Friday, August 7, 2009

குடியாத்தத்தில் இரயில்வே முன்பதிவு கணிணி மையம் அமைக்கப்படும் அப்துல் ரகுமான் எம்.பி. தகவல்


வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் கடந்த இரண்டு நாட்களாக வேலூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்து அப்துல் ரகுமான் எம்.பி. பேசுகையில், குடியாத்தம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான ரயில்வே முன்பதிவு கணிணி மையம் அமைக்க வேண்டுமென்பது. இப்பகுதி பொதுமக்களும், இந்த நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி கொண்டிருக்கும் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் குடியாத்தத்தில் ரயில்வே முன்பதிவு கணிணி மையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை என்னிடம் வைத்தார்கள்.

நான் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக குடியாத்தம் பகுதிக்கு வந்திருந்தபோது இப்பகுதிமக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பையும், ஆதரவையும் என்னால் என்றென்றும் மறக்க முடியாது. அதைப் போல தேர்தலில் என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். குடியாத்தம் பகுதி மக்களின் தேவைகளை உணர்ந்தவன் நான். எனவே தான் என்னுடைய பாராளுமன்ற கன்னிப் பேச்சில் நான் முதன் முதலாக பங்கெடுத்த மத்திய ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் குடியாத்தம் பகுதியில் ஒரு கணிணி முன்பதிவு மையம் அவசியம் வேண்டுமென்று வலியுறுத்தி பேசினேன்.

வெகு விரைவில் குடியாத்தம் பகுதியில் ரயில்வே முன்பதிவு கணிணி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அப்துல் ரகுமான் எம்.பி. பேசினார். விழாவில் பேராசிரியர் காதர், குடியாத்தம் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment