Wednesday, April 22, 2009

முஸ்லிம்களுக்கெதிரான பீஜேயின் பயணம்

தமிழகத்தில் தவ்ஹீத் சிந்தனைகளை மிக எளிதாக மக்கள் மனதில் பதிய வைத்தவர்களில் பிஜேயின் பங்கு அபரிதமானது. ஆனால் சில ஆண்டுகளாக அவரின் போக்கு முஸ்லிம்களுக்கு குறிப்பாக தவ்ஹீத் சிந்தனையாளர்களுக்கு கவலையும் அதிருப்தியும் கொள்ளச் செய்கிறது.

என்ன காரணத்திற்காக தமுமுகவிடமிருந்து பிரிந்து சென்றாரோ அதை நூறு சதவீதம் தலைகீழ் மாற்றி தன்னுடைய குடும்ப கட்சியை போன்றே ஆக்கிக்கொணடார் ததஜ வை.

முற்கால தமிழ் சங்க இலக்கியங்களில், வரலாற்றுச் சம்பவங்களில் வருவதைப்போன்றே, சில தவ்ஹீத் வாதிகளின் மதகுருமாரைப் போன்றே ஆகிவிட்டார். அவருடைய எல்லா செயல்களையும் "ஆஹாரம்" செய்ய சிலர் உருவாகிவிட்டனர். மூடநம்பிக்கைக் கொண்டு தாயத்துக்களிலும், மெளலீத்களிலும் மெளலவிகள் மக்களை மடையர்களாக்கின்றனர், மார்க்கத்தை அசிங்கப்படுத்துகின்றனர் என்று சொன்னாரோ அது இப்பொழுது நவீன காலம் ஆதலின் இந்த மெளலவியிடம் தாயத்தும், மெளலீதும் அவருடைய ஆடியோ, வீடியோ சிடிக்களாகவும் மிக அதிக அளவில் விற்று சாதனை படைக்கிறது. பழைய மெளலவிகளின் பிஸினஸை இவர் வாங்கிகொண்டார்.

தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக விற்கு வாக்களிப்பது முஸ்லிம்களின் கடமை என்றும், அல்லாஹ் மறுமையில் கேட்பான் என்றும் கூறி அவருடைய நயவஞ்சக தன்மையை வெளிப்படுத்தினார்.

இப்பொழுது அதிமுக தோற்றவுடன் முஸ்லிம்களின் ஓட்டு தேர்தலை தீர்மானிக்கவில்லை என்று சொல்லி முஸ்லிம் விரோத போக்கை கையாண்டுள்ளார். தான் அடையாத வெற்றி பிறர் அடைந்ததை எண்ணி இவ்வாறு பேசியுள்ளார்.

அல்லாஹ்விற்கு பயந்து ததஜ சகோதரர்கள் தலைமை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். "நா" வரண்டு பேசும் பீஜேவிற்கு ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அவருடைய முஸ்லிம் விரோத பயணம் தொடராமல் பார்த்துகொள்வது தவ்ஹீத் சகோதரர்களின் முதல் பணியாக அமையட்டும். இல்லையெனில் பின்வரும் நாட்களில் என்னவெல்லாம் பேசுவார் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவருக்கு ஆஹாரம் செய்வதை விட்டொழியுங்கள்.

No comments:

Post a Comment