இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் இழப்பீடு கோரியும், முதல்முறையாக சிறு குற்றம் செய்து தண்டனைக்கு உள்ளான சிறுபான்மையினர் மறுவாழ்வு நிதி கோரியும் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், உடல் உழைப்பு இயலாத நிலையிலோ, பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலோ இருக்க வேண்டும்.
உடல்ரீதியான பாதிப்பு குறித்து அரசு மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழும், பொருளாதார ரீதியான பாதிப்பு குறித்து வட்டாட்சியரிடமும் வருமானச் சான்றிதழும் பெற வேண்டும்.
மறுவாழ்வு நிதி கோர, தண்டனை பெற்றவர் ஆண்டு வருமானம் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு ரூ. 38 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் வசிப்போருக்கு ரூ. 24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இழப்பீடு கோருவோர், இழப்பின் அளவு குறித்து சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.
Thanks fr கலீல் பாகவீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment