Tuesday, July 28, 2009

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இடவசதி இல்லாததால் விண்ணப்பதாரர்கள் அவதி !

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இடவசதி இல்லாததால் விண்ணப்பதாரர்கள் அவதி


மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வெளிïர் விண்ணப்பதாரர்கள் உட்கார இடமின்றி தவிக்கின்றனர்.

இடநெருக்கடி

மதுரை ரேஸ்கோர்ஸ் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு மதுரை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல், பெயர், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக நேரில் வருகிறனர்.
தினமும் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வருவதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை சந்திப்பதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் உட்காருவதற்கு இடவசதி செய்து தர முடியாத சூழ்நிலை உள்ளது.

புதிய கட்டிடம்

இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஜோஸ்.கே.மாத்ï கூறும்போது, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி கிடையாது. மேலும், மத்திய அரசு அலுவலகமாக இருப்பதால் இங்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கும் வழியில்லை.

இதனால் வெளிïர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளது. இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளோம். தமிழக அரசு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு என நிலம் ஒதுக்கி தந்தால் புதிய அலுவலகம் கட்டப்படும். அப்போது தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment