Wednesday, November 11, 2009

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org

Monday, October 5, 2009

விபச்சாரிகளுக்கு புர்கா அணிவித்து முஸ்லிம் பெண்களை இழிவு படுத்தும் காவல்துறையின் போக்கைக் கண்டித்து காவல்துறை ஆணையரிடம் தமுமுக மனு

(தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜா கனி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:)விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகின்ற புர்காவை அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன.

மேலும், விபச்சார வழக்கில் கைதாகும் கழிசடைப் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுக்கே உரிய கண்ணியமான புர்காவை அணிவித்து, அழைத்து வரும் கயமைத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது.இதனால் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கேலி செய்யப்படும் வாய்ப்பும் இதனால் உருவாகியுள்ளது. விபச்சாரிகளுக்கு புர்கா அணிவிக்கும் தரங்கெட்ட செயûலைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வருக்கும், தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமுமுக மாநிலச் செயலாளர் , பி.எஸ்.ஷாகுல் ஹமீத், வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.செய்யது அபூதாஹிர் ஆகியோர் தமுமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.

Sunday, October 4, 2009

பகுத்தறிவு இயக்கத்தினருடன் விவாதம்

இன்ஷா அல்லாஹ் சென்னையில் வருகின்றது 11-10-2009 மற்றும் 12-10-2009 ஆகிய தேதிகளில் பகுத்தறிவு இயக்கத்தினருடன் விவாதம் நடைபெற உள்ளது.விவாதத்தில் பங்கு பெற்று கேள்வி கேட்க விரும்புவோர்கள், மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் (+91 9952057222) அவர்களை தொடர்பு கொள்ளலாம்

இந்த விவாதம் குறித்து போஸ்டர்களில் இடம் பெற வேண்டடிய வாசகங்கள் பின்வருமாறு;தவ்ஹீத் ஜமாஅத்VSபகுத்தறிவு இயக்கத்தினர்மாபெரும் விவாதம்
இறைவன் இருக்கின்றானா?
உலகம் தானாக தோன்றியதா?
மனிதன் குரங்கிலிருந்து வந்தானா?
திருக்குர்ஆன் இறைவேதமா?
முஹம்மது நபி இறைதூதரா?
சொர்க்கம் நரகம் உண்டா?
விதி என்பது உண்மையா?
மூட நம்பிக்கை நிறைந்தது பகுத்தறிவு இயக்கமே!விவாதமும் குறுக்கு விசாரனையும்11, 12 அக்டோபர் 2009 இறைவன் நாடினால்!சென்னையில்..இவண் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இறை நம்பிக்கையாளர்களுக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் நடக்கும் இந்த விவாதத்தை இன்ஷா அல்லாஹ் நமது www.tntj.net இணைய தளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்ய இருக்கிறோம்.காணத்தவறாதீர்கள்.

போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு ஊர்வலம்: ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 500 பேர் கைது


கோவை: கோவையில், போலீஸ் தடையை மீறி சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த 500 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலனும் தடையை மீறி கைதானார்.
ஆயினும், முன்னறிவிப்பின்றி நான்கு இடங்களிலிருந்து கிளம்பிய ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்திவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 84ம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் அந்த அமைப்பினர் சீருடை அணிவகுப்பு நடத்துகின்றனர். கோவையிலும் அணிவகுப்பு நடத்த முன்அனுமதி கோரியிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தடையை மீறி அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, காந்திபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.


இந்நிலையில், நேற்று மாலை,கோவை - காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன், மாநில செயலர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் மாரிமுத்து, கோவை மாநகர தலைவர் ராமநாதன், பி.எம்.எஸ். அகில பாரத செயலர் ராஜகோபால் உள்ளிட்ட, 200க்கு மேற்பட்ட தொண்டர்கள் பிரார்த்தனைப் பாடலைப் பாடினர். அதன் பின், அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்றனர். ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்தனர். அதே நேரத்தில்,மற்ற இடங்களில் ஊர்வலம் நடத்த முயன்றவர்களும் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, ஐநூறு பேர் கைது செய்யப்பட்டனர்.

Friday, October 2, 2009

15 வயது மாணவியின் ஸ்கார்ப் சக மாணவிகளால் எரிப்பு

ஆஸ்திரியா:15 வயது மாணவி ஒருவர் தலையில் அணிந்திருந்த ஸ்கார்பிர்க்கு தீ வைத்த இரண்டு மாணவிகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.

இந்த இருவர் டயானா என்ற 15 வயது இஸ்லாமிய மாணவியை அவர்கள் பள்ளி பயணத்தின் போது தாக்கி அவர் அணிந்திருந்த ஸ்கார்பிர்க்கு தீ வைத்தனர். இவர்கள் Catholic charity Caritas என்ற வணிக தொழில் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்று வருபவர்கள்.

பள்ளியின் செய்தி தொடர்பாளர் Harald Schmied இது பற்றி கூறுகையில், இந்த தாக்குதலுக்கான காரணம் தனிப்பட்ட விரோதம் தான் என்றும் மத சம்பந்தப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை என்று கூறினார்.

Schmied மேலும் கூறுகையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அந்த இரண்டு மாணவிகளும் இனி இது போன்று அசம்பாவிதங்கள் ஏதும் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எழுத்து மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

பல வித கலாச்சாரங்களை சார்ந்த மாணவிகள் பயிலும் இந்த கல்வி நிறுவனத்தில் மாணவிகள் ஒருவரோடு ஒருவர் நேசம் பாராட்டி நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள் என்றும், எதிர் பாராமல் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் இருட்டடிப்பு செய்யப்படாமல் ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காணப்படுகிறது என்று கூறினார்.

உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி


ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள்.

தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.
இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.

இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.

இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர்.
ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி.

அட ங்கோ… குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?
கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.
தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’,என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக தெரியக்கூடிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது . ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கே… இதுல யுகங்கள் தோறுமா?

ஒன்று நிச்சயம் இத்திரைப்படத்துறையன்றி எத் துறையானாலும் அதில் முஸ்லிம்கள் முழுமையாக கால்ப்பதிக்காதவரை இதுபோன்ற பாப்பான்கள் தொடர்ந்து ஆடத்தான் செய்வார்கள்.

ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள் முஸ்லிமாக மாறினர்

சவுதியில், ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில், முஸ்லிம்களாக மாறினர். சவுதியின், மெக்கா மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக, 450 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தை பல கோடி ரூபாய் ஒபந்தத்தில் சீன ரயில்வே கம்பெனி ஒன்று எடுத்துள்ளது.
இந்த கம்பெனியில் வேலை பார்த்த, 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில் முஸ்லிம்களாக மதம் மாறினர்.

இது குறித்து மெக்காவைச் சேர்ந்த அதிகாரி அப்துல் அசிஸ் அல்குதைரி கூறுகையில், "சீனர்கள் பணியாற்றிய பகுதியில், அவர்கள் மொழியில், இஸ்லாமிய புத்தகம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில், இந்த மதமாற்றம் நிகழ்ந்துள்ளது' என்றார்.ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றும், 5,000 சீன பணியாளர்கள் இடையே, இஸ்லாம் தொடர்பான தகவல்களை பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இலங்கையிலிருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு


இலங்கையிலிருந்து தமிழுலகிற்கு புதியதொரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வந்து சேர்ந்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸீன்னத்தில் முஹம்மதிய்யாவும், சர்வ தேச நூல் வெளியீட்டாகமான தாருஸ் ஸலாமும் இணைந்து இப்பணியைச் செய்துள்ளன.

இதுவரை தமிழில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தாலும் இலங்கையிலிருந்து வெளிவரும் முதல் தமிழ் மொழியாக்கம் என்ற அடிப்படையில் இது சிறப்புப் பெருகின்றது.


அத்துடன் இது தனிநபர் முயற்சியாக அல்லாமல் கூட்டு முயற்சியால் உருவான புது வரவு என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.


அன்ஸாருஸ் ஸின்னாவின் அறிஞர் குழுவான எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), எம்.ஜெ.எம். ரிஸ்வான் மதனி, எம்.எச்.எம். அஸ்பர் பலாஹி ஆகியோர் இதன் மொழியாக்கப் பணியில் ஈடுபட எம்.சி. அன்ஸார் ரியாதி, என்.பி. ஜூனைத் மதனி, எம்.எஸ்.எம். ரிஸ்வி மதனி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டுள்ளனர். அத்துடன் அன்ஸாரிஸ் ஸþன்னாவின் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம். அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் கண்கானிப்பின் கீழ் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.


அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் மதிப்புரையில் ''இம்மொழியாக்கத்தின் தமிழ்நடை எளிமையானதாகவும் அடைப்பு குறிகள் குறைவானதாகவும் இருப்பது இதன் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். அதேவேளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஸலபுஸ் ஸா­ஹீன் களது விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இம்மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழாக்க மற்றும் மேற்பார்வை குழுவினரின் முன்னுரையில் ''ஏற்கெனவே பல மொழி பெயர்ப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் திருக் குர்ஆனைத் தமிழில் தரும் பணியைச் செய்த அப்துல் ஹமீத் பாகவி (ரஹ்) அவர்களை இவ்வகையில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். இவருக்குப் பின்னரும் பலரும் இப்பணியைச் செய்துள்ளனர். அவர்கள் அனை வரையும் நன்றி யுடன் நாம் நிறைவு கூர்கின்றோம்'' எனக் குறிப் பிட்டுள்ளமை இக்குழுவின் பணிவையும் பண்பாட்டையும் பறை சாட்டுகின்றது.


கடந்த காலத்தில் பணியாற்றியவர்களையெல்லாம் குறைகூறி கேவலப் படுத்திவிட்டு தமது பணியைத் தூக்கி நிறுத்தும் தவறான போக்கு அவர்களிடம் தென்படாமை இஸ்லாமியப் பணியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.


அத்துடன் பலர் பங்கு கொண்ட பணி என்றாலும் இதில் தவறுகளும் குறை களும் இடம் பெற வாய்ப்பு உள்ளமையை நிச்சயமாக நாம் மறுக்க மாட்டோம். எனவே, எமது தமிழாக்கத்தில் குறைகளை யும், தவறுகளையும் காணும் வாசகர்கள் அவற்றைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளப் பெரிதும் உதவியாக அமையும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்'' என்று குறிப்பிட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.


அழகிய வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தமிழாக்கத்தின் இலங்கை தவிர்த்த ஏனைய நாடுகளுக்கு பதிப்புரிமையை சவூதியை தலைமையகமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவை சார்பாக சென்னையில் ரமலானில் நடைபெறும் தொடர் சொற்பொழிவில் பங்குக் கொள்ள சென்னை வந்திருந்த குழுவைச் சேர்ந்த மவ்லவி இஸ்மாயில் சலபி, தமுமுக தலைவருக்கு அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸீன்னத்துல் முஹம்மதிஸ் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதி ஒன்றை வழங்கினார். தாருஸ்ஸலாம் வெளியீட்டு உரிமையை தன்னுடைமையாக்கியுள்ளது.


இந்த புதிய வரவு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நிச்சயமாக இது நல்ல வரவேற்பையும் பெறும் எனக் கட்டியம் கூறலாம்.

Sunday, September 27, 2009

ஹஜ் பயணிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஹஜ் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி உதவியுடன் 2 நாட்கள் நடக்கிறது.
ஹஜ் பயணத்தின் போது சவுதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழி முறைகள், ஹஜ் குழு, ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரக ஏற்பாடுகள் பற்றி முகாமில் விளக்கப்படும்.

28ம் தேதி திங்கள் உருது மொழியில் சென்னை சூளை சட்டண்ண நாயக்கன் தெருவில் உள்ள ஆனைக்கார் மெட்ரிக்குலேஷன் பள்ளி கலையரங்கிலும் 29ம் தேதி தமிழில் சூளை டிமெல்லோஸ் சாலையில் உள்ள ஹஜ் ஹவுசிலும் பயிற்சி முகாம் நடைபெறும்.

இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் மறுவாழ்வு நிதி விண்ணப்பிக்க அழைப்பு

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் இழப்பீடு கோரியும், முதல்முறையாக சிறு குற்றம் செய்து தண்டனைக்கு உள்ளான சிறுபான்மையினர் மறுவாழ்வு நிதி கோரியும் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், உடல் உழைப்பு இயலாத நிலையிலோ, பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலோ இருக்க வேண்டும்.
உடல்ரீதியான பாதிப்பு குறித்து அரசு மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழும், பொருளாதார ரீதியான பாதிப்பு குறித்து வட்டாட்சியரிடமும் வருமானச் சான்றிதழும் பெற வேண்டும்.

மறுவாழ்வு நிதி கோர, தண்டனை பெற்றவர் ஆண்டு வருமானம் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு ரூ. 38 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் வசிப்போருக்கு ரூ. 24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இழப்பீடு கோருவோர், இழப்பின் அளவு குறித்து சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.

Thanks fr கலீல் பாகவீ

வருகிறது மத்திய அரசின் மதரஸா நலவாரியம்







தேவை - இஸ்லாமியக் குற்றவியல் சட்டம்...!




திருவண்ணாமலையில் தீபாவளி விற்ப்பனைக்கு வைத்திருந்த பட்டாசு வெடித்து வீடு தரைமட்டம், 13 பேர் பலி


தரைமட்டமான கட்டடம் மற்றும் மீட்ப்புப்பணியில் ஈடுபடும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த வீட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 3 அடுக்குகளை கொண்ட கட்டடம் நொறுங்கி தரைமட்டமானது. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்க்கப்பட்ட 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

திருவண்ணாமலை முகல் புறா தெருவைச் சேர்ந்தவர் பாபா பாய். ஜவுளி வியாபாரி. தனது சொந்த வீட்டின் தரை தளத்தில் வசித்து வருகிறார். இவ்ருக்கு 4 மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி இந்த வீட்டிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் 2 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்தனர்.
பாபா பாய் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்கி வைத்து விற்பனை செய்வாராம். அதே போல் இந்த ஆண்டும் 5லட்சம் ரூபாய்க்கு சிவகாசியிலிருந்து ஏராளமான தீபாவளி பட்டாசுகளை தன்னுடைய வீட்டில் வாங்கி வைத்து இருந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் பட்டாசுகளில் திடிரென தீப்பிடித்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் 3 மாடிகளும் இடிந்து விழுந்து அந்த கட்டிடமே தரைமட்டமானது. நகரமே அதிரும் வண்ணம் வெடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்து ஒடிவந்தனர். கட்டிடத்தில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
பொதுமக்களுடன் திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடிவிடிய நடந்த மீட்புபணியில் இன்று காலை வரை 13 உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 13 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளனர் .மேலும் 6 பேரை காணவில்லை. இடிபாடுகளுக்கிடையே இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விபத்தில் இறந்தவர்களின் விவரம்:
பாபாவின் மகன்கள் பரக்கத்(32)இஷ்ரத்(37),நூருல்லாஹ் மகன் ரியாஸ்(10),ஷாதிக்பாஷா(55),நிஷா(6)அப்ஷர்(6),அஷ்ரத்(11),அக்பர்(13),ஷாபிரா பானு(40),அலிமாபீவி(39),ஆசிப்(11) மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண முடியவில்லை.மற்ற உடல்களையும் மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
செல்போன் மூலமாக காப்பாற்ற அழைப்பு விடுத்தவர்...
இவ்விபத்தில் உயிரிழந்த ஷாதிக் உயிரிழப்பதற்கு முன்னால் தனது உறவினர் ஜமால் என்பவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். 10நிமிடத்துக்குப் பின் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இடிபாடுகளுக்கிடையே அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டும் சுமார் 12 மணியளவில் சடலமாகத்தான் மீட்க்கமுடிந்தது. சமையல் சிலிண்டரும் வெடித்தது....
வெடியுடன் சமையல் 3 சிலிண்டரும் வெடித்ததால் சேதம் அதிகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தால் திருவண்ணாமலை நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இவ்வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Wednesday, September 23, 2009

ஹலால் சான்றிதழ் இந்தியாவிலும்...


அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...நாங்கள் Halal India Pvt Ltd எனும் இந்திய அரசு அங்கீகாரம்பெற்ற ஓர்நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளோம்.


அது இந்தியாவில்தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள்,அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்குசட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.உலகின் பல நாடுகளில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமேமுஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர், ஹலால்சின்னம் பொறிக்கப்படாத பொருட்களைமுஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுகின்றனர் என்பதுநடைமுறையாகும்.


ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும்இந்திய£வில் இதற்கான விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.எனவே, இந்தியமுஸ்லிம்கள் தாம் உபயோகிப்பது ஹலால்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளஇயலாத சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்க்கும் விதமாகவே Halal India Pvt Ltdஎனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.இது இந்திய£வின் அனைத்து மாநிலங்களிலும் தலைசிறந்த முஸ்லிம் அறிஞர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களைக்கொண்ட நிறுவனமாகும்.


இந்திய£வின்பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதில்தகுதியானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகத்தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் Halal India Pvt Ltd வழங்கும் ஹலால்சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யவேண்டும் என்ற உறுதிமொழியையும் பெற்றுள்ளோம்.


இந்தசேவையில் நீங்களும் பங்கேற்கும் விதமாக நீங்கள் ஓர்பயனீட்டாளர்(consumer) என்ற உரிமையில் கடைகள், shopping centre களில்பிஸ்கட்,சாக்லேட், மென்பானங்கள் -cool drinks- போன்ற உணவுப்பொருட்கள்,இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றைவாங்கும்போது இதில் ஹலால் சின்னம் பொறிக்கப்படவில்லையே, நாங்கள் இதைஎப்படி உபயோகிக்க முடியும் என்பது போன்ற விழிப்புணர்வுக் கேள்விகளைக்கேட்பதன் வழியே அவை விரைவில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நீங்களும்துணைசெய்யலாம்.


எமது சேவைகள் குறித்த விபரங்களைத்தெரிந்து கொள்ளவும் தங்களது மேலானஆலோசனைகளை வழங்கவும் தொடர்புகொள்க.



மத நல்லிணக்கத்தின் அடையாளம்


ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் உத்தரவு


அரசு வேலை வாய்ப்பு


Tuesday, September 22, 2009

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்


சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன், மத பாரம்பரியப்படி கொண்டாடப்பட்டது.ஈத் உல் பிதர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ஒரு மாத கால ரமதான் மாத நோண்பை முடித்து இன்று ரம்ஜானைக் கொண்டாடினர்.நாடு முழுவதும் காலையில் சிறப்பு ரம்ஜான் தொழுகை நிகழ்ச்சிகள் நடந்தன.
டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் கூடி தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.புத்தாடை அணிந்தும், இனிப்புகளைப் பரிமாறியும் பண்டிகையை கொண்டாடினர்.

தமிழகத்தில்...

தமிழத்திலும் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை தீவுத் திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்ட தொழுகை நிகழ்ச்சி நடந்தது. மெரீனா கடற்கரையிலும் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளிலும் நடந்த தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Friday, September 18, 2009

விடைபெறும் ரமலான்....

விடைபெறும் ரமலான்....
நன்மைகளை அள்ளித்தந்த புனித ரமலான் மாதம் நம்மைவிட்டு விடைபெறுகிறது. நாம் அலாஹ்வுக்காக பசித்திருந்து, உணர்வுகளை கட்டுப்படுத்தி, உள்ளங்களை ஓர்மைபடுத்தி, செயல்களை பக்குவப்படுத்தி, வணக்கவழிபாடுகளில் அதிகம் ஈடுபட்டு அவனது மன்னிப்பை பெற ஏங்கிய அந்த அருள் நிறைந்த ரமலான் நம்மை விட்டும் விடைபெறுகிறது. "ரமலானில் உம்ரா என்னுடன் ஹஜ் செய்தது போல்" என்ற நபிகளாரின் வார்த்தையை தாங்கி நின்று அந்த பெரும் பேற்றினை தந்த ரமலான் விடைபெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாம் "லைலத்துல்கத்ரை" தனதாக்கிய ரமலான் விடைபெறுகிறது. உலக வழிகாட்டி பொது மறையை பெற்றுத் தந்த ரமலான் விடைபெறுகிறது. இவ்வளவு மகிமைகளையும் தன்னகத்தே கொண்ட புனித ரமலானில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் வல்ல ரப்புல் ஆலமீன் ஏற்றுக்கொள்ளவும், நாம் ஏதேனும் தவறுகள் / பாவங்கள் செய்து இருந்தால் அதையும் அந்த வல்ல ரஹ்மான் மன்னித்தருளவும் அவனிடம் அழுது மன்றாடுவோம். நன்மைகள் பூத்துக்குலுங்கிய ரமலான் நம்மிடமிருந்து விடைபெற்றாலும் அது ஈன்ற அருள்மறை குர்ஆன் நம்மிடமுள்ளது. அதை பின்பற்றி அதனை தனது வாழ்வியலாக்கிக்கொண்ட அருமை நபியின் அடியொற்றி வாழ்ந்து அல்லாஹ்வின் அருள் பெறுவோம் அர்ரஹ்மானின் அர்ஷில் நிழல் பெறுவோம். பெருநாள் தர்மம் மேலும் ஸதக்கதுல்ஃபித்ரா என்ற நோன்புப்பெருநாள் தர்மத்தையும் நாம் மறக்காமல் கொடுக்க பனிக்கப்பட்டுள்ளோம். இன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை பெருநாள் தர்மத்தை கொடுக்க ஏவப்பட்டுள்ளார்கள்.
நோன்பு வைத்தவர் வீண் காரியங்களில் ஈடுபட்டதற்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டும் யார் அதை பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும், தொழுகைக்கு பிறகு நிறைவேற்றினால் சாதாரண தர்மமாக அமையும்" என்றும் நோன்புப்பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கடமையாக்கிவிட்டுச்சென்றுள்ளார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி), அபூதாவூது) அண்ணல் நபியின் அறிவுரைப்படி உரிய நேரத்தில் நோன்புப்பெருநாள் தர்மத்தைக்கொடுத்து ஏழைகள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் சிரிப்பில் நாம் இறைவனைக்காண்போம். இறைவேதம் மற்றும் நபி போதனையை மட்டுமே பின்பற்றி நடக்கும் நன் மக்களாக வாழ்ந்து நம்மை மரணிக்க செய்வானாக அந்த ரப்புல் ஆலமீன்.

THANKS லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

சிறுபான்மை மக்களோடு சிறந்தமுறையில் உறவை பேணுங்கள்:போலீஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு



புதுடெல்லி:சிறுபான்மைமக்களோடு சிறந்த முறையில் உறவை பேணவும், அவர்களுடைய நம்பிக்கையை பெறவும் தேவையான முயற்சிகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங் போலீஸ் அதிகாரிகளின் மாநாட்டில் பேசும்பொழுது உத்தரவிட்டுள்ளார்.


இஷ்ரத் ஜஹான் உட்பட பல அப்பாவி முஸ்லிம்கள் காவல்துறையினரால் கொடூரமான முறையில் போலி என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்ட சூழலில் முஸ்லிம்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள சூழலில்தான் பிரதமர் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார்.


சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெறும்வகையில் செயல்பட்டு அவர்களுடனான உறவை சிறந்த முறையில் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும் என்று பேசிய பிரதமர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், சமூகத்தில் பின் தங்கியுள்ளோர், முதிர்ந்த குடிமகன்கள், பெண்கள் ஆகியோர் காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்த முயற்சிக்கவேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

மக்கள் தொலைக்காட்சியில் பிளாக் அண்ட் ஒயிட் சார்பாக பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


Wednesday, September 16, 2009

வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்துவோம்சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு

செப்.17-வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை தேடி சிங்கப்பூர் வருவதை கட்டுப்படுத்துவோம் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்தார். அவர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-உலகப்பொருளாதார பின்னடைவு சிங்கப்பூர் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

சிங்கப்பூரின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 1.1 சதவீதமாக உள்ளது. 2004-ம் ஆண்டு இது 8.2 சதவீதமாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டம் மிக அதிக அளவுக்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் ஆண்டுதோறும் வேலை தேடி ஒரு லட்சம் பேர் சிங்கப்பூர் வருகிறார்கள். இப்போது சிங்கப்பூரில் மொத்தம் 10 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

மொத்தம் உள்ள மக்கள் தொகையான 48 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 35 சதவீதம் பேர் தற்காலிகமாக சிங்கப்பூரில் வசிப்பவர்களும், சிங்கப்பூரை சேராத ஆனால் இந்த நாட்டில் நிரந்தரமாக குடியேறி இருப்பவர்களும் ஆவார்கள்.இவ்வாறு அந்த நாட்டு பிரதமர் லீ சின் கூறினார்.

Tuesday, September 15, 2009

திருப்பூரில் அனைத்து இயக்கம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் 1500 பேர் கைது செய்யபட்டார்கள் !!












திருப்பூரில் 25-08-09 அன்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பள்ளிவாசல் மீதும் தொழுகைக்கு வந்த முஸலிம்கள் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை கண்டித்தும், இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும், வயதான முதியவாகளையும், இரவு நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்த காவல்துறையை கண்டித்து.
14 -09 -09 அன்று மாலை 3- 30 மணிக்கு திருப்புரில் மாநகராட்சி முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

இதில் த மு மு க, மனிதநேயமக்கள்கட்சி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமாக்கிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமிய ஜமாத், மக்கள் ஜனநாயக கட்சி,நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்,இந்த ஆர்பாடட்த்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதானல் அனைவருரையும் கைதி செய்து. திருமண மண்டபத்தில் வைக்கபட்டு பிறகு மாலை 7 மணிக்கு பிறகு அனைவரையும். விடுதலை செய்யபட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அனைத்து இஸ்லாமிய இயக்க ஜமாத் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த கூட்டத்தில் த மு மு க. திருப்பூர் மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு கோவையில் இருந்து த மு மு க மாவட்ட தலைவர் முஹம்மது பஷிர், செயலாளர் ரபிக், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் அப்பாஸ், கவிஞர் ஹக், இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், திருப்பூர் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஹைதர் அலி, ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தி : கோவை தங்கப்பா






Monday, September 14, 2009

அண்ணா பிறந்தநாள்-கோவை குண்டுவெடிப்பு கைதிகள் 9 பேர் விடுதலை










சென்னை: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிறைவு தினத்தையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேல்சிறைகளில் இருக்கும் 9 கைதிகளை தமிழக அரசு இன்றுவிடுதலைசெய்தது.

இந்த 9 பேரும் 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிசிறையில் இருந்தவர்கள் ஆவர். இவர்கள் அனுமதியின்றி குண்டுகள், ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் 307ன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு 13 ஆண்டுகள்சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களில் 9 பேர் இன்று காலை 7.30 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளனர். மற்ற ஒருவர் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் தொடர்ந்து சிறை யில் இருப்பார். இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார்.

விடுதலையானோர் விவரம்: முகம்மத் இப்ராகிம், அப்துல் ரகீம், அப்துல் பாரூக், அப்பாஸ், முகம்மத் ரபீ்க், அப்துல் ரவூப், அஷ்ரப், பக்ருதீன் அலி அகமமத் மற்றும் சாகுல் ஹமீத்.

Friday, September 11, 2009

ராகுல் காந்தி சுற்றுப்பயணம் காங்கிரஸ் தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?

கோவை செப் 18


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தரப்பினரையும் சந்தித்து தமிழக மக்களின் மன நிலையை அறிந்து சென்றுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக திருச்சி மற்றம் சிவகங்கை வந்த ராகுல் காந்தி, தன்னுடைய தந்தை ராஜீவைப் போன்றே தாமும் தமிழகத்தை நேசிப்பதாகவும் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவேன் என்றும் கூறிச் சென்றார். தன்னுடைய கவனம் முழுவதும் உத்திரப் பிரதேசத்திலேயே இருந்ததாகவும் இனி தமிழகத்தின் பக்கமும் தன் கவனத்தைச் செலுத்துவேன் என்றும் அவர் கூறியிருந்தார். கூறியவாறே அவரின் தமிழக சுற்றுப் பயணமும் அமைந்தது.

இந்தியாவிலேயே காங்கிரசுக்கு அதிக கோஷ்டிகள் உள்ள மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு உண்டு. 5 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் தலைவராக நீடித்திருப்பதே பெரும் சாதனை என்ற அளவிலேயே தமிழகத் தலைமை இருந்து வருகிறது. மூப்பனார், வாழப்பாடி இராமமூர்த்தி, குமரி அனந்தன், திண்டிவனம் இராமமூர்த்தி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இரா. அன்பரசு, ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு என கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் தலைவர்களாக நியமனம் பெற்றவுடன் தமக்கு முன் இருந்தவர்களின் விசுவாசிகளை கட்டம் கட்டுவது, தமது ஆதரவாளர்களை வளர்த்து விடுவது என கட்சியைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாக இருந்து வந்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீத ஆதரவு இருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களே. தமிழக இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசலில் வெறுப்புற்றிருப்பதால் இளைஞர்களிடையே கட்சிக்கு ஆதரவு இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியுடன் இளைஞர் காங்கிரஸையும் தன் பொறுப்பில் வைத்திருக்கும் ராகுல், இளைஞர்களை கட்சியில் இணைப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக சுற்றுப் பயணத்தின்போது கட்சியினரை மட்டுமின்றி, கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடி இருக்கிறார். இந்தக் கூட்டங்களில் அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் தமிழகத்தின் நிலையை அவர் புரிந்து கொண்டுள்ளதை உறுதி செய்கிறது.

இனி காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சித் தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். கிராம கமிட்டி தேர்ந்தெடுத்து அளிக்கும் வேட்பாளர்களையே கட்சித் தலைமை இறுதி செய்யும் என்று கூறியுள்ளார். இது படித்த இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ராகுல், நெல்லையில் பீடித் தொழிலாளர்களையும், தஞ்சையில் விவசாயிகளையும், வேலூர் மற்றும் சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாடியதையும் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள், ராகுல் தேர்ந்த அரசியல்வாதியாக ஆகிவிட்டதாகவே கருதுகின்றனர்.

நேரு குடும்பம் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அன்பு தற்போது ராகுல் வருகை மூலம் மீண்டும் உறுதி செய்யப்படுவதைப் போன்று, அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

சென்ற முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம், கூட்டணியின் முக்கியத் தலைவர் என்ற முறையில் முதல்வர் கருணாநிதியை சந்திப்பது என்பது வழக்கமாகி இருந்தது. பல தலைவர்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு போவதைவிட கருணாநிதியை சந்திப்பதை முக்கியமாகக் கருதினார்.

ஆனால் ராகுலோ முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது கூட அக்கட்சிக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளித்து, அகில இந்திய அளவில் பத்திரிக்கைகளில் வரும் என்பதை உணர்ந்து தான் சந்திப்பதை தவிர்த்து இருக்கிறார் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணக்கு.

பிற காங்கிரஸ் தலைவர்கள் போல் நாங்கள் ஆட்சியை பிடிப்போம், காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றெல்லாம் பேசாமல், ஏன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற அடிப்படையான கேள்விக்கு விடை காணும் விதமாகத் தான் அவருடைய பேட்டிகள், சுற்றுப் பயணங்கள், செயல்பாடுகள் அமைந்திருந்திருந்தது. இது அவர் கற்று வரும் அரசியல் பக்குவத்தைக் காட்டுகிறது.

ஆக, முக்கியத் தலைவர் தமிழகம் வந்தார் சென்றார் என்றில்லாமல், "இனி அடிக்கடி வருவேன்; எல்லோரும் செயல்படுவோம்" என்ற செய்தியை இச்சுற்றுப் பயணத்தின் மூலம் காங்கிரஸ் கோஷ்டிகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். ராகுலின் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டது தமிழக முக்கிய அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழக இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைக்க பரவலாக ஆங்காங்கே வித்துகளை ஊன்றிச் சென்றுள்ளார். தொடர்ந்து நீர் பாய்ச்சினால் வளர்ந்து செழிக்க வாய்ப்புண்டு. காங்கிரஸ் தமிழகத்தில் புத்துயிர் பெறுமா? என்பதை அடுத்த சில மாதங்களின் நிகழ்வுகள் நமக்கு உணர்த்திவிடும்.
கோவை தங்கப்பா

தாடி வளர்த்ததால் நீக்கப்பட்டமுஸ்லிம் மாணவரை மீண்டும் சேர்க்க வேண்டும்

புதுடெல்லி, செப்.12-மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள `நிர்மல் கான்வெண்ட்' பள்ளியில் 10-ம் வகுப்பில் படித்த மாணவர், முகமது சலீம். அவர் தாடி வளர்த்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோரைக் கொண்ட `பெஞ்ச்' முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாடி வளர்த்ததற்காக பள்ளியில் இருந்து முஸ்லிம் மாணவரை நீக்குவது என்றால், சீக்கிய மாணவர் தாடி வளர்த்தாலும் நீக்கப்படுவாரா? வருங்காலத்தில் சிவப்பான நிறத்தின் அடிப்படையில் கூட ஒரு மாணவரை நீக்கும் நிலை வருமா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பினார்கள்.மாணவர் முகமது சலீமை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவரின் மனு குறித்து பதில் அனுப்பவும் நோட்டீசு அனுப்பினார்கள். சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தற்போது 3-வது முறையாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

டெல்லி:வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் 5 மாணவிகள் பலி


டெல்லி: டெல்லியில் பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறிதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர்.
மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.டெல்லியில் கன மழை பெய்து வரும் நிலையில், கஜுரிகாஸ் என்னுமிடத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள இந்த பள்ளியின் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் தரையிலும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக வதந்தி பரவியது.இதையடுத்து முதல் மாடி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகள் பீதியடைந்து கீழே இறங்கினர். இந் நிலையில் கீழ் தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் மேலே ஏறினர். மிகக் குறுகலான அந்தப் படிக்கட்டுகள் வழியாக மாணவ-மாணவிகள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் முயற்சித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் பல மாணவ, மாணவிகள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பிற மாணவ, மாணவிகள் ஏறி மிதித்துக் கொண்டு ஓடியதில் 5 மாணவிகள் பலியாயினர். 12 வயதான அஃப்ரோஸை காணாமல் தேடி அலைந்த அவருடைய தாயார் ஷம்சாரி "எனது மகள் ரமலான் நோன்பு நோற்றிருந்தாள்.இனி அவள் நோன்பு திறக்க வரமாட்டாள்".என்று கூறி அழுதது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 26 பேர் மாணவிகள் ஆவர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்து ஆறுதல் கூறினார். மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு



துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.
இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.
முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார். இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன் மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச்சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதை நாமும் வாழ்த்துவோம்.

Thursday, September 10, 2009

துபாய் மெட்ரோ ரயில் ஓடத்துவங்கியது




துபாய்: 2800 கோடி செலவில் 4 வருடமாக நடைபெற்ற பணி பூர்த்தியான நிலையில் அரபு நாடுகளில் முதன்முதலாக ட்ரைவர் இல்லாத மெட்ரோ சர்வீஸ் நேற்று இரவு (செப்.09/09) துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பச்சைகொடி காண்பித்து துவங்கி வைத்தார்.

ஷேக் செய்யத் சாலையிலிலுள்ள மால் ஆஃப் எமிரேட்ஸில் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஷேஹ் முஹம்மது மெட்ரோ ரெயிலை பொதுமக்களுக்காக திறந்துக்கொடுத்தார்.

நாளை காலை முதல் பயணிகளுக்காக மெட்ரோவின் கதவுகள் திறக்கும். பணிகள் நிறைவடைந்த 10 ஸ்டேசன்களில் ரெயில் ஓடும். துபாய் சர்வதேச விமானநிலையத்தின் அருகிலிலுள்ள ராஷிதியா ஸ்டேஷனிலிருந்து ஜெபல் அலி வரையிலான ரெட்லைனிற்கு 52 கி.மீ நீளம். இந்தவழியில் 19 ஸ்டேசன்களின் பணி பிப்ரவரியில் முடிவடையும்.
மிட்சுபிஷிஹெவி இண்டஸ்ட்ரீஸ், ஒபயாஸி, கஜிமா கார்ப்பரேஷன், யாபி மார்க்கஸி, மிட்சுபிஸி ரெயில்வே உள்ளிட்ட உலகின் பிரபல 5 கம்பெனிகளும், 150 சிறிய கட்டுமான கம்பெனிகளும், 30 ஆயிரம் தொழிலாளர்களும் இணைந்து சாதனை வேகத்தில் துபாய் மெட்ரோவை பூர்த்தியாக்கியுள்ளனர்.
கிஸைஸ் முதல் துபாய் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ்களை சுற்றி ஜித்தாஃபில் முடிவடையும் கிரீன் லைன் மார்ச் மாதத்தில் பயணிகளுக்காக திறக்கப்படும். ஒரு மணிநேரத்தில் 6 ரெயில்களில் 3858 பயணிகளுக்கு தற்ப்போது பயணம் மேற்க்கொள்ளலாம். வி.ஐ.பி, சாதாரண நபர்கள், பெண்கள் குழந்தைகள் என 3 விதமான வகுப்புகள் துபாய் மெட்ரோவில் உள்ளது. தற்ப்போது 6 லட்சம் பேருக்கு தினமும் பயணம் செய்ய இயலும்.
2020 முதல் இது 18 லட்சமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் 17 சதவீதம் குறையுமென்றும் கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் 1.7 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுகிறது.

மெட்ரோ ரெயில் பயணத்திற்காக இந்தியர்கள் பலரும் பெருநாள் விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.

இந்த வருடம் 320 ஃபலஸ்தீன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்:இஸ்ரேல் மனித உரிமை அமைப்பு



ஜெருசலம்: இந்த வருடத்தில் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 1387 ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 320 பேர் 16 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் பிரபல இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான பைதுதுஸ்ஸாலோம் கண்டறிந்துள்ளது.
எதிர்த்துகூட போராடாத 773 சாதாரணமக்களை இஸ்ரேலிய ராணுவம் கொன்றுள்ளது. இந்த வருடம் 300க்கும் குறைவான சிவிலியன்கள்தான் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது. 16 வயதிற்கு கீழுள்ள 252 குழந்தைகள் கடந்த சில மாதங்களில் மட்டும் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 89 குழந்தைகள்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்பது இஸ்ரேல் கூறுகிறது.

யூத சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீன் முஸ்லிம் குழந்தைகளை குறிவைத்து தேடிப்பிடித்து கொல்கின்றார்கள் என்பதற்கான உதாரணம் இவை.111 பெண்களையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது, ஆனால் 48 பெண்கள்தான் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளிலும் பிரதேசங்களிலும் சென்று விசாரணை மேற்க்கொண்டே இந்த விபரங்களை இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு சேகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் சாதாரண மக்களை கொன்றொழிப்பதாகவும் ஏராளமான கட்ட்டங்களை தகர்த்திருப்பதாகவும் ஆதலால் இதைப்பற்றிய சுதந்திரமான நம்பிக்கையான விசாரணை மேற்க்கொள்ளப்படவேண்டும் என்றும் பைத்துஸ்ஸாலோம் கூறியுள்ளது. இஸ்ரேலிய அமைப்பின் இந்த அறிக்கைக்கு இதுவரை இஸ்ரேல் பதிலளிக்கவில்லை.


இதுவரை ஃபலஸ்தீனில் ஹமாஸ் போராளிகளைத்தான் நாங்கள் லட்சியமிட்டு தாக்குகிறோம் என்று கூறிவந்தது இஸ்ரேல் ஆனால் ஆம்னெஸ்டி உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகளும் இஸ்ரேல் கொல்வது சாதாரணமக்களைத்தான் என்ற உண்மையை வெளிப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் கிழக்கு ஜெருசலமில் யூதகுடியிருப்புகளின் கட்டுமானப்பணியை ஆரம்பித்துள்ளது.

Wednesday, September 9, 2009

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்



லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
எழுதியவர் மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)

1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி, அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
தமிழில்: அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.

பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ‘83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக.

thanks http://www.adiraipost.blogspot.com/

Monday, September 7, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு - கலைஞர் பங்கேற்கிறார்


அக்.4 சென்னையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு - கலைஞர் பங்கேற்கிறார்வரும் அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் சமூக நல்லிணக்க மாநாட்டை தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது.இம் மாநாட்டில் முதல்வர் கலைஞர் பங் கேற்று இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த மூன்று அறிஞர் பெரு மக்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறார்.கலைஞருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+ பக்கர், மாநிலச் செயலா ளர்கள் காயல் மகப+ப், கமுதி பஷீர், வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகி யோர் இன்று (6-09-09) ஞாயிறு காலை 9.45 மணிக்கு முதல்வர் கலை ஞரை அவரது கோபால புரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். தமிழ்நாட்டில் உலமாக் கள் பணியாளர் நல வாரி யம் அமைத்தற்காக நன்றி தெரிவித்தனர்.


அதற்கு முதல்வர் மகிழ்ச்சி தெரிவித் தார்.தமிழ்நாட்டிலுள்ள மதரஸாக்களில் பயில் கின்ற மாணவர்கள் அனை வருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனைப் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை அறிஞர் அண்ணா நூற் றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ் நாட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டு சிறைவாசம் அனு பவித்த மத மோதல், குண்டு வெடிப்பு, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் தண்டனை பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், 12 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை சிறைவாசியாக சிறையில் உள்ள குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 விசா ரணை சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்பு கொண்டி ருப்பதாகவும் அவர்களின் பதிலை எதிர்பார்ப்பதாக வும் முதல்வர் தெரிவித்தார்.


மத்திய அரசிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இக் கோரிக் கையை அவசியம் நிறை வேற்றித் தருமாறு முஸ்லிம் லீகினர் முதல்வரிடம் வலி யுறுத்தினர்.சிறைவாசிகளை விடு விக்கும் வேண்டுமென திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, பாரதீய ஜனதா கட்சி தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் கோரிக் கையாக வைத்துள்ளதை யும் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கருணை உள்ளத்தோடு இதனை பரிசீலித்து இக் கோரிக்கையை நிறை வேற்றித்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.சிராஜுல் மில்லத் பிறந்த நாள் சமூக நல்லிணக்க மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பிறந்த நாள் அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. இந்த நாளை சமூக நல்லிணக்க நாளாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அனுசரிக்கிறது.


இதனைத் தொடர்ந்து அந்நாளில் சமூக நல்லி ணக்க மாநாடு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத் தப்படுகிறது.சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த சான்றோர்கள் மூவரை தேர்வு செய்து அவர்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள் ளது.இம் மாநாட்டில் தமிழ் நாடு முதல்வர் கலைஞர் பங்கேற்று இந்த விருதை வழங்கி விழாப் பேரு ரையாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் இம் மாநாட்டில் பங்கு கொள்ள இசைவு தெரிவித்தார்.

மோடி அரசுக்கு விருது வழங்கக்கூடாது:அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தல்
















அமெரிக்காவிலிருந்து வெளிவரும் FDI(Foreing Direct Investement) என்ற‌ ப‌த்திரிகை இந்த‌ ஆண்டிற்கான‌ Asian Personality Award என்ற‌ விருதை குஜ‌ராத் மாநில‌ முத‌ல்வ‌ராக‌ இருக்கும் ந‌ரேந்திர‌ மோடிக்கு வ‌ழ‌ங்க‌ப்போவ‌தாக‌ அறிவித்த‌து.இந்த‌ அறிவிப்பு வெளியான‌வுட‌ன் கொதித்துப்போன‌ ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள் FDI ப‌த்திரிகைக்கு க‌டும் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌தோடு 2002 ஆம் ஆண்டு 20 ஆயிர‌ம் முஸ்லிம்க‌ளை ந‌ர‌ப‌லிக்கொடுத்த‌ ந‌ரேந்திர‌மோடிக்கு இந்த‌ விருதை வழங்கக்கூடாது என்று க‌டும் எதிர்ப்பை போராட்ட‌ங்க‌ளின் மூல‌ம் வெளிப்ப‌டுத்தின‌ர்.ம‌னித‌ உரிமை ஆர்வ‌ல‌ர்க‌ளின் க‌டும் எதிர்ப்பைத்தொட‌ர்ந்து விருது அறிவிப்பில் திருத்த‌ம் செய்த‌ FDI ப‌த்திரிகை இவ்விருதை குஜராத் மாநில‌ அர‌சுக்கு வ‌ழ‌ங்குவ‌தாக‌ அறிவித்துள்ள‌து.அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் FDI யின் இந்த அறிவிப்பை வரவேற்ற அதே வேளையில் குஜராத் அரசிற்கு FDI விருது வழங்க தீர்மானித்துள்ளதை திரும்பபெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

2002 ஆம் ஆண்டு மோடி தலைமையில் நடைபெற்ற அரச பயங்கரவாதத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தெருக்களில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இன அழித்தொழிப்பிற்கு இரையானார்கள்.சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முஸ்லிம்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்திய தேசம் சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை கண்டிராத இந்த கொடூரத்திற்கு முக்கிய சூத்திரதாரி நரேந்திரமோடி என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமான உண்மை.
கடந்த 7 வருடங்களாக இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியும் சட்டத்தையும் நீதித்துறையும் ஏமாற்றிவந்த மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் குஜராத் இனஅழித்தொழிப்பிற்கு காரணமான 64 நபர்கள் மற்றும் மோடியிடமும் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு(S.I.T) உத்தரவிட்டது. "மோடியின் கண்காணிப்பின் கீழில்தான் முஸ்லிம்களுக்கெதிரான கூட்டுப்படுகொலைகள் நிகழ்ந்தது.இவ்வளவு அக்கிரமங்கள் நிகழ்ந்தபிறகும் மோடி தொடர்ந்து குஜராத்தின் முதல்வராகத்தான் இருந்துவருகிறார். இந்நிலையில் விருதினை மோடிக்கு பதிலாக குஜராத் அரசிற்கு வழங்குவது என்பது ஹிட்லருக்கு பதிலாக நாசி இயக்கத்திற்கு விருது வழங்குவது போன்றதாகும்" என்று அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் ரஷீத் அஹ்மத் கூறுகிறார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "2002 குஜராத் இன அழித்தொழிப்பில் பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்னும் அகதிகள் முகாமில் அல்லலுற்று வருகின்றனர். இன அழித்தொழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கெதிரான வழக்கில் மோடி தலைமையிலான குஜராத் அரசு தொடர்ந்து பலத்தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்" .
2005 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு குஜராத்தில் மோடி தலைமையிலான பாசிச பயங்கரவாதிகள் நட்த்தைய முஸ்லிம் இன படுகொலைகளை காரணம் காட்டி நரேந்திரமோடிக்கு விசா தர மறுத்தது.சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல்வாதிகள் மத ரீதியான பாரபட்சத்தை கைவிடாவிட்டால் மீண்டும் 2002 இனப்படுகொலை திரும்பவும் நடப்பதற்கான ஆபத்து இருப்பதாகவும் இது இந்தியாவின் மத சகிப்புதன்மையற்ற நிலையை படம்பிடித்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளது.
ஐ.நா சபையால் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைப்பற்றிய அறிக்கையை தொகுத்தளிக்க நியமிக்கப்பட்டுள்ள அஸ்மா ஜஹாங்கீர் கூறுகையில் 2002 குஜராத் படுகொலைகளுக்குபின் தொடர்ந்து நடைபெற்றுவரும் கடும் விளைவுகளை முஸ்லிம் சமுதாயத்தைச்சார்ந்தவர்கள் தன்னிடம் பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கிறார். மோடி தலைமையிலான குஜராத் அரசு வெளிநாட்டு முதலீடுகளை கவருவதாக மீடியாக்களில் விளம்பரம் செய்யப்பட்டாலும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் டியொன்னே புன்ஷா மற்றும் தி மின்டின் ஸலீல் திருப்பதி ஆகிய பத்திரிகையாளர்கள் இது சம்பந்தமாக மேற்க்கொண்ட சுதந்திரமான ஆய்வறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால் குஜராத்தில் மோடி முதல்வராக பதவியேற்றபின்புதான் வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்திற்கு வருவதில் தொடர்ந்து சரிவை சந்தித்துவருவதாக குறிப்பிடுகின்றனர். இதனை அமெரிக்காவில் 10 கிளைகளைக்கொண்ட அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Sunday, September 6, 2009

அபுதாபி அய்மான் அமைப்பின் இப்தார்நிகழ்ச்சி

அபுதாபியில் இயங்கிவரும் அய்மான் அமைப்பு 06-09-2009 அன்று இப்தார் நிகழ்ச்சி அபுதாபி எலக்ட்ரா ரோடு செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது. அய்மான் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். அய்மான் கல்லூரி செயலாளர் சையது கே. ஜாபர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் 'நோபல்மெரைன் ' ஹமீது ஹாஜியார் , பனியாஸ் ஹமீது காக்கா, ஷார்ஜா சீமான் அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்ரு ஸஹாபாக்கள் பற்றிய நினைவுச் சொற்பொழிவை அய்மான் மார்க்கத்துறை செயலாளர் ஷர்புதீன் ஹஜ்ரத் நிகழ்த்தினார். அபுதாபியில் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழர்கள் கலந்து கொண்டனர். காயல் S.A.C ஹமீது நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல் : வி.களத்தூர் ஷா

Friday, September 4, 2009

பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டதால் ஈராக்கில் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறக்கும் குழுந்தைகள்


ஸ்கை நியுஸ் விடியோ

இராக்கின் பாலூஜா என்ற நகரில் பிறக்கும் குழந்தைகளில் பலர் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறப்பதாக ஸ்கை நியூஸ் நிறுவனம் காணொளி செய்தி (video news) வெளியிட்டுள்ளது.
அந்த பிஞ்சுக்குழந்தைகளை காணும் காட்சி பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. இதற்க்கு சரியான காரணம் என்ன என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லையென்றாலும், இராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களே காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.
அதிலும் பாஸ்பரஸ் குண்டுகள் தாம் இவ்வாறு குழந்தைகள் ஒழுங்கற்று பிறப்பதற்கு காணரம் என குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
சில குழந்தைகளுக்கு தலை மிகப்பெரியதாகவும், வயிறு மிகப்பெரியதாகவும், கரங்கள் ஒழுங்கின்றியும் இருப்பது உலகை உலுக்கியுள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் சில குழந்தைகள் சீக்கிரம் இறந்து விடுவதாகவும் இந்த செய்தி குறிப்பிடுகிறது.
இந்த பாலூஜா நகரில் தான் 2004ல் அதிகம் குண்டு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காணொளி செய்தி (Video News) சற்று மனதை பாதிப்பதாகவே உள்ளது,
ஆகவே குழந்தைகள் வயதானவர்கள் இதை பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.


உலகம் இனியாவது அமைதிப்பாதையில் செல்லுமா?…

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 3 பேர் விடுதலை!


கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் மூன்று பேர், நன்னடத்தை அடிப்படையில் தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில், பழனியைச் சேர்ந்த அப்துல் கரீம் (30), கோவை மானியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சர்தார் (31) ஆகியோர், தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த பாபு (30) 1ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
‘குண்டு வெடிப்பு வழக்கிற்காக, சிறப்பு கோர்ட்டில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த மூவரும், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்’ என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ஆந்திரப்பிரதேச முதல்வர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!சடலங்கள் மீட்க்கப்பட்டதாக தகவல்



முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதியில் பேரா கமாண்டர்கள் இறக்கி விடப்பட்டு அவர்கள் ஹெலிகாப்டரை நெருங்கினர்.

விபத்தில் மரணமடைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் தலைமை செயலர் சுப்பிரணமியன், தலைமை பாதுகாப்பு அலுவலவர் ஏ.எஸ்.சி., வெஸ்லி, பைலட் எஸ்.கே., பாட்டியா, துணை பைலட் எம்.எஸ்.ரெட்டி. ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேத பரிசோதனை செய்வதற்காக 5 பேரின் உடல்களும் இன்று மதியம் 2 மணிக்கு கர்னூல் கொண்டுவரப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிந்தததும் 5 பேரின் உடல்களும் மாலை 5 மணி அளவில் ஐதராபாத் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து ராஜசேகர ரெட்டியின் மரணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹைதராபாத் விரைந்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


முதல்வர் இறந்த செய்தியால் ஆந்திர மாநில மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆந்திர முதலமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ரெ‌ட்டி மரணம் : தமிழகத்தில் இன்று அரசு விடுமுறைஇது தொட‌ர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநில முதலமை‌ச்ச‌ர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு,


தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக இன்றுய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது'' எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.