Tuesday, September 22, 2009

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்


சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன், மத பாரம்பரியப்படி கொண்டாடப்பட்டது.ஈத் உல் பிதர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ஒரு மாத கால ரமதான் மாத நோண்பை முடித்து இன்று ரம்ஜானைக் கொண்டாடினர்.நாடு முழுவதும் காலையில் சிறப்பு ரம்ஜான் தொழுகை நிகழ்ச்சிகள் நடந்தன.
டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் கூடி தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.புத்தாடை அணிந்தும், இனிப்புகளைப் பரிமாறியும் பண்டிகையை கொண்டாடினர்.

தமிழகத்தில்...

தமிழத்திலும் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை தீவுத் திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்ட தொழுகை நிகழ்ச்சி நடந்தது. மெரீனா கடற்கரையிலும் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளிலும் நடந்த தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment