Thursday, August 13, 2009

முஸ்லிம் ஏழை மாணவிகள் 2 பேருக்கு இலவச கல்வி

முஸ்லிம் ஏழை மாணவிகள் 2 பேருக்கு இலவச கல்வி

ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அஸ்ஸலாம் அறக்கட் டளை நிர்வாக குழு முடி வின் படி அதிக மதிப்பெண்கள் பெற்றும் படிக்க வசதியில்லாத ஏழை மாணவ-மாணவிகளும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2 மாணவிகளுக்கு முதல் கட்டமாக, நிர்வாக ஒதுக்கீட்டில் இலவசமாக பொறியியல் கல்வி கற்க அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அஸ்ஸலாம் பொறியி யல் கல்லூரியின் தலைவர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம் மது இப்ராகிம், செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.எம்.ஷாஜகான், துணைத் தலைவர் ஜே.அன்வர் பாட்சா, இணைச் செயலாளர்கள் அ.சிராஜூதீன், ஓய்.சாதிக்பாட்சா, பொருளாளர் ஓ.முகம்மது உசேன் ஆகியோர் சோழபுரத்தை சேர்ந்த ஏழை மாணவி மின்காஜ் நிசா, பட்டவர்த்தியை சேர்ந்த ஆயிஷாபர்வீன் ஆகியோருக்கு இலவசமாக கல்வி கற்பதற்கான ஆணையை வழங்கினர்.

இது பற்றி நிர்வாக குழு வினர் கூறுகையில், மேலும் 3 மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடுகள் செய்து வருகி றோம். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் இலவச கல்வி அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். கம்ப்யூட் டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு கட்டணத்திலேயே நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திலும் சேர்ந்து பயன்பெறலாம்.

இவ்வாறு நிர்வாக குழு வினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment