செளதி அரேபியாவில் சிறையில் தவித்து வந்த கடையநல்லூரை சேர்ந்த தொழிலாளி விடுதலை செய்யப்பட்டார்.நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகரை சேர்ந்த நயினார் முகமது சில ஆண்டுகளுக்கு முன் செளதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.
ஆனால், சென்றதில் இருந்து அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை.
நயினார் முகமதுவின் மனைவி மரியம் பீவி இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் கட்சியினர் ஏற்பாட்டில் கடந்த மே மாதம் 22ம் தேதி அப்போதைய கலெக்டர் பழனியாண்டியிடம் இது குறித்து மனு கொடுத்தார்.
இது குறித்து தமிழக அரசு மூலமாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதையடுத்து மத்திய அரசு தலையிட்டு செளதி அரேபியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இந்தியர்களை மீட்டுள்ளது.இதில் நயினார் முகமதும்வும் ஒருவர். கடையநல்லூர் திரும்பிய இவரை இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட துணை செயலாளர் முகமது அலி, மாநகர் மாவடட செயலாளர் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் திராளானோர் வரவேற்றனர்.
Tuesday, July 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment