Monday, April 27, 2009

இவர்களில் யார் சிறந்தவர்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பிஸ்மில்லாஹ்
இவர்களில் யார் சிறந்தவர்?





மயிலாடுதுறை
முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், பிறப்பால் முஸ்லிம், தூய தவ்ஹீத் கொள்கைக்கு சொந்தகாரர், மாணவ பருவத்தில் இருந்து சமுதாயப்பணி ஆற்றக்கூடியவர், சிம் செய்திமடல், உணர்வு, ஒற்றுமை, மக்கள் உரிமை என மார்க்கம் மற்றும் சமுதாயப் பத்திரிக்கையின் ஆசிரியர், பாகல்பூர் ஒரு பார்வை, பாபரி மஸ்ஜித் ராமா ஜென்மபூமியா போன்ற பல சிறப்புமிக்க வரலாறுகளை தொகுத்த நல்லசிரியர்,

தனது சீரிய தலைமையால் சமுதாயத்திற்கு இடஓதுக்கீடு, உலமாவாரியம் என வரலாற்று பதிவுகளுக்கு சொந்தகாரரான இவர் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டால் இறையருளால் சமுதாயத்திற்கு நன்மையே தவிர ஒருபோதும் தீமை கிடையாது.

தொகுதியின் பக்கமே தலைகாட்டாத மணிசங்கர் அய்யரைவிட, அம்மா வாய் திறக்கச் சொன்னால்தான் தன் சமுதாய மக்களுக்காககூட வாய் திறக்க இருக்கும் ஓ.எஸ். மணியனை விட பல்லாயிரம் மடங்கு நம் சகோதரர் ஜவாஹிருல்லாஹ் சிறந்தவர்.

மார்க்க விஷயத்தில்கூட கேள்வி கேட்க உரிமை பெற்றுள்ள நாம், நம் மக்கள், நம் சமுதாயம், நம் தொகுதி சீர்பட யாரைத் தோ்ந்ததெடுத்தால் நல்லது என்பதை நாம் முடிவு செய்யும் நேரம் வந்து விட்டது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்ற மாயையில் விழாமல், மயிலாடுதுறையில் நம் பேராசிரியருக்கு வாக்களிப்போம் இன்ஷா அல்லாஹ்.


மத்திய சென்னை
அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் தன் தாத்தா, தன் தந்தை செல்வாக்கில் உள்ளே நுழைந்து மத்திய அமைச்சராக அதிகாரம் பெற்று அனைவரையும் ஆட்டிப்படைத்த தயாநிதி மாறனைவிட, முஸ்லிமாக இருந்தாலும் அம்மாவின் ஆணைக்கு அடிபணியும் முஹம்மது அலி ஜின்னாவை விட நீண்ட நெடுங்காலமாக சமுதாயப்பணி ஆற்றி பல்வேறு இன்னல்களை சந்தித்து, தனது சீரிய நிர்வாகத்திறனால் 200 கோடிக்கு மேலான வக்பு சொத்துக்களை மீட்டு, சமுதாயத்தை கேவலப்படுத்திய திமுகவை விட்டு வெளியேறிய பொழுது தனது வக்பு வாரிய தலைவர் பதவியை துறந்த நல்ல மனிதர்.

தமுமுகவை மட்டும் அல்ல, மனித நேய மக்கள் கட்சியையும் நல்ல முறையில் வழி நடத்தும் ஹைதர் அலி அவர்களுக்கு நம் வாக்குக்களை சிந்தாமல் சிதறாமல் அளித்து மக்களவையில் நம் சமுதாய மேம்பாட்டிற்கான வழியினை ஏற்படுத்துவோம்.

இராமநாதபுரம்
வயதில் சின்னவராக இருந்தாலும், தனக்கு கொடுத்த பொறுப்பை மிக சிறப்புடன் கடந்த 15 வருடங்களாக செய்து வரும் சகோதரர் சலீமுல்லாஹ்கான், , இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் கல்விக்கான வழியை ஏற்படுத்தி கொடுத்தவர். உயிர்காக்கும் இரத்ததானம், மருத்துவ உதவி 7க்கும் மேற்பட்ட ஆம்புலன்களை தன் மாவட்டத்திற்கும், கடலூர், விழப்புரம் மாவட்டங்களுக்கும் தன் மாவட்டத்திலுள்ள தனவந்தர்களிடம் கேட்டு வாங்கி கொடுத்த சமூக சேவகர்.

கொத்தங்குளம், தந்தங்குடி, நொச்சி வயல் என மூன்று கிராமங்களை இஸ்லாத்தில் எடுத்து அவர்களுக்கு பள்ளிவாசல் கட்டி கொடுத்து, அவர்களது வாழ்வாதங்கரங்களுக்கு முறையான ஏற்பாட்டினை செய்த ஒரு நல்ல சகோதரர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உழைக்கும் இவருக்கு வாக்களித்தால் நம் சமுதாயம் சீர்படுமே அன்றி ஒருபோதும் சீர்கெடாது.

ஆடம்பர கலச்சாரத்திற்கும், ஆபாசத்திற்கும் சொந்தகாரரான நடிகர் ரித்தீஸைவிட, அடாவடி அரசியல் நடத்தி, செயலலிதாவின் ஆணைக்கு காத்திருக்கும் சத்தியமூர்த்தியைவிட, பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இஸ்லாத்தை பின்பற்றாத சிங்கை ஜின்னாவைவிட ஆயிரம் ஆயிரம் மடங்கு சலீமுல்லாஹ்கான் தகுதியான வேட்பாளர். எனவே நமது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவருக்கு அளிப்போம்.

No comments:

Post a Comment