'சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம்!' என்ற முந்தைய பதிவை மிக அழகாக சமுதாய அக்கரையுடன் எழுதிய ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள். இதுபோன்ற கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளன, ஆனால் பிரிந்துக்கிடக்கும் நம் சமுதாய இயக்கங்களை ஒன்று சேர்ப்பது யார்?
முன்வாருங்கள்!
குழு அமையுங்கள்!
பேச்சுவார்த்தை நடத்துங்கள்!
மனமிட்டு பேசுங்கள் நமது சமுதாய நலனுக்காக!
வேற்றுமைகளை கலையுங்கள்!
ஒன்றுபடுங்கள் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக!
நமது ஒற்றுமையின்மையை சரியாக புரிந்துக்கொண்ட திராவிடக்கட்சிகள் நமக்கு நாமே நம்மை எதிரிகளாக்கி கடைசி வரையிலும் இந்த சமுதாயம் (சமுதாய இயக்கங்கள்) ஒன்றுபட்டுவிடக்கூடாது என்று ஒவ்வோரு தேர்தலிலும் மிக நுட்பமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள். பிரிந்துக்கிடக்கும் சம் சமுதாய இயக்கங்கள் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்க் கொண்டால் இன்ஷா அல்லாஹ், இறைவனின் நாட்டப்படி நாம் கைக்காட்டும் நபர்தான் எம்.பி யாகவோ எம்.எல்.ஏ.வாகவோ வரமுடியும் என்பதற்கு பல(வரலாறுகள்) சான்றுகள் உண்டு.
எனக்கு தெரிந்த நம் சமுதாய இயக்கங்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்திய தேசிய லீக்.
தேசிய லீக்.
மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.
ஜனநாயக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
சுன்னத்துவல் ஜமாஅத்.
நிச்சயமாக இதுப்போன்ற இயக்கங்கள் நம் சமுதாய நலன் கருதியே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமுதாய நலனில், சமுதாயம் முன்னேற ஒத்த நிலைப்பாட்டை கொண்ட நாம் ஏன் ஒன்று சேர முடியாது, ஏன் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்க்கொள்ள முடியாது? இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முடியும்.
ஒன்று சேர்ந்துப்பாருங்கள், பத்திரிக்கையாளர்களைக்கூட்டி பிரகடனம் செய்யுங்கள், அரசியல் கட்சிகளை தேடி நாம் செல்ல வேண்டியதிருக்காது மாறாக அவர்கள் நம்மை தேடி வருவார்கள் இன்ஷா அல்லாஹ்!.
பல்வேறு பிரச்சனைகளில் நாம் வேறுப்பட்டு இருக்கலாம்! நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, சமுதாய முன்னெற்றத்திற்காக தயவுசெய்து அதை மறந்து ஒன்றுபடுவோம்!
நம் ஒற்றுமையை நிலைநாட்ட இதுவே சரியான தருணம்.
மாறி மாறி கொடி பிடித்து அவர்களை வெற்றியடைய செய்ததும் போதும்!
வாக்குறுதிகள் கொடுத்து அவர்கள் நம்மை ஏமாற்றியதும் போதும்!
சமுதாய நலனில் அக்கறைக் கொண்டவர்களே!
நியாவான்களே!
வாருங்கள்!
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிப்போம்!
சமுதாய நலனுக்காக ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்போம்!
ஜெயம் கொள்வோம்! இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு : இதை எப்படி செயல்படுத்துவது, எப்படியெல்லாம் நம் சமுதாய இயக்கங்களை ஒன்றுசேர்ப்பது என்று உங்களுடைய ஆலோசனைகளை 'கருத்துகள்' பகுதியில் பதியுங்கள்.
ஆக்கம்,
-அப்துல் பரக்கத்.
thanks அதிரை எக்ஸ்பிரஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment