Sunday, July 12, 2009

நீதிமன்ற காவலில் இருந்த முஸ்லிம் மீது 6 பொய் வழக்கு!!


திரு. அப்துல் ரசாக் அவர்கள்


மதுரை: வேறு ஒரு வழக்கில் கோர்ட் காவலில் இருந்த போது போலீசார் பொய்யாக பதிவு செய்த 6 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோரிய மனு குறித்து டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தைசேர்ந்த மக்கள் விக்டரி இயக்க தலைவர் அப்துல் ரசாக் ( 9443465765) தாக்கல் செய்த ரிட் மனு: நான், ஊனமுற்றவர்கள், விபத்தில் பாதிக்கப்படுவோர், முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். ராமநாதபுரத்தில் கடந்தாண்டு நவம்பரில் மழை பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்ட போது பாரதிநகர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். இதை மனதில் வைத்து என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். இவ்வழக்கில் நான் முன்ஜாமீன் பெற்றேன். பிறகு 2008 டிச., 5ல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னை போலீசார் கைது செய்தனர். மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் என்னை விடுவிக்கும்படி அன்று மாலை 4 மணிக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில் " அன்று காலையில் நடந்த மறியல் போராட்டத்தில் கைதாகி ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் போலீஸ் வாகனங்களின் இருக்கைகளை சேதப்படுத்தியதாக,' என் மீது 6 வழக்குகளை போலீசார் பொய்யாக பதிவு செய்தனர். போலீசாருக்கு எதிராக போராடுவதால் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜின்னா ஆஜரானார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ""மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், டி.ஜி.பி., எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப,'' உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர்

No comments:

Post a Comment