Tuesday, August 25, 2009

பூரண மது‌வில‌க்கு அமு‌ல்படு‌த்த கோ‌ரி த‌மிழக இல‌‌ட்‌சிய குடு‌‌‌ம்ப‌‌ம் உ‌ண்ணா‌விரத‌ம்


கோடி‌க்கண‌க்கான குடு‌ம்ப‌ங்களை ‌சீர‌ழி‌த்து, ப‌ல்வேறு சமூக, அர‌சிய‌ல் ‌‌சீர‌ழிவுகளு‌க்கு காரணமாக இரு‌க்கு‌ம் மது, போதை‌ப் பொரு‌ட்களை மு‌ற்‌றிலுமாக தடை செ‌ய்ய த‌மிழக அரசு மு‌ன்வர வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி நாம‌க்க‌ல் மா‌வ‌ட்ட இல‌‌ட்‌சிய குடு‌‌ம்ப‌ம் சா‌ர்‌பி‌ல் ஒரு நா‌ள் அடையாள உ‌ண்ணா‌விரத‌ம் இ‌ன்று மே‌ற்கொ‌‌ள்ள‌ப்ப‌ட்டது.

நாம‌க்க‌ல் மோகனூ‌ர் சாலை‌யி‌ல் உ‌ள்ள அரசு மரு‌த்துவமனை எ‌தி‌‌ரி‌ல் நடைபெ‌ற்ற உ‌ண்ணா‌விரத‌த்து‌க்கு நாம‌க்க‌ல் மா‌வ‌ட்ட இல‌‌ட்‌சிய குடு‌‌ம்ப‌‌த்‌தி‌ன் தலைவ‌ர் ரம‌ணி ராஜகோபா‌ல் தலைமை தா‌ங்‌‌கினா‌ர். மு‌ன்னா‌ள் ஊரா‌ட்‌சி‌ ம‌ன்ற துணை‌த் தலைவ‌ர் ‌பி.கே.‌விஜே‌ந்‌திர‌ன் வரவே‌ற்புரை ஆ‌ற்‌றினா‌ர்.

கா‌ந்‌தி ஆ‌சிரம‌ம் துணை‌த் தலைவ‌ர் எ‌ஸ்.ஆராவமுத‌ன், உ‌ண்ணா‌விர‌த‌த்தை தொட‌ங்‌கி வை‌த்து பே‌சினா‌ர். அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌‌ல், ''மது நா‌ட்டு‌க்கு, ‌‌வீ‌ட்டு‌க்கு, ‌உ‌யிரு‌க்கு‌க் கேடு எ‌ன்றா‌ல் அதனை அரசே ம‌க்களு‌க்கு ‌வி‌ற்பது அதை‌விட‌க் கேட‌ல்லவா'' எ‌ன்றா‌ர்.உ‌ண்ணா‌விரத‌த்தை ‌சி‌ற்‌பி. வேலாயுத‌ம், வழ‌க்க‌றிஞ‌ர் த‌ங்கவே‌ல் ஆ‌கியோ‌ர் வா‌ழ்‌த்‌தி பே‌சின‌ர். உ‌ண்ணா‌விரத‌த்தை வழ‌க்க‌றிஞ‌ர் எ‌‌ல்.ரா‌‌ஜி முடி‌த்து வை‌த்தா‌ர்.

No comments:

Post a Comment