வேலூர் மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு கூட்டத்தில் அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு
உள்ளுர்க்காரர் - வெளி யூர்க்காரர் என்ற எத்தகைய வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பயன ளிக்கும் வகையில் சேவை யாற்றுவதையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்களும் நமக்கு அவ் வாறே வழிகாட்டித் தந் துள்ளார்கள். அந்த வகை யில் நானும் நாடாளு மன்ற உறுப்பினர் என்ற முறை யில் வேலூர் தொகுதி மக்க ளுக்கும் - நாட்டு வளர்ச் சிக்கும் சிறப்பான முறை யில் பணியாற்றுவேன் என்று வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தெரி வித்தார்.
வேலூர்தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் எம்.பி., அப்துல் ரஹ்மானுக்கு வேலூர் மாவட்ட அனைத்து அஹ்லுல் சுன்னத் ஜமாஅத் தார்கள் சார்பில் பாராட்டு கூட்டம் ஆம்பூர் பூவா ஷாதி மஹாலில் நேற்று (செவ்வாய்) மாலை நடை பெற்றது.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரை முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மாநிலத் தலைவருமான பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிவாசல் களின் நிர்வாகிகளும், ஜமாஅத் பிரமுகர்களும், சமுதாய தொழிலதிபர் களும் பெருமளவில் கலந்து கொண்டு வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானை வாழ்த்தியும், தொகுதி வளர்ச்சிக்காக அவர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கைகள் வைத்தும் உரையாற்றினார்.
இறுதியில் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு ரைக்கு ஏற்புரையாற்றும் வகையிலும் எம். அப்துல் ரஹ்மான் உரையாற்றினார்.
அப்போது அவர் குறிப் பிட்டதாவது-
இந்த இனிய நிகழ்ச்சி யில் உங்களையெல்லாம் சந்தித்து உரையாடவும், நன்றி தெரிவிக்கவும் வாய்ப் பினை ஏற்படுத்தித் தந்த எல்லாம் வல்ல இறைவ னுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றேன்.
தொடக்கத்தில் நான் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தி ருக்கலாம். ஆனால், இந்த தொகுதியின் வேட்பாள ராக நான் அறிவிக்கப் பட்ட நொடி முதல் நான் உங்களில் ஒருவனாக ஆகும் வகையில் தொகுதி யின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்து உங்களுடன் அறிமுகமாகிக் கொள்ளும் வாய்ப்பினை தந்து தேர்த லில் மாபெரும் வெற்றியை நல்கி இந்த தொகுதிக்கு பணியாற்றும் வாய்ப் பினைத் தந்து உங்களில் ஒருவனா கவே என்னை மாற்றிய எல்லாம் வல்ல இறைவனை நினைத்து நன்றி பாராட்டு கிறேன்.
என்னை வேட்பாளராக அறிவித்ததும் எனக்கு ஆதரவளித்து சமுதாய மக்கள் அனைவரையும் எனக்கு வாக்களிக்க செய் யும் வகையில் வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஜமாஅத்தார்களும் ஒன்று கூடி வேட்பாளர் கலந் துரையாடல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தீர்கள். அதேபோன்று இப்போது நான் வெற்றி பெற்றதை யடுத்து பாராட்டும் வகை யிலும தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன் வைக்கும் வகையிலும் அனைத்து ஜமாஅத்தார் களும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இங்கு பேசிய பலரும் மாவட் டத்துக்குட்பட்ட அனைத்து ஜமாஅத் தார்களும்இப்போதுதான் பல ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒன்று கூடியதாக குறிப்பிட்டார்கள்.
நோக்கம் எதுவாக இருந்தாலும் சமுதாய மக்கள் எல்லோரும், ஜமா அத்தார்கள் எல்லோரும் இப்படி ஒன்று கூடுவதற்கு நான் காரணமாகி உள் ளேன். வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப் பட்ட அப்துல் ரஹ்மானா கிய அறிவிக்கப்பட்ட என்னை வெற்றி பெறச் செய்வதற்காக நீங்கள் எல்லாம் ஒன்றுகூட நேரிட் டது என்பதை நினைத்துப் பார்க்கையில் இப்படி ஒரு பாக்கியத்தை எனக்கு அளித்த இறைவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவிக்க கடமைப்பட் டுள்ளேன்.
ஆரம்பத்தில் என்னை குறித்து அவ்வளவாக தெரி யாமல் இருந்திருந்தாலும் என்னை குறித்து விசாரித்து அறிந்து நான் எல்லோருக் கும் சேவையாற்றக் கூடிய வன். சாதி மத வேறுபாடு களுக்கு அப்பால் பொது சேவையாற்றி வருபவன். சமுதாய உணர்வுடன் நல்ல பல காரியங்களை செய்து வருபவன் என்பதையெல் லாம் அறிந்து கொண்டு உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சகோ தர சமுதாயத்தவர்களுக் கும் என்னை பற்றி எடுத்து ரைத்து எனக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து மாபெரும் வெற்றி பெறச் செய்து நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப் பேற்கச் செய்துள்ளீர்கள். இதற்காக உங்கள் ஒவ் வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயற் குழு கூட்டத்தை தொடர்ந்து வேலூர் தொகுதியின் வேட் பாளராக என்னை தலைவர் பேராசிரியர் காதர் மொகி தீன் அவர்கள் அறிவித் தார்கள். தொடர்ந்து தமிழக முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் அவர் களையும், தமிழக நிதி யமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாள ருமான பேராசிரியர் அன்பழகனார், தமிழக உள் ளாட்சித்துறை அமைச்சரும், கழக பொரு ளாளருமான தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்துக்களை பெற்று வேலூர் தொகுதியில் நான் கால் பதித்தது முதல் எனக்கு தொகுதியின் நிலவரங்களையெல்hம் எடுத்துக் கூறி தேர்தலை சந்திப்பது குறித்த வழி முறைகளை எடுத்து விளக்கி தி.மு.க.வினரையும், கூட்டணி கட்சியினரையும் ஒருங்கிணைத்து தேர்தல் வியூகங்களை அமைத்து மாபெரும் வெற்றியினை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் அண்ணன் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன். அவர் களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அண்ணன் துரைமுருகன் அவர்களுடனான எனது தொடர்பு தேர்தல் கால நட்பு அல்ல. நீண்ட கால நட்பாகும். நட்பை கடந்த உறவுமாகும். அவர்கள் வீட்டின் வரவேற்பையை யும் தாண்டி அடுப்பங் கரை வரை அழைத்துச் சென்று அவர்கள் கையா லேயே உணவு பரிமாறும் அளவுக்கு எனக்கு அவரது குடும்பத்தினரிடம் அன்பும், பாசமும், நெருக்க மும் உண்டு. எனக்காக மிகுந்த பிரயாசைப்பட்டு வெற்றியினை தேடித் தந்த அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமை கட்சியி னருக்கும் என்றும் நன்றி யுடையவனாக இருப்பேன் என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
என்னை வேட்பாளராக அறிவித்த போதும் சரி, இப்போது வெற்றி பெற்று இந்த தொகுதியின் நாடா ளுமன்ற உறுப்பின ராக பொறுப்பேற்றுள்ள நிலையிலும் சரி என்னை பற்றி ஒரு விமர்சனம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. நான் வெளியூர்க் காரன். நான் எப்படி இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்பதுதான் அது. நான் உங்கள் அனைவ ருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள் ளேன். நான் எப்பொழுது இந்த தொகுதியின் வேட் பாளராக அறிவிக்கப் பட்டேனோ அப்போதே இந்த தொகுதியின் ஒருவ னாக உங்களில் ஒருவனாக மனரீதியாக என்னை மாற்றிக் கொண்டுள்ளேன். நான் பிறப்பாக வெளியூரை சேர்ந்தவனாக இருந் தாலும் என் மீது நம பிக்கை வைத்து என்னை இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ராக ஆக்கிய உங்களின் நம்பிக்கைகளை - எதிர் பார்ப்புகளை என்னால் முடிந்த அளவில் நிச்சயம் நிறைவேற்றி தருவேன். நாடாளு மன்ற தொகுதி உறுப்பினர் என்ற பதவி எனது பொதுச் சேவைக் காக கூடுதல் தளம் தவிர வேறல்ல. நான் இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு தாய்ச்சபை ஊழியனாக இருந்தபடியே சாதி மதங் களை கடந்து உள்ளுர் - வெளியூர் என்ற வேறுபாடு களுக்கப்பால் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையி லான சேவைகளை செய்து வந்துள்ளேன் - செய்து கொண்டுதானிருக் கிறென்.
நான் அரசியல் பதவி களை கொண்டு எதையும் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இல்லை. இறை வன் எல்லா வகையிலும் என்னை சிறப்புள்ளவனா கவே ஆக்கியுள்ளான். வசதி வாய்ப்பிலும், செல்வத்தி லும் இறைவன் எனக்கு கிருபை செய்துள்ளான். அதன் மூலம் ஏராளமா னோருக்கு நான் உதவிக் கொண்டிருக்கிறேன். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறை யில் கூடுதலாக உதவும் வாய்ப்பினை பெற்றுள் ளேன்.
உள்ளூர் - வெளியூர் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோருக்கும் பயன் அளிக்கும் வகையில் சேவையாற்றுவதையே மார்க்கம் நமக்கு கற்றுத் தந்துள்ளது. அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந் திருந்தாலும் மதீனாவில் தான் ஆட்சிப் பொறுப் பினை ஏற்றார்கள். அன்ஸாரி சஹாபா பெரு மக்கள் அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களிடம் தாங் கள் எப்போதுமே எங்களு டன் மதீனாவிலேயே இருக்க வேண்டும். மக்கா விற்கு சென்றுவிடக் கூடாது என வாக்குறுதி கேட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கா, மதீனா என்றில்லாமல் உல கத்திற்கே பயனளிக்கும் வகையில் சேவையாற்றியுள் ளார்கள் நமக்கு வழி காட்டி தந்துள்ளார்கள்.
அதேபோன்று நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தனிப்பெரும் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் அவர்கள் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் பேட்டையில் பிறந்தவராக இருந்தாலும் கேரள மாநில தொகுதியிலிருந்து தான் நாடாளுமன்ற உறுப் பினராக தேர்வு செய்யப் பட்டு இந்திய மக்கள் அனைவருக்கும் பயனளிக் கும் சேவை புரிந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சுலைமான் சேட் அவர் களும், பனாத்வாலா அவர் களும் பிறந்த ஊர் வேறாக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஊர் வேறாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் வெற்றி பெற்ற தொகுதி மக்களின் எண்ணங்களை யும் - எதிர்பார்ப்புகளை யும் பூர்த்தி செய்ததுடன் நாட்டு மக்கள் அனைவருக் கும் சேவையாற்றினார்கள். தாய்ச்சபை தலைவர்கள் காட்டித்தந்த வழியில் எனது ஆசான் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்க ளின் ஆலோசனையின்படி நானும் இந்த தொகுதி மக்க ளின் எண்ணங்களுக்கு - எதிர்பார்ப்புகளுக்கு மதிப் பளித்து தொகுதி வளர்ச் சிக்கு பாடுபடுவேன். மேலும் நாட்டு மக்கள் அனை வருக்கும் சேவை யாற்றும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்வேன்.
இவ்வாறு அப்துல் ரஹ்மான் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment