Friday, September 4, 2009

ஜித்தா இஃப்தார் நிகழ்ச்சியில் சவுதிக்கான இந்திய கன்சுலார்கள் பங்கேற்பு






















ஜித்தா: சவூதி அரேபியா. வருடந்தோறும் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' என்னும் 'நோன்பு திறக்கும் நிகழ்ச்சி' நடத்துவது வழக்கம். அதுபோல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திங்கட்கிழமை தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' நிகழ்ச்சி ஹோட்டல் இம்பாலாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.

வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, பேரித்தம் பழம், சமோசா , கட்லெட், பழ வகைகள், பழச்சாறு, மினரல் வாட்டர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹஜ் கன்சுலார் B. S. முபாரக் மற்றும் ஹஜ் துணை கன்சுலார் மூர்த்தி கலந்துக்கொண்டனர். கிராஅத்துக்குப்பின், ஜாஃபர் சாதிக் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரபல பேச்சாளர் “ஷேக் வஜ்டி அக்காரி” ரமலான் மாதத்தின் சிறப்புப்பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து ஹஜ் கன்சுலார் B.S முபாரக் மற்றும் கிரிட் அமைப்பின் தலைவர் O.P.R. குட்டி தஃபாரெஜ்-ஜித்தாவின் சமூக சேவையை பாராட்டி பேசினார்கள். சவூதி தமிழ்ச் சங்கத் தலைவர் அப்துல் மாலிக், மூன் தொலைக்காட்சி முதன்மை நிர்வாக அதிகாரி M. N. ஹசன், மற்றும் ஜித்தா தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து பரிமாறப்பட்டது. முன்னதாக அப்துல் சலாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, காசிம் ஷரிப் நன்றியுரை வழங்கினார்.

செய்தி - மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார்

No comments:

Post a Comment