Friday, August 28, 2009

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் இணையத்தளம் துவக்கம்










துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களது வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கான பிரத்யேக இணையத்தளம் http://www.jamalians.com/ துவக்க நிகழ்ச்சி 26.08.2009 புதன்கிழமை மாலை லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கலந்தர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் நமது கல்லூரியின் முன்னாள் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராகி பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார தேக்கநிலையினை நாம் மனதைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வருடத்திற்கு நான்கு முறையேனும் நடைபெற வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்தார்.

அபதுல் ஷுக்கூர் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வருடந்தோறும் கல்லூரியில் முன்னாள் மாணவர் தினமாக அனுசரித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதில் தனக்கும் இவ்விருது வழங்கியதை நினைவு கூர்ந்தார்.

வயதான நிலையிலும் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்ட நிகழ்வு தன்னை மெய்சிலிர்க்க வைத்த்து என்றார்.

நமது முன்னாள் மாணவர் என்ற முறையில் வேலூர் எம்.பி. எம். அப்துல் ரஹ்மான் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளை நினைவு கூர்ந்தார்.ஈடிஏ அஸ்கான் மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள http://www.jamalians.com/ என்ற இணையத்தளத்தினை துவக்கி வைத்தார். இதற்காக தங்களது பங்களிப்பினை நல்கிய ஃபரீஜ், ஜாபர் சித்தீக், அப்துல் ஷுக்கூர், இல்யாஸ், பதாவுல்லாஹ், மீரான், சுல்தான், ஜாவித் உள்ளிட்டோரைப் பாராட்டினார்.

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியது. வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் என மட்டுமல்லாது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற வகையில் எனது பணிகள் என்றும் தொடரும் என்றார். கல்லூரியின் வளர்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமாரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.

டெல்லி AICTE சேர்மனுடன் தனது சந்திப்பு மூலம் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் உள்ளிட்டவை குறித்தும் விவரித்தார். எந்த் நேரத்திலும் கல்லூரிக்கு தனது சேவை தொடரும் என்றார். மேலும் முன்னாள் மாணவர்களது உதவித்தொகையின் மூலம் பல ஏழை மாணவர்கள் உயர்கல்வியினை தடையில்லாது கற்று வருகின்றனர்.

இத்தகைய பணிகளுக்கு தொடர்ந்து உதவிட கேட்டுக் கொண்டார்.வேலூர் எம்.பியின் பதவியேற்பு நிகழ்ச்சி, பாராளுமன்ற கன்னிப்பேச்சு ஆகியவை ஒளிபரப்பப்பட்டது.கல்லூரி முன்னாள் மாணவர்கள் எம். அப்துல் கத்தீம்,எஸ்.எம். ஃபாரூக், ஹாமித், முத்து உள்ளிட்டோர் தங்களது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

ஜாபர் சித்திக் நன்றி கூறினார். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment