லண்டன்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் லண்டனில் நடந்த யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) அமைப்பின் வட்ட மேசை அமர்வில் கலந்துக் கொண்டார்.கடந்த ஆண்டு மலேசியாவின் பினாங்கு நகரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.
இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகிறது.3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.இதில், இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை ஜவாஹருல்லா எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று இதில் தீர்மானிக்கப்பட்டது.
பிரிட்டன், மலேசியா , இந்தோனேசியா, பிரான்ஸ், டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.ஐ.நாவினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமின் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
மேலும் பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கும் ஜவாஹிருல்லா சென்றார்.இந் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன், ஜவாஹிருல்லாவை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கினார்.
நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் உடனிருந்தார்.இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகிறது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப் படிப்பும், டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
பின்னர் லீஸ்டரில் வாழும் தமிழக மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில ஜவாஹிருல்லா பங்கேற்றார்.இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக, இலங்கை நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும் லண்டன் இஸ்லாமிக் தாவா சென்டர் ஆண்டு விழாவில் பங்கேற்ற ஜவாஹிருல்லா இன்று லண்டன் கிரேடன் பள்ளிவாசலில் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.
ஜுன் 21ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் கருத்தரங்கில் பங்குக் கொள்கிறார்.
No comments:
Post a Comment