குஜராத்தில் பயங்கரவாதி நரேந்திரமோடியின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையில், சுமார் 3000.முஸ்லிம்கள் கரிக்கட்டையானார்கள்.
முஸ்லீம் சகோதரிகளின் கற்புகள் சூறையாடப்பட்டது. முஸ்லிம்களுக்கு சொந்தமான பலகோடி ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் மோடியின் மிரட்டலால், குற்றவாளிகள் தப்பித்தாலும் நாளடைவில் மனிதநேயமிக்கவர்களின் முயற்சியால் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவது, அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் குஜராத் முஸ்லிம்களுக்கும், எம் சொந்தங்களின் நிலையை எண்ணி உள்ளத்தில் புழுங்கும் எம்போன்ற முஸ்லிம்களுக்கும் சட்டத்தின்மீதும், நீதியின் மீதும் சற்றே நம்பிக்கை பிறந்துள்ளது.
கடந்த 2002 .ல் காவி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையில்,பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக குஜராத் பெண் அமைச்சர் மாயாபென் மற்றும் வி.ஹெஜ்.பி தலைவர் ஜெய்தீப் பட்டேல் ஆகியோர்மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் மாயாபென் தலைமறைவானதோடு, தான் கைது ஆகாமல் தப்பிக்க முன்ஜாமீனும் பெற்று இருந்தார். இதற்கிடையில் அவரது முன்ஜாமீனை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதி வகேலா அவர்கள், ‘மத ரீதியான வன்முறை செயலகள் தீவிரவாத செயல்களுக்கு சமம்;இந்தியா ஒரு ஜனநாயக நாடு, எனவே இது போன்ற சம்பாவங்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் கூறினார்.
தனது ஜாமீன் ரத்தானதையடுத்து, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்த மாயாபென் மற்றும் ஜெய்தீப் படேல் ஆகியோர் சிறப்பு புலனாய்வு போலிஸ் அதிகாரிகள் முன் சரணடைந்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை போன்ற பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
அதிலும் குறிப்பாக ‘மோடியின் ஆசியோடுதான் இந்த முஸ்லீம் இனப்படுகொலையை நிகழ்த்தினோம்’ என்று தெஹல்கா பேட்டியில் ஒரு பயங்கரவாதி கூறியிருந்தான். எனவே, தெஹல்கா பேட்டியின் அடிப்படையில் மோடியையும் விசாரணைக்கு உட்படுத்தி நீதியை நிலைநாட்டினால்தான் பயங்கரவாதம் நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும்.
எம்மக்கள் கருகிவிட்டாலும், நீதி கருகாமல் காக்கப்படும் என்றே முஸ்லிம்கள் நம்புகிறோம். — 3/28/2009 12:13:00 AM அன்று நிழல்களும் நிஜங்களும் இல் முகவை எஸ்.அப்பாஸ் ஆல் இடுகையிடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment