- 044 64555100, 64556100

(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Thanks : நீதியின் குரல்

பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல் அம்பலப் படுத்தும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...



''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி தமிழக அரசியலில் காலகாலமாக கோலோச்சி வரும் ஏதேச்சதிகார வர்க்கத்தினரை பீதியடைய வைத்து புலம்ப வைத்தது.
பரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார்.

07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில்,

ஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றும், அவ்வாறு வேறு தொகுதியில் போட்டியிட்டால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் அவர்களே (தயாகும்பல்) பார்த்துக் கொள்வதாகவும், கூறியதாகவும்'' ஹைதர் அலி தெரிவித்தார். மத்திய சென்னையில் தயாநிதிமாறனின் வெற்றி வாய்ப்பை மறுத்த ம.ம.க வேட்பாளர் எங்களைப் போல் மக்களோடு அவர்களால் ஒன்றிப் பழக முடியாது. இணைந்த பணியாற்ற முடியாது. கட்சிக்காரர்களோடு கூட நெருங்கிப் பழக முடியாத ஒருவர், சாதாரண மக்களோடு எவ்வாறு நெருங்கி வருவார் என்றும் செ. ஹைதர் அலி வினா விடுத்தார்.

இதற்கு முன்பு தயாநிதிமாறன் பெற்ற வெற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவினால் கிடைத்த வெற்றியாகும். இந்த மக்களவைத் தேர்தலின் முடிவு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை வழங்கும். மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதின் மூலம் முஸ்லிம் வாக்காளர்களை விட்டு திமுக மேலும் அந்நியப்படுத்தி விட்டது. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் இதுவரை யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த வாக்காளர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். நேர்மையாளர்கள் யார்? என்பதை அது தெளிவு படுத்தும்' என்றார்.

அ.தி.மு.க வேட்பாளர் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றி கூறும்போது வாக்காளர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் தி.மு.கவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிக்கவே மாட்டார்கள். நாங்கள் மக்களுக்கு மாற்றத்தினை வழங்குவோம்' என்றார்.

சென்னை குடிநீர் ...........


மேலே உள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா?
இன்னொருமுறை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்
வெயிலின் கொடுமையால் குளிப்பதாக நீங்கள் எண்ணினால் அது தவறு

இப்போ இதைப் படியுங்கள்…


சென்னை மக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரை காய்ச்சி குடிக்க சொல்லி மாநகராட்சி பிரசாரம் செய்கிறது. ஆனால் டேங்கர் லாரியில் தண்ணீர் நிரம்பும்போது ஊழியர் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்தால் என்ன சொல்வது? உயிர் காக்கும் குடிநீரில் கால்களை சுத்தமாக்கி சட்டையுடன் தலை குளித்து கடமையை செய்கிரார். இந்த நீரைத்தான் சென்னை மக்கள் குடிக்கின்றனர். தான் குடிக்கும் தண்ணீரை மட்டும் சுத்தமாக பாட்டிலில் நிரப்பிக் கொள்கிறார்.

இப்படிபட்ட மனிதநேயமற்ற ஊழியர்களை கண்டும் காணாமலும் விடுவதினால் தான் தவறுகள் அதிகரிக்கிறது…

இதுபொன்ற தவறுகளை பொதுமக்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டவேண்டும்.

இந்த புகைப்படம் சென்னை வியாசர்பாடி நீரேற்றும் நிலையம். இதை படம் பிடித்தவர் லோகநாதன் அவர்கள்…தினக்கரனில் வெளியிட்டுள்ளார்.

Thursday, May 7, 2009

குல்லா வியாபாரியும், குரங்குகளும்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அன்பு இஸ்லாமிய பெரியோர்கள், சகோதர, சகோதரிகளுக்கு,
அல்லாஹ்வின் திருப்பெயரால்…(துவங்குகிறேன்)!

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், மன்னராட்சிகாலத்தில் ஷஹீத் திப்புசுல்தான் அவர்கள் அன்றைய முஸ்லிம் மன்னர்களின் ஒற்றுமை இன்மையாலும், காட்டிக் கொடுக்கும் துரோகிகளாலும் வீரமரணமடைந்தார். இஸ்லாமியர்களின் ஆட்சி அதிகாரம் படிப்படியாக இந்தியாவில் துடைத் தெறியப்பட்டது. ஆனால், தீரர் திப்பு அவர்கள் நம் நினைவுகளில், உணர்வுகளில் கலந்து இன்றும் நம்மோடு வரலாற்றில் நிலைத்து நிறகிறார். காட்டி கொடுத்த துரோகிகள் தான் இழிவடைந்து அழிந்துவிட்டனர். இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் லஹ்னத்திற்கு (சாபத்திற்கு) ஆளாகினர்.

சுதந்திர போராட்ட காலத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு, முஸ்லிம் லீக்கின் தலைமையை பின்பற்றி மாபெரும் சாதனைகளை படைத்தனர். வட்ட மேசைமாநாட்டில் காங்கிரசுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஆதரித்ததன் மூலம் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் உரிமைகள் கிடைக்க முஸ்லிம் லீக் உதவியது. இரண்டாம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் - காங்கிரஸ் கட்சி தலித், மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காத நிலையில், முஸ்லிம் லீக் சார்பாக ஓர் தலித்தை அமைச்சராக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சுதந்திரம் பெற்றபின் டாக்டர் அம்பேத்கர் அவர்களை முஸ்லிம் லீக் சார்பாக அரசியல் சாசன சபைக்கு அனுப்பி சரித்திரம் படைத்தனர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு மட்டும் உழைக்காமல் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும் போராடிய மாபெரும் இயக்கமான முஸ்லிம்லீக் இன்று, அத்தலைவர்களின் திறமையின்மையாலும், துணிவு இன்மையாலும், தியாகத்திற்கு தயாராக இல்லாததாலும் ஒரு “சீட்டு” இயக்கமாக சுருங்கி அதுவும் இரவல் சின்னத்தில் MP பதவிக்கு போட்டியிட ‘திருவோடு’ ஏந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர காலத்தில் ‘தாய் சபையாக’ வழிகாட்டியாக திகழ அன்றைய தலைவர்களின் வீரமும், தியாகமும், திறமையும் காரணமாக அமைந்தன. இன்றைய தலைவர்கள் தங்களின் பதவி சுகத்திற்காக போட்டி போட்டு பல ‘லீக்குகளை’ உருவாக்கி முஸ்லிம் லீக்கை ‘பாட்டி சபையாக’ மாற்றிவிட்டனர். காங்கிரஸீம், திமுகவும் முஸ்லிம் லீக்கை சுரண்டியும், உடைத்தும், இன்றைய சுயநல தலைவர்களுக்கு பதவி ‘எலும்புத்துண்டை’ வீசி தங்கள் வீட்டு செல்லப் பிராணிகளாகவே மாற்றிவிட்டனர். உடைந்த முஸ்லிம் லீக்கையே ஒன்று சேர்க்க இயலாமல், திமுகவின் சிறுபான்மை பிரிவாகவே மாறி முஸ்லிம்களின் உரிமைக்காக போராட துணிவின்றி ‘கையேந்தி’ பல்காட்டி நிற்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் பாபர் பள்ளி இடிக்கப்பட்டபோது வெட்கமின்றி முஸ்லிம் லீக் காங்கிரசுடன் கேரளாவில் ஆட்சி மஞ்சத்தில் மகிழ்ந்தது. பெரியவர் இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்கள் இக்கேவலமான நிலையை கண்டு கொதித்து முஸ்லிம்லீக்கிலிருந்து பிரிந்து சென்றார். காங்கிரஸ் கட்சி பாபர் பள்ளி இடிப்புக்கு தாங்கள் காரணம் இல்லை, இடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தோம் என முஸ்லிம்களை நக்கலடிக்கின்றனர்.

அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவோம் என்று கூறிய உறுதிமொழி பாராளுமன்றத்தில் இன்றும் எதிரொலிக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாபர் பள்ளி இடித்த இடத்தை அரசின் கட்டுப்பாட்டில் வைக்காமல் கோவில்கட்டி சிலை வணக்கம் நடத்த அனுமதித்து, பாதுகாப்பும் வழங்குகிறது காங்கிரஸ் ஆட்சி. இக்கட்சியிலும் முஸ்லிம்கள் பெயரளவில் பதவி சுகத்திற்காக காலம் தள்ளுகின்றனர்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைவிட காங்கிரஸில் ‘பெரிய’ முஸ்லிம் தலைவர் எவரும் இல்லை. ஆனால் அவருடைய நிலையே கேவலமானதாக இருந்துள்ளது. சுதந்திர காலத்தில் காங்கிரஸ், முஸ்லிம்களுக்கு செய்த துரோகத்தை தனது புத்தகத்தில் எழுதிய ஆசாத் அவர்கள், அந்த உண்மைகளை மூடி முத்திரையிட்டு 50 ஆண்டுகளுக்கு பிறகு அதை பிரிக்க வேண்டும் என கூறி இறந்துவிட்டார்.

“அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் சத்தியத்தை உரைப்பதே மிகச்சிறந்த ‘ஜிஹாத் என அண்ணல் நபி (ஸல்). ஆவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் மௌலானாக்கள் பதவி சுகத்திற்காக சத்தியத்தை சாப்பிட்டுவிட்டு, மறைத்துவிட்டு இறந்து விடுவது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகம். சத்தியத்தை கூறுவதற்கே 50 ஆண்டுகள் தேவையென்றால் போராடுவது எப்போது, உரிமை பெறுவது எப்போது?. எனவே, முஸ்லிம் அல்லாதவர்களின் தலைமையில், கட்சிகளில் இணைந்து, முஸ்லிம்களின் உரிமையை பெற்றுத்தருவேன் என்பது மாபெரும் ஏமாற்று வேலை.

1967 தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று உறுதி கூறிய திமுக, வெற்றி பெற்றபின் முஸ்லிம் லீக்கிற்கு அமைச்சரவையில் இடம் தராமல் ‘வாக்கு’ மாறி துரோகம் செய்தது. அன்று துவங்கி இன்று வரை முஸ்லிம்லீக்கை தன் நலனுக்காக அவ்வப்போது உடைத்து கூறுபோட்டது.

கடந்த காலங்களில் திமுக வெற்றிக்கு முஸ்லிம்களின் ஓட்டுகளே (வாக்குகளே) முக்கிய காரணம் என்பதை திமுகவே மறுக்கமுடியாது. இந்நிலையிலும் 12 சதவீதத்திற்கு மேலுள்ள முஸ்லிம்களுக்கு திமுக சார்பாக ஒரு முஸ்லிமுக்கும் MP தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முஸ்லிம்லீக் சார்பாக ஒரு முஸ்லிமுக்கு மட்டும் வேலூரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் முஸ்லிம்லீக் கூட்டணி ஒப்பந்தம் செய்யவில்லை, மாறாக அடிமை சாசணம் செய்துள்ளனர். முஸ்லிம்லீக் தலைவரே வேட்பாளராக நிற்க முடியாத அவலம், அது மட்டுமின்றி திமுக சின்னத்தில்தான் நிற்க வேண்டுமாம்! நாளை BJP க்கு பாராளுமன்றத்தில் ஓட்டுபோட வேண்டும் என்று திமுக உத்தரவிட்டால் முஸ்லிம்லீக் ஓட்டுபோட வேண்டும் மீறினால் பதவி பறிபோய்விடும் இதற்கு பெயர் ஒப்பந்தமா? அடிமை சாசனமா?

இப்படிதான் முஸ்லிம்களின் மானம். ‘தாய்சபை’ என்ற பெயரில் மாற்றாரின் காலடியில் பதவி ‘வரத்திற்காக’ தவம் கிடக்கிறது. இதற்குதான் முஸ்லிம்லீக் உருவாக்கப்பட்டதா? முஸ்லிம்களின் தியாகம் யாருடைய பதவி சுகத்திற்காக பணியவைக்கப்படுகிறது. முஸ்லிம்லீக்கை உருவாக்கிய தலைவர்கள் இப்படித்தான் அரசியல் செய்ய கற்றுக்கொடுத்தார்களா? மறுமையிலும் இத்தகையவர்களை மன்னிக்கமாட்டார்கள் அத்தகைய துரோகத்தை இன்றைய முஸ்லிம்லீக்கின் ‘பாட்டி சபையின்’ தலைவர் என கருதி செய்துவருகிறார்கள். பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை, அவமானத்தை தனது சுயசரிதையில் எழுதி ‘சீலிட்டு’ 100 ஆண்டுக்கு பிறகு பிரித்து படிக்குமாறு எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முஸ்லிம்லீக் முன்னோர்கள் செய்த சாதனையை பற்றி பேச பெருமைப்பட இன்றைய முஸலிம்லீக்கிற்கு உரிமை இல்லை.

இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் இதுவரை எந்த முஸ்லிம் அரசியல் இயக்கமும் எடுக்காத நிலைபாட்டை தமுமுக – மமக துணிந்து எடுத்துள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து தனித்து போட்டியிடுகிறது. இத்தகைய துணிவு அரசியல் களத்தில் நீண்ட காலமாக உள்ள முஸ்லிம்லீக்கிற்கு இல்லை ‘தாய்சபையையோ, பாட்டி சபையையோ’ எங்கிருந்தோ ஒரு ‘தாத்தா’ ரிமோட் கண்ட்ரோலில் இயக்க மானமுள்ள வாரிசுகள் அனுமதிக்கமாட்டார்கள். மானமுள்ளவர்கள் சிந்திக்கட்டும் சுயநலம் உள்ளவர்களும், நயவஞ்சகர்களும் அழிவை தேடிக்கொள்வர். வருங்கால சமுதாயத்திற்கு முன் உதாரணமாக திகழ்பவர்கள் தான் தலைவர்களே தவிர சமூகத்தை தன் சுயநலனுக்காக சவக்குழிக்கு அனுப்ப முயற்சிப்பவர்கள் கேவலமான முடிவையே தேடிக்கொள்வர். காயிதேமில்லத் அவர்களின் காலத்தில் திமுகவின் சின்னத்தில் முஸ்லிம் லீக் போட்டியிடவில்லை. அதனால்தான் அவருடைய பெயர் இனறும் உச்சரிக்கப்படுகிறது.

முஸ்லிம்களின் அரசியல் உரிமைக்காக மமக போராடுகிறது அதற்காக பெரிய விலையை கொடுத்துள்ளது. அமைச்சருக்கு இணையான வக்ப் வாரிய தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு சுயஉரிமைக்காக தேர்தல் களத்தில் போராட்டத்தை நடத்துகிறது. அதுமட்டுமல்ல காங்கிரஸ் தருவதாக கூறிய வெளிநாட்டு தூதர் போன்ற கவர்ச்சிகரமான பதவிகளையும் நிராகரித்துள்ளது. சாதாரண MC பதவிக்கே எப்படி வெறிபிடித்து அழைகிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்கவும். அடிமை அரசியலில் இருந்து விடுதலைபெற, தொலைநோக்கு பார்வையுடன் கிடைத்த பதவியையும் இழந்து எதிர்கால சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

தனிமனித புகழ்பாடி, எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும், காலில் விழுந்தாவது பதவியைபெறும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தில் - சகோ.பேரா.ஜவாஹிருல்லாஹ்வோ, சகோ. ஹைதர் அலியோ தனித்து ஓர்முடிவு எடுக்காமல் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுடன் நன்கு ஆலோசித்து எடுத்த ஓர் தீர்க்கமான முடிவைகண்டு துரோகிகளும், சுயநலமிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மமகவின் பலநாட்கள் ஆலோசனையும், முடிவும் முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. தாம்பரம் மமக துவக்க விழாவில் மற்ற அரசியல் கட்சியினரை அழைக்காதது மிகப்பெரும் எழுச்சி ஆகும். மமக தன் சுயபரிசோதனையில் உள்ளது பாராட்டத்தக்கது.

திமுகவிற்காக ஷஹித் பழனிபாபா அவர்களை விட அதிகமாக உழைத்த வேறு ஓர் முஸ்லிமை அடையாளம் காட்ட இயலாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழனிபாபாவுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பரிசாக வழங்கப்பட்டது. கோவை கலவரத்தில் 19 முஸ்லிம்கள் ஷஹிதாக்கப்பட்டனர். முஸ்லிம்களை கொன்றவர்களுக்கு திமுக அரசில் பதவி உயர்வு பரிசாக அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமல்லாமல், பாக்தாத் அபுகரிப் சிறையை விட அதிகமாக கொடுமைகளும் திமுக ஆட்சியில் நடந்தது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற்றிருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. நான் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சுமார் 8 1/2 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் இத்தகைய அவலங்களை நன்கு அறிவேன். சிறையிலிருந்து வெளிவந்து சுமார் 2 ½ ஆண்டுகள் கடந்துவிட்டன. 2004ல் தமுமுகவிலிருந்து PJ வெளியேறிய பின் தமுமுகவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காண்கிறேன். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக அரசு சிறை கைதிகளை விடுதலை செய்தபோது தமுமுக முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக பெரும் முயற்சி செய்தது, ஆனால், திமுக அரசு முஸ்லிம் சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யாமல் துரோகம் செய்தது.

12 சதவீதத்திற்கு மேல் உள்ள முஸ்லிம்களுக்கு 3 1/2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை கிறுத்துவர்ககள் தூக்கி வீசி விட்டனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உஹத் யுத்தத்திற்கு செல்லும்போது, நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை முஸ்லிம்ளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் வலிமையை, ஒற்றுமையை குழைக்க முயற்சி செய்தான். அதில் அவன் சிறு வெற்றியும் பெற்றான். ஆனால் வரலாற்றில் நயவஞ்சகன் என பதிவு செய்யப்பட்டான். எப்போதெல்லாம் முஸ்லிம்கள் உரிமைக்காக, ஆட்சி அதிகாரத்திற்காக போராடுகிறார்களோ அப்போதெல்லாம் அப்துல்லாஹ் இப்னு உபைகள் தோன்றிக் கொண்டுதான் உள்ளனர்.

இன்றைய தமிழக அரசியல் களத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக, தனித்தன்மைக்காக, தமுமுக, மமக போராடும் போது PJ தன் துரோகத்தை வெளிப்படையாக காட்டியுள்ளார். இவர்தான் சமுதாயத்தின் ஒரே தலைவர் என ஆணவத்துடன் ‘படம்’ காட்டிவருகிறார். கடந்த காலங்களில் இவருடைய காட்டிக் கொடுத்த செயல்களையும், நயவஞ்சகங்களையும் சிறையில் இருந்தவன் என்ற முறையில் நன்கு அறிந்தவன்.

சைத்தான் தன் வேலையை செய்தால்தான் சைத்தான், செய்யாவிட்டால் சைத்தான் அல்ல. PJ தன் வேலையை செய்யாவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ‘இனம் இனத்தோடுதான் சேரும்’ என்பதற்கு ஏற்ப இஸ்லாமிய துரோகிகள் அனைவரும் ‘கை’கோர்த்து செயல்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 3 மாதத்தில் தமுமுக -வை அழிப்பேன் என சபதம் செய்தவர் தன்னால் இயலாததால் தமுமுகவின் வளர்ச்சியை கண்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு சென்றுவிட்டார் என்பதை அவருடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் நிரூபிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு தேர்தலில், போட்டியிட சரியான இடம் தராமல், மனதில் இடம் தருவதாக வசனம் பேசுவதும், கூட்டணி கட்சிகளை உடைத்து கூறுபோடுவதும் தான் திமுகவின் கூட்டணி தர்மம். இன்று தமுமுகவை, மமகவை உடைக்க முடியாததால் முஸ்லிம்களின் ஓட்டு சிதறிவிடும் என்று தோல்வி பயத்தில் ‘தலையை சொறிவதற்கு கொள்ளிக்கட்டையை எடுத்தது’ போன்ற நிலையில் PJ வின் ஆதரவை திமுக பெற்றுள்ளது! பலமுறை புதிய இயக்கம் கண்டு இறுதியாக? தானே (தவ்ஹீதுக்கு) நிறுவனராக கற்பனை செய்து கொண்டு உருவாக்கிய TNTJ இன்று உடைந்து மாவட்ட கிளைகளையும் கலைத்து, மாநில நிர்வாகிகளையும், நீக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு துவண்டு விட்ட PJ தனக்கு ஓர் மறுவாழ்வு கிடைக்காதா என காத்திருந்த நிலையில், தமுமுக திமுகவைவிட்டு – உரிமையை நிலைநாட்ட பிரிந்து விட்டநிலையில். PJ தனக்கு மறுவாழ்வு கிடைத்து விட்டது என்ற நப்பாசையில் திடீரென திமுகவிற்கு ஆதரவு என கூறியுள்ளார். PJ வின் மீது முஸ்லிம்களுக்கு உள்ள வெறுப்பை அறியாமல் அரசியல் சாணக்கியர் கலைஞர் மாபெரும் தவறை செய்து விட்டார். PJ வின் நட்பு தான் முஸ்லிம்களின் ஓட்டு திமுகவிற்கு அரவே கிடைக்காமல் செய்துவிட்டது என்பதை இன்ஷா அல்லாஹ் தேர்தலுக்கு பின் உணர்வார்.

Pj. தமுமுக - வின் ‘பைலா’ வைப் பற்றி கூறி வழக்கு தொடருவேன் என ‘பிளாக்மெயில்’ செய்கிறார். கடந்த காலங்களில் இவ்வாறு பலர்மீது வழக்கு தொடர்வதாக ‘பிளாக்மெயில்’ செய்துள்ளார். என்மீது 1997ல் சுமார் 10,000 ரூ செலவு செய்து ரூ ஒரு லட்சம் கோரி மான நட்டவழக்கு போட்டார். இவருடைய ‘பூச்சாண்டிக்கு’ பயப்படாமல் வழக்கை எதிர் கொள்ள தயாரானேன். ஆனால், இவருக்கு மானமில்லை என்பதை ஒப்புக்கொண்டு வழக்கு நடத்தாமல் விட்டுவிட்டார். இதுபோல் பெரியவர் SM பாஷா அவர்கள்மீது தொடுத்த கிரிமினல் வழக்கும் ‘புஸ்வானம்’ தான்.

தமுமுக பைலா ஒன்றும் வேத புத்தகம் அல்ல. காலநிலைக்கு ஏற்ப மாற்றம் செய்வதில் தவறு இல்லை. ஆனால் அல்லாஹ்வின் குர்ஆனிலேயே குழப்பத்தை உருவாக்கிய PJ வை முஸ்லிம்கள் அறிவர். கலைஞர் தேர்தலுக்குபின் அறிவார். வல்லத்தில் அல்லாஹ்வின் கோபத்தால் கவிழ்ந்த ‘காபா’ போன்ற சினிமா செட்டப்பை கட்டிய நவீன அப்ரஹா PJ வை முஸ்லிம்கள் அறிவர். கலைஞர் அறியமாட்டார்.

பாலைவனத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக காபாவின் அருகில் ஜம்ஜம் நீர் ஊற்றை அல்லாஹ் அருளியுள்ளான். ஆனால் தஞ்சை தரணியில், காவிரிக்கரையில் பல நீருற்றுகள் இருந்த இடத்தில் நவீன அப்ரஹா PJ காபா போன்ற சினிமா செட் போட்டதால் அல்லாஹ்வின் லஹ்னத் - கோபப்பார்வை ஏற்பட்டு நிரூற்றுகள் வற்றிவிட்டன.

PJ. உடன் சேர்ந்த திமுக மீதும் அல்லாஹ்வின் கோபப்பார்வை இன்ஷா அல்லாஹ் ஏற்படும்.

ஓராண்டுக்கு முன் சகோ. பாக்கருக்கு எழுதிய கடிதத்தில் PJ வை பற்றிய உண்மைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டிய நிலையை கூறி இன்னும் எத்தனை நாட்கள் அண்ணனுக்காக பாவ மூட்டைகளை சுமக்க போகிறீர்கள் என வினவினேன். அல்லாஹ் என் போன்றவர்களின் துஆவை ஏற்று TNTJ வை உடைத்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளான்.

சகோ. ஹைதர்அலி அவர்கள் வக்ப் போர்டில் ஊழல் செய்ததாக PJ கூறுவது உண்மையாக இருந்தால் வழக்கு தொடர வேண்டியதுதானே ஏன் இதுவரை ஊழல் வழக்கு தொடரவில்லை. திமுக அமைச்சர் ஒருவரே கட்டபஞ்சாயத்து செய்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் PJ, தமுமுகவினர் கட்டபஞ்சாயத்து செய்ததாக ஒருவர் மீதாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததுண்டா?

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் மூன்று நாட்கள் நோன்பு நோற்றால் பாவம் தீர்ந்துவிடும் என ரகசிய ஃபத்வா கொடுத்த கள்ள ஆலிம் PJ ஜகாத் கொடுக்காத முஸ்லிம்களை கொள்ளையடிக்கலாம் என ரகசிய ஃபத்வா கொடுத்த கள்ளஆலிம் PJ .

அடுத்தவர்கள் மீது பொய்யையும், அபாண்டமான பழிகளையும் குற்றச்சாட்டுகளையும் கூறும் கள்ள ஆலிம் PJ என்பதையும் உலகம் அறியும்.

ஷஹித் பழனி பாபா பற்றி எத்தகைய பொய் செய்திகளை பரப்பினார் என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிவர். அவர் ஷஹித் ஆனவுடன் நீலிக்கண்ணீர் வடித்த நயவஞ்சகர் என்பதை நன்கு அறிவோம்.

ஒரு குல்லா வியாபாரி மரத்தின் நிழலில் படுத்திருந்தபோது குரங்குகள் அவர் அணிந்திருந்ததுபோல குல்லாக்களை மாட்டிக்கொண்டன. தூங்கி எழுந்த குல்லா வியாபாரி தான் அணிந்திருந்த குல்லாவை எடுத்து கீழே வீசியதும் மரத்தில் இருந்த குரங்குகளும் குல்லாக்களை வீசி எறிந்தன. குல்லா வியாபாரி குல்லாக்களை எடுத்துக்கொண்டு நடையை கட்டினார் என ஒரு கதையை பள்ளியில் படித்துள்ளேன்.

இந்த குரங்குத் தத்துவத்தைத் தான் PJ வும் கடைபிடிக்கிறார். இவர் இறையச்சமின்றி வீசி எறியும் வார்த்தைகளை இவருடைய ரசிகர் கூட்டம் பேசித்திரிகிறது. இவருக்கு சாதகம் இல்லையென்றால் தன் வார்த்தைகளையே மாற்றி கூறுவார். அப்போதும் குரங்குகளின் செயல் போல ரசிகர் கூட்டம் சிந்தித்து பார்க்காமல் அதையே பின்பற்றுகிறது.

ஜமாத் நிர்வாகிகளை மிரட்டினார்கள், சுனாமியில் ஊழல், செல்வந்தர்களிடம் மிரட்டி பணம் பறித்தனர், கட்டப்பஞ்சாயத்து செய்தனர். வக்ப் வாரிய சொத்துக்களை தாரைவார்த்தனர் என ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறும் PJ ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுத்திருப்பார் என்பதை அவருடைய ரசிகர்கள் சிந்தித்தால் உணர்வார்கள்.

PJ கூறுவது உண்மைதான் என வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் இவ்வளவு தவறுகளுக்கும் காரணமாக – ஆளும் கட்சியை தமுமுக பயன்படுத்திதாக PJ வே கூறும்போது அவ்வளவு மோசமான ஆளும்கட்சியை – திமுகவை PJ ஆதரிப்பது பெரும் பாவம் அல்லவா. அல்லாஹ்விற்கு PJ வின் ரசிகர்கள் என்ன பதில் கூறுவார்கள்? தயவுசெய்து மனிதர்போல் சிந்திக்கவும். மக்களை முட்டாளாக்க இவ்வாறு வார்த்தை ஜாலங்களில் விளையாடுகிறார்.

1991 தேர்தலுக்கு முன் திருச்சி நடுவன் சிறையில் NSA தேசிய பாதுகாப்புச் சட்ட கைதியாக ஷஹித் பழனிபாபா இருந்தபோது டாக்டர் ராமதாஸ் அவர்களும் அன்றைய பா.ம.க பொதுசெயலாளர் தலித் எழில்மலை அவர்களும் தேர்தல் உடன்பாடு குறித்து ஒப்பந்தம் செய்துகொண்டபோது நானும் உடன் இருந்தேன் அப்போது பழனிபாபா அவர்கள் தேர்தல் உடன்பாட்டைவிட சமூக உடன்பாட்டையே வலியுறுத்தினார். முஸ்லிம்களும் வன்னியரும் தலித்துக்களும் ஒற்றுமையுடன் இருந்து சமூக ஒற்றுமையும், ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று கூறினார். அப்போது சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஜிஹாத் கமிட்டிக்கு நோட்டோ, சீட்டோ தேவையில்லை. முஸ்லிம்களின் பாதுகாப்புதான் முக்கியம் என கூறினார். டாக்டர். ராமதாஸ் அவர்களும் பல ஊர்களில் முஸ்லிம்களுக்கு வன்னியருக்கும் இருந்த பிரச்சினைகள் தீர உதவினார்.

1991 ல் பாபா அவர்கள் கூறிய வசனங்களை இன்று PJ கூறுகிறார். ‘நோட்டும் வேண்டாம், சீட்டும் வேண்டாம்’ என்று முஸ்லிம்களை 18 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்கிறார். நோட்டு வேண்டாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 1992 பாபர் மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியாக கலவரம் அப்பாவி முஸ்லிம்கள் கைது என அடக்கு முறைகளை கண்டு பாபா அவர்கள் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் இருந்தார் என்பதை அவருடன் இருந்தவர்கள் அறிவர்.

அவ்வாறு பாபா ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தால் முஸ்லிம்களின் எழுச்சியை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் ஷஹிதாக்கப்பட்டார். எனவே இன்று முஸ்லிம்களின் எழுச்சியை தடுப்பதற்கான எதிரிகளின் நயவஞ்சக சதியில் PJ வும் பங்கெடுக்கின்றார். PJ வின் பித்தலாட்டங்களை நயவஞ்சகங்களை விமர்சிப்பவர்களை வழக்கு தொடுப்பேன் என மிரட்டுவதும், அவருடைய அநியாயங்களை எதிர்ப்பவர்கள் மீது மது,மாது மற்றும் பொருளாதார குற்றச்சாட்டு கூறி வீடியோ ஆதாரம் உள்ளது என அபாண்டமாக பழி சுமத்துவதும் PJ வுக்கு வாடிக்கை. இதுவரை யாரைபற்றியும் இவர் கூறியதுபோல் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதில்லை. இவருடைய வார்த்தையில் சில ரசிகர்கள் மட்டும் மயங்கி உள்ளனர்.

உண்மையில் PJ வின் துரோகங்கள், நயவஞ்சகங்கள் காட்டிக்கொடுத்தல் அரபிக் கல்லூரி லீலைகள் முதல் ஆற்காட்டு லீலைகள் வரை, இஸ்லாத்தை விட்டு வெளியேறி ‘முர்தத்தாக’ இருந்தது முதல் குர்ஆணை ஹராமான வேலைக்கு பயன்படுத்தியது வரை தொகுத்து இன்ஷா அல்லாஹ் PJ ஓர் ஆய்வு’ - தொண்டி முதல் ஆற்காடு வரை என ஒரு CD விரைவில் ஆதார பூர்வமாக வெளியிட்டு அவருடைய முகமூடி கிழிக்கப்படும். அப்போது அவருடன் இருப்பவர்களும், ஆதரிப்பவர்களும் அவமானத்தால் கூனிக்குறுகும் நிலை இன்ஷா அல்லாஹ் ஏற்படும்.

PJ வின் மறுவாழ்வுக்காக திமுகவை ஆதரிக்கும் நிலையை தமிழக உலமாக்கள் நன்கு அறிவார்கள். தனித்து விடப்பட்ட PJ இன்று திமுக தயவில் எழுந்து நிற்க முயற்சிக்கின்றார். எனவே இதை நன்கு புரிந்துகொண்டு முஸ்லிம்கள் குறிப்பாக உலமாக்கள் ஓர் மௌன புரட்சியை இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்துவார்கள்.

PJ வை பற்றிய உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு என்றுமே பதிலளித்ததில்லை. அவரைப்பற்றி வெளியீடுகளை அலட்சியப்படுத்தினார். ஆனால் மக்கள் உண்மையை உணர்ந்து அவரை விட்டு விலகிவிட்டனர். இன்று அவரைபற்றி வெளியிட்ட வெளியீடுகளின் தாக்கம் என்ன என்பதை உணர்ந்துவிட்டார்.

சூழ்ச்சி செய்பவர் அந்த சூழ்ச்சியாலேயே அழிவார் என திருமறை கூறுகிறது. PJ தன் சூழ்ச்சிகளுக்கு யார் யாரை, எந்த அமைப்புகளை, எந்த பத்திரிக்கைகளை, எந்த டிவியை பயன்படுத்தினாரோ அவை அனைத்தும் இன்று அவருக்கு எதிராக அல்லாஹ் திருப்பி விட்டான். தற்போது உணர்வு இதழ் மட்டும் உள்ளது. அதுவும் இன்ஷா அல்லாஹ் அவருக்கு எதிராக திரும்பும். முஸ்லிம் மீடியா டிரஸ்டின் சார்பாக வெளிவரும் உணர்வு இதழின் டிரஸ்டிகளில் பெரும்பான்மையானவர்கள் PJவுக்கு எதிராக உள்ளதால் இன்ஷா அல்லாஹ் உணர்வும் அவருக்கு எதிராக திரும்பும். அல்லாஹ்வின் வாக்கு பொய்ப்பதில்லை.

‘மேலும் அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மிகச் சிறந்தவன். 3:54

நான் எந்தக் கட்சியிலும் இயக்கத்திலும் உறுப்பினராக இல்லை. தமுமுகவின் சமுதாய மார்க்க, மனிதநேய பணிகளை, போராட்டங்களை கண்டு அவர்களை ஆதரிக்கின்றேன். முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிம் தலைமையில் இயக்கம் தேவை மற்றவர்களை நம்பி ஏமாந்தது போதும் நமது உரிமைகளை நாமே பெறுவோம். அதிகாரத்தை நாமும் கையில் எடுப்போம். நேர் வழியில் நீதி வழியில் செல்வோம். மமக தனித்து தேர்தலில் நிற்பதுதான் முதல் வெற்றி. இனி, இன்ஷா அல்லாஹ் வெற்றிகள் தொடரும்.


முஹம்மத் காமில் - 9884728520


குறிப்பு :
1) தமுமுக, மமக தொண்டர்கள் அதிக அளவில் முஸ்லிம்கள் ஓட்டுபோட உழைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அது பெரும் வெற்றியாக மாறும்.
2) PJ மேடையில் திமுக வேட்பாளர்கள் இருக்கும் போட்டோக்களை முஸ்லிம்களிடம் காட்டி முஸ்லிம்களுக்கு உண்மை நிலையை உணர்த்துங்கள்
3) இப்பிரசுரத்தை நகல் எடுத்து மக்களுக்கு வழங்கவும்.

Wednesday, May 6, 2009

மனிதநேய மக்கள் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய ப.சிதம்பரம்




மே 05,2009,
சிவகங்கை : மனிதநேய மக்கள் கட்சியினரிடம் காங்., வேட்பாளர் ப.சிதம்பரம் ஆதரவு திரட்டினார்.சிவகங்கையில் அக்கட்சி அலுவலகத்திற்கு சென்ற ப.சிதம்பரம், நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.



அவர் பேசுகையில், 'யார், யாரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. இறுதி சுற்றில் காங்.,-பா.ஜ., கட்சிகள் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை தொகுதியில் மதவாதத்திற்கு இடமில்லை. மதசார்பற்ற அரசு அமைப்பதில் தடுமாற்றம் ஏற்படுவது வேறு, மாத வெறி அரசு அமைப்பது வேறு. மதசார்பற்ற அரசு அமைப்பதில் காங்., தடுமாறுவது இல்லை. இக்கொள்கையில் உறுதியாக, பிடிவாதமாக இருக்கிறோம். நான் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன். அந்த கூண்டில் என்றும் அடைபட மாட்டேன். த.மு.மு.க., வோடு நெருங்கிய நட்பில் இருந்து வருகிறோம். இளையான்குடி பகுதியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்கியதன் மூலம் இந்த நட்பு தொடர்கிறது. நட்பு வலுப்பட சிறுபான்மையினர் எங்களை ஆதரிக்க வேண்டும்' என்றார்.செயலாளர் முகமது நயீப், நகர செயலாளர் அபுல்கலாம் ஆசாத், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், த.மு.மு.க., நகர் செயலாளர் இப்ராகிம் பங்கேற்றனர்.

Tuesday, May 5, 2009

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?



இந்த நோட்டீஸில் கூறியபடி, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (அதிரை கிளை) கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை;


என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?



இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !

அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!


என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?




தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:




இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.



//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress






தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?


தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?



இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?


தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?




கடைசி செய்தி:

தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!

ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!

சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!


மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!

அதிரை POST

Sunday, May 3, 2009

தேர்தல் அறிக்கை குறித்து ஜவஹிருல்லாஹ் கூறியது...


மத்திய, மாநில அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான பட்டியல் சரி செய்யப்பட வலியுறுத்தப்படும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை உடனடியாக லோக்சபாவில் தாக்கல் செய்வதற்கும், அதன் பரிந்துரைப்படி சிறுப்பான்மையினருக்கான 15 சதவீதம் ஒதுக்கீடும், அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கென 10 சதவீதம் ஒதுக்கீடு முழு அளவில் அமல்படுத்த ஆவண செய்வோம்.பொதுத்துறை வேலை வாய்ப்பு, உயர்கல்வி, சமூக முன்னேற்றத்துக்கான நலன் ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்துவோம். மத்திய, மாநில அரசு திட்டங்களில் ,முஸ்லீம்களுக்கு துணைத் திட்டங்களை ஏற்படுத்தவும் அத்தகைய துணைத் திட்டங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு சமமான நிதியை ஒதுக்க வேண்டும்.


சிறுபான்மையினர் பெருவாரியாக வசிக்கும் இடங்களில் பள்ளி கூடம் அமைக்க 20 சதவீதம் சர்வ சிக்ஷா அபியான் நிதியை ஒதுக்கீடு செய்யவும், முஸ்லீம் சமூகம் கல்வியில் பின் தங்கியிருப்பதை முடிவுக்கு கொண்டு வரவும் வலியுறுத்துவோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு செலவிடப்பட வலியுறுத்துவோம்.அனைத்து மாநில பாடநூல்களில் இருந்தும் வகுப்பு வாதத்தைத் தூண்டும் கருத்துகளை நீக்கி மாணவர்களிடையே மதச்சார்பற்ற மனித நேய கொள்கைகளை வளர்க்கும் வகையில் பாடத்திட்டங்களை வகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் வரை சமூகநீதி பேணப்பட வேண்டும்மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பெயரில் கொண்டு வரும் கொடுஞ்சட்டங்களை ரத்து செய்ய ஆவன செய்வோம்.மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாட்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் ரயில் இன்ஜின் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதற்கு வாக்காளர் ஓட்டளித்து அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ஜவஹிருல்லா கூறினார்.


பேட்டியின் போது, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலர் தமீம்அன்சாரி, அமைப்பு செயலர் ஜெய்னுலாபுதீன், மாநில துணைச் செயலர் ஹாஜாகனி உட்பட பலர் உடனிருந்தனர்.

பாஜக‌வின‌ர் எ‌ன்னை தவறாக வ‌ழிநட‌த்‌தின‌ர்-க‌ல்யா‌ண் ‌சி‌ங்



பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு ‌விவகார‌த்‌தி‌ல் எ‌ன்னை பாஜக‌வின‌ர் தவறாக வ‌ழிநட‌த்‌தி‌வி‌ட்டன‌ர் எ‌ன்று க‌ல்யாண‌் ‌சி‌ங் கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா அரசின் முதலமை‌ச்சராக கல்யாண்சிங் இருந்தார்.

தற்போது, அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி, முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி‌யி‌ல் சே‌ர்‌ந்து‌ள்ளா‌ர். ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் சமா‌ஜ்வாடி க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் உ‌த்‌திர‌ப்‌பிரதேச மா‌நில‌ம் இ‌ட்டா தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், பு‌ல‌ந்ஷாக‌ரி‌ல் நடைபெ‌ற்ற ‌பிர‌ச்சார பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல், முலாயம் சிங் யாதவு‌ம், கல்யாண்சிங்கும் கலந்து கொண்டு பேசினர்.

கூ‌ட்டத‌்‌‌தி‌ல் பே‌சிய க‌ல்யா‌ண் ‌சி‌ங், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கரசேவை நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட புராதன சின்னமான பாபர் மசூதிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பெயர்சொல்ல விரும்பாத 2 பா.ஜனதா தலைவர்கள் என்னை தவறாக வழி நடத்தினார்கள். இதன் காரணமாக தான் பாபர்மசூதி ஏற்கனவே திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை புரிந்து கொண்ட முஸ்லிம்கள் தற்போது என்னை ஏற்றுக்கொண்டு விட்டன‌‌ர் எ‌ன்று கூ‌றினா‌ர்

முகவையில் முத்தெடுப்பது யார்?





தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களான ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி போன்ற வற்றை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், ராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி, மானாமதுரை, அருப்புக் கோட்டை, முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
.
தொகுதி மறுவரையறையில் கடலாடி சட்டமன்ற தொகுதி ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது அந்த தொகுதிக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சுழி தொகுதி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை இந்த மக்களவை தொகுதியிலிருந்து நீக்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதே போல மானாமதுரை தொகுதி விலக்கப்பட்டு, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்டிருந்த திருவாடானை, ராமநாதபுரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த 6 தொகுதிகளும் சேர்ந்த ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 31 ஆயிரத்து 739 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 923 பேர். பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 72 ஆயிரத்து 816 பேர்.
ஆண் வாக்காளர்களை விட சுமார் 24 ஆயிரம் பெண் வாக்காளர்கள் இந்த தொகுதியில் அதிகமாக உள்ளனர்.



வேட்பாளர்களை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகர் ரித்தீஷ் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். பிஜேபி தேசிய செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் பிஜேபியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேமுதிக சார்பில் சிங்கை ஜின்னா களத்தில் உள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சலீமுல்லா கான் போட்டியிடுகிறார். பொதுவாக அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் இந்த தொகுதியில் தற்போது பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி உள்ளது.

பிஜேபி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் இந்த தொகுதியில் போட்டியிடுவது என தேர்தலுக்கு முன்பே முடிவானதால் அவர் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்னதாகவே தனது பிரச்சாரத்தை துவக்கி விட்டார். தொகுதியில் உள்ள கிராமங்கள் பலவற்றிலும் திருநாவுக்கரசர் நேரடியாக சென்று அந்தந்த ஊர் மக்களை சந்தித்து பேசி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால், அவரது பிரச்சாரம் சற்றே தூக்கலாக தொகுதி முழுவதும் காணப்படுகிறது.

நாடறிந்த பிரமுகர் என்பதும், நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் என்பதாலும் திருநாவுக் கரசரின் பிரச்சாரம் மக்களிடையே எடுபடுகிறது. திருநாவுக்கரசரின் சொந்த தொகுதியான அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தற்போது சேர்ந்துள்ள தால் அது திருநாவுக்கரசருக்கு கூடுதல் பலமாக காணப்படுகிறது. வரும் 7-ந் தேதி அத்வானி பிரச்சாரம் செய்யவிருப்பது அக் கட்சியின ரிடையே தெம்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக கட்சியினர் சுற்றி சுழன்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் பாமகவுக்கு அதிக அளவு செல்வாக்கு இல்லாத போதிலும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு என வாக்குகள் உள்ளதால் அது அதிமுகவின் பலமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சத்தியமூர்த்தி இந்த தொகுதியில் ஒருமுறை வெற்றி பெற்றிருப்பதும் அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. ஜெயலலிதா இந்த தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரம் கட்சியி னரிடையே ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் ஜே.கே.ரித்தீஷ் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதற்கு அடையாளமே இல்லாத நிலையே உள்ளது.

அதிமுகவின் கூட்டணி பலம்,அதன் தலைவர்களின் பிரச்சார பலம் ஓங்கி உள்ள நிலையில் திமுகவுக்கு என பிரச்சாரம் செய்ய பெரிய தலைவர்கள் யாரும் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜே.கே.ரித்தீஷûக்கு சீட் ஒதுக்கப்பட்டதில் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்ப தாகவும், அதன் காரணமாக பிரச்சாரத் தில் பெரும் சுணக்கமும் மந்த நிலை யும் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிகவின் சிங்கை ஜின்னா தொகுதியில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவார் என தெரிகிறது.
சேது சமுத்திர திட்டம், இலங்கை பிரச்சனை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இந்த தொகுதியின் வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பிரச்சனைகளாக உள்ளன. தற்போதைய நிலையில் அதிமுகவும், பிஜேபியும் பிரச்சாரத்தில் முந்தியுள்ளன என்றால் அது மிகையாகாது.

Friday, May 1, 2009

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்-நக்கீரன் நேர்காணல்


இன்றைய தமிழக அரசிய லில் வெகுஜன மக்களின் உணர்வு களை பிரதிபலிப்பதாக இல்லை. அதனால் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கவே “மனிதநேய மக்கள் கட்சி’ தோற்று விக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காக 1995-ல் துவக்கப்பட்ட த.மு.மு.க.வின் அர சியல் பிரிவாக “மனிதநேய மக்கள் கட்சி’யை உருவாக்கியிருக்கிறோம்.

த.மு.மு.க.வின் முழு முகவரி முஸ்லிம் சமூகத்திற்கானது என் றாலும் ம.ம.க.வை அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது. ம.ம.க.வை முஸ் லிம்களுக்காக மட்டுமல்ல… சிறுபான்மை யினர், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், பிற் படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என அனைத்து சமூக மக்களுக்கான ஓர் ஆரோக்கியமான அரசியல் கட்சியாக வார்த்தெடுக்கவிருக்கிறோம். அதனால்தான் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொறுப்புகளிலும் அனைத்து சமூக மக்களையும் கொண்டு வந்திருக்கிறோம். அந்த வகையில், முஸ்லிம்களின் பின்னணியில் இக்கட்சி உருவாக்கப்பட்டிருந்தாலும் அனைத்து மக்களுக்கான அரசியல்தளமாக ம.ம.க.வை விரிவுபடுத்துவதே முதல் நோக்கம்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியல் என்பது பெரியவர் காயிதே மில்லத் அவர்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்ததாகவே இருந்தது. பின்னாளில் தேசிய லீக் கட்சியையும் சார்ந்ததாக மாறிப்போனது. இதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்கிற முயற்சி எடுத்தவர் காயிதே மில்லத். இதற்காக 1967 சட்டமன்றத் தேர்தலின்போது பிராமண எதிர்ப்பாளராக இருந்த பேரறிஞர் அண்ணாவையும் பிராமணரான ராஜாஜியையும் ஓர் அணியில் கொண்டுவர மிகப்பெரிய கிரியா வூக்கியாக இருந்தவர் காயிதேமில்லத். இந்த அணி வெற்றிபெற தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.

இந்த வலிமைக்கேற்ப தி.மு.க. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தரப்படவில்லை. இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. அதன்பிறகு, முஸ்லிம் சமூகத்தின் மீது திராவிட கட்சிகள் சவாரி செய்வதில்தான் அக்கறை காட்டியதே தவிர முஸ்லிம் மக்களுக்கா அரசியல் அதிகாரத்தை தருவதற்கு விரும்பவில்லை. அதே மாதிரி திராவிட கட்சிகளின் இந்த கொள்கைக்கு ஆட்பட்டதுபோல முஸ்லிம் சமூக தலைவர் களும்கூட ஒரு சார்பு அரசியலையே தூக்கிப்பிடித்தனர். இதில் சுகம் கண்டன திராவிட கட்சிகள். இந்த சுகத்தினை இழந்துவிடாமல் இருக்க முஸ்லிம் கட்சி களை பலகீனப்படுத்துவதில் முனைப்பு காட்டின. காயிதேமில்லத் மறைவிற்குப் பிறகு திராவிட கட்சிகளுக்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஆம்… தனி சின்னத்தில் நின்று தனது அடையாளத்தை இழந்துவிடாமல் பாது காத்து வந்த முஸ்லிம் லீக், திராவிட கட்சிகளின் சின்னங்களில் நின்று வெற்றிபெற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு வந்தது. அதேசமயம், 10-க்கும் குறையாத சீட்டுகளை பெற்றுவந்த முஸ்லிம் கட்சிகள், 1 சீட் பெறுவதே தங்களுக்கான லட்சியம் என்பதுபோல தேய்ந்துவிட்டன. இதனால், அரசியலில் தங்களின் சுய முகவரியை இழக்க நேரிட்டது. அந்த சுய முகவரியை இன்றளவும் திராவிட கட்சிகளிடமிருந்து முஸ்லிம் கட்சிகளால் மீட்க முடியவில்லை. இதனால், வலிமையான சட்டங்களை இயற்ற வைக்கும் ஆற்றலையும் இழந்து நின்றது முஸ்லிம் சமூகம். உதாரணமாக… கடந்த காலங்களில் லீக்கிற்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை எப்போதோ பெற்றிருக்க முடியும். 1976-லேயே இந்த தனி இடஒதுக்கீட்டை கேரளாவில் பெற்றது லீக். காரணம் அங்கு தங்களின் தனித்தன்மையை இழக்காமல் தக்கவைத்துக் கொண்டதுதான். தனிச்சின்னத்தில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும் லீக் அங்கு இருப்பதால்தான் இதனை சாதிக்க முடிந்தது.



ஆனால், தமிழகத்தில்…? திராவிட கட்சிகளைச் சார்ந் தே நிற்கவேண்டிய சூழலை ஏற்றுக்கொண்டதால் வலிமையை இழந்தனர். கோரிக் கைகளையும் வலிமை யாக வலியுறுத்த முடியவில்லை. இந்தச் சூழலில்தான் 1995-ல் த.மு. மு.க.வை உருவாக்கினோம். மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தினோம். எங்களின் ஆரோக் கியமான கொள்கை வழித்தடங்களை ஏற்று முழுமையாக எங்கள் பக்கம் திரண்டனர் மக்கள். இடஒதுக்கீடு கோரிக்கைக்காக மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தொடர் மாநாடுகள், போராட்டங்கள், சாலை மறியல்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் என த.மு.மு.க.வின் சமூகப்பணி வலிமை அடைந்தது.

இந்த வலிமையைக் கண்டு பிரதான தமிழக அரசியல் கட்சிகள் உற்று நோக்கின. தி.மு.க. அரசுக்கு ஆதரவு தரவேண்டுமானால் கோரிக்கை பற்றிய கெடு விதித்தோம். த.மு.மு.க.வின் சக்தியை உணர்ந்து முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை தர முன்வந்து அறிவித்தார் கலைஞர்.

த.மு.மு.க. துவக்கப்பட்ட இந்த 14 வருடத்தில், முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடியதுபோல, சமூக மக்களின் அனைத்துப் பிரச்சனை களுக்காகவும் போராடியிருக்கிறோம். இதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் நாங்கள் பெற முடிந் திருக்கிறது.

இந்த வலிமையைக் கொண்டுதான் முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது, அனைத் துத் தரப்பு மக்களின் அரசியல் அதி காரங்களையும் வென்றெடுப்பதற்காக தேர்தல் அரசியலில் இறங்கியுள்ளோம். அரசியல்தளத்தில் நாங்கள் எதை சாதித்தோம் என கேட்டால் இரண்டு மாதமே ஆன கட்சியால் (ம.ம.க.) எந்த பதிலும் கூற முடியாது. ஆனால், எங்கள் கட்சியின் இன்றைய உறுப்பினர்கள் 1995 முதல் மக்கள் சேவையாற்றி வருபவர்கள் என்பதை மறந்துவிட க்கூடாது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணி 40 இடங்களில் வெற்றிபெற த.மு.மு.க.வின் பங்களிப்பு மிகப்பெரியது. அதேபோல 2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. அணியும் அ.தி.மு.க. அணியும் சம அளவில் மோதின. ஏராளமான தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றிபெற முடிந்ததற்கு எங்கள் கட்சியின் இன் றைய உறுப்பினர்கள் போர்க்கால உழைப்பு தான் காரணம் என்பதை ஊர் அறியும். அது கோபால புரத்துக்கும் புரியும்.

சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு எட்டாக்கனியாய் இருந்த போது, அடுக்கடுக்கான போராட்ட வடிவங்கள் மூலம் அதை தமிழகத்தில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

சுனாமிப் பேரலை தமிழகத்தைத் தாக்கியபோது, எமது கட்சியின் இன்றைய உறுப்பினர்கள்தான் மனித நேயத்தோடு சேவையாற்றினார்கள். அதிகாரிகள் யோசித்தபோதும் அழுகிய உடல்களைத் தூக்க ராணுவம் யோசித்தபோதும் எமது உறுப்பினர்கள்தான் பிணங்களை, சாதி மத பேதமின்றி மார்பில் அணைத்து தூக்கி அடக்கம் செய்தனர்.

தமிழகத்தில் எமது உறுப்பினர்கள்தான் அதிகமான அளவில் ரத்ததான சேவைகளை அன்றாடம் வழங்குகிறார்கள். அனைத்துத்தரப்பு மக்களுக்காக, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழகம் முழுவதும் நடத்திவருவது நாங்கள் மட்டுமே! இப்படி மக்கள் நலன் சார்ந்த பணிகளை நிறைய பட்டியலிட முடியும்.

மக்கள்நல சேவையில் ம.ம.க.வினரின் பங்களிப்பு அதிகம் இருப்பினும் ம.ம.க.வின் வலிமை என்பது முஸ்லிம் சமூகத்தின் “வோட் பேங்க்’கை வைத்துதான் இருக்கிறது. அந்த வகையில், தமிழக மக்கள் தொகையில் 80 லட்சம் பேர் முஸ்லிம்கள். மத்திய சென்னை, மயிலாடுதுறை, வேலூர், ராமநாதபுரம், திருச்சி, பொள்ளாச்சி, தஞ்சை, அரக்கோணம், ஆரணி, தென்காசி ஆகிய 10 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்தான். முஸ்லிம் மக்களின் ஆதரவு 99 சதவீதம் எங்கள் பக்கம் இருப்பதை உணர்ந்துதான் குட்டி குட்டி முஸ்லிம் அமைப்புகளையெல்லாம்கூட தங்களுக்கு ஆதரவு தரச்சொல்லி அறிவாலயம் இழுத்துக்கொண்டு வருகிறது.

முதலில் 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஜெயலலிதாகூட, மத்திய சென்னையில் ம.ம.க. வேட்பாளராக ஹைதர்அலி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டதும் முஸ்லிம் சமூக ஆதரவு நமக்கு கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சத்தில் வேட் பாளரையே மாற்றினார். இவையெல்லாமே ம.ம.க.வுக்கு ஆதரவான மனநிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார் கள் என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.

ம.ம.க.வின் அரசியல் பணிகளில்

-தனிநபர் துதி பாடல் களும் கட்அவுட் கலாச்சாரங்களும் மலிந்து கிடக்கும் தமிழக அரசியலில் மாற்று அரசியலை முன்னிறுத்துவது முதன்மையான பணி. தலைவர்களை வளைய வந்தால் பதவிகள் கிடைக்கும், பணத்தை அள்ளி வீசினால் வேட் பாளராகிவிடலாம் என்பது இன்றைய அரசியலின் சாபக்கேடு. எல்லா தொண்டர்களும் தலைவர்கள், தலை வர்கள் எல்லாம் தொண்டர்கள் என்ற சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இன்றைய ஆடம்பர அரசியல் ஏழைகளை, ஏழ்மையில் வாடும் அறிவுஜீவிகளை ஒதுக்கி வைத் திருக்கிறது. அரசியல் பாரம்பரியம், மீடியா வெளிச்சம், பணபலம், ஜால்ரா கொள்கை இவற்றில் ஏதாவது ஒரு தகுதி இருப்பவர்கள்தான் அரசியலில் மேன்மையடைய முடியும் என்ற சூழல் வளர்ந்திருக்கிறது. அதைத் தகர்க்கும் பணியை தொடங்கியிருக்கிறோம். பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாக அறிவு, களப்பணி ஆர்வம்கொண்ட சாமானியர்களும் அரசியலில் உயர் பொறுப்புகள் பெறும் வகையில் எங்களது அரசியலை அமைத்திருக் கிறோம்.

கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியே செலவு செய்யும் என்பதை கொள்கையாக அறிவித்து அதனை அமல்படுத்தியிருப்பதும் நாங்கள்தான்.

இத்தகைய சிந்தனைகளும் அணுகுமுறைகளும்தான் எம்மை வெகு மக்கள் இயக்கமாக, எளிய மக்களின் தாய்வீடாக மாற்றியிருக்கிறது. ஆக வெகுமக்களின் உணர்வுகளையே பிரதிபலிக்கும் அரசியல் இயக்கமாக மாற்று அரசியலை முன்னிறுத்தி முதல் அடியை இந்தத் தேர்தல் மூலம் எடுத்து வைத்திருக்கிறோம். ஆரோக்கியமான அரசியலை வென்றெடுப்பதில் நிச்சயம் சாதிப்போம். தேர்தலின் முடிவுகள் மூலம் எமது மக்கள் இதனை நிரூபிப் பார்கள்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு


வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.

அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு
29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.

5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.