Friday, September 18, 2009

சிறுபான்மை மக்களோடு சிறந்தமுறையில் உறவை பேணுங்கள்:போலீஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு



புதுடெல்லி:சிறுபான்மைமக்களோடு சிறந்த முறையில் உறவை பேணவும், அவர்களுடைய நம்பிக்கையை பெறவும் தேவையான முயற்சிகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங் போலீஸ் அதிகாரிகளின் மாநாட்டில் பேசும்பொழுது உத்தரவிட்டுள்ளார்.


இஷ்ரத் ஜஹான் உட்பட பல அப்பாவி முஸ்லிம்கள் காவல்துறையினரால் கொடூரமான முறையில் போலி என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்ட சூழலில் முஸ்லிம்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள சூழலில்தான் பிரதமர் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார்.


சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெறும்வகையில் செயல்பட்டு அவர்களுடனான உறவை சிறந்த முறையில் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும் என்று பேசிய பிரதமர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், சமூகத்தில் பின் தங்கியுள்ளோர், முதிர்ந்த குடிமகன்கள், பெண்கள் ஆகியோர் காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்த முயற்சிக்கவேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

No comments:

Post a Comment