Friday, July 31, 2009

ஷரிஅத் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.



ஷரிஅத் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
களம் காண வாருங்கள்!

சமுதாயத்தின் கண்ணியம் காக்க வாருங்கள்!

நாள் : 10-08-2009 (சணிக்கிழமை)

நேரம் : மாலை 4:00மணியளவில்

இடம் : பார்க் டவுன் தபால் நிலையம் எதிரில்.

நன்றி;இ.த.ஜ.வலைத்தளம்.

ஆகஸ்ட் 1 குற்றாலம் மாநில முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்

ஆகஸ்ட் 1 குற்றாலம் மாநில முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்டு 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடக்கவிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் 25 சட்ட மன்ற தொகுதிகளை தேர்ந் தெடுத்து தீவிரப் பணிகளை செய்வது, தமிழகத்தில் நடை பெற உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரப் பணி செய்ய முஸ்லிம் லீக் பிரச்சார குழு அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் இக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுகின்றன.

கடந்த 11-ம் தேதி சென்னை காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர் வாகிகள் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகளின்படி எதிர்வரும் ஆகஸ்டு 1-ம் தேதி சனிக்கிழமை திரு நெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது.

மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தென்காசி குற்றாலம் சாலை தாய்பாலா திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், அணிகளின் அமைப் பாளர்கள், மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர், பொருளாளர்கள், மாநக ராட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள் ளிட்ட 300 பேர் இக் கூட் டத்தில் கலந்து கொள்கின் றனர்.

என்றும் இல்லாத வகையில் இன்று முஸ்லிம் லீகில் ஏற்பட்டுள்ள மகத்தான எழுச்சியை மைய மாக வைத்து சமுதாயத்தின் நம்பிக்கையை முழு அள வில் நிறைவேற்றும் வகை யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புப் பணிகளை விரிவுபடுத்தவும், அதன் செயல்பாடு களை விரைவுபடுத்தவும் இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதை லட்சியமாகக் கொண்டு அதற் கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.

தமிழ்நாட்டில் மொத்த முள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களை அதிக மாக கொண்ட 25 சட்ட மன்ற தொகுதிகளை கண்டறிந்து அதில் தீவிர கவனம் செலுத்தி பணி களை விரைவுபடுத்த முடி வெடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் போட்டியிடும் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர் களின் மகத்தான வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடு பட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் பிரச்சார குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த இயக்க முடிவுகள் தவிர இக் கூட்டத்தில் பல அரசியல் தீர்மானங்களும் விவாதத்தில் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ கத்தின் கோவை, பாளை யங் கோட்டை உள்ளிட்ட மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் விசாரணை சிறைவாசி களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசிடம் வைக்க வேண் டிய கோரிக்கை தொடர் பாகவும், சிறுபான்மை கல்வி நிலையங்களில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கிடும் விஷயம் குறித்தும் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப் பட்ட பல்வேறு விஷயங் கள் குறித்தும் இக் கூட்டத் தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.

குற்றாலத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடை பெறுவதையொட்டி திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலப்பாளையத்தில் பட்டமளிப்பு விழா
இச் செயற்குழுவில் பங் கேற்பதற்காக வருகை தரும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செயற்குழு முடிந்ததும் பிற்பகல் 3 மணிக்கு செய்தி யாளர்களை சந்தித்து பேசு கிறார்.
மாலை 5 மணிக்கு மேலப்பாளையம் புறப் பட்டுச் செல்லும் அவர் அங்குள்ள உஸ்மானியா அரபிக் கல்லூரியின் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு விழாப் பேருரை யாற்றுகிறார்.

கலந்தாய்வு கூட்டம்
மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்று வருகின்ற மாவட்ட முஸ்லிம் லீக் கலந்தாய்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வாவு பங்களாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மற் றும் விருதுநகர் மாவட் டங்களில் கலந்தாய்வு கூட்டம் நடை பெறுகிறது.

இக் கூட்டத்தில் இந்த நான்கு மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர் கள், நகர, பிரைமரி, தலைவர் - செயலாளர்கள் இந்த நான்கு மாவட்டங் களுக் குட்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் கள் பங்கேற்று இயக்க வளர்ச்சிக்கான கருத்துக்களை கூற உள்ளனர்.

இம் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் செயல் பாடுகள் ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட இருப்பதாக மாநில முஸ்லிம் லீக் தலைமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கிய அரசியல் கட்சியின் நிர்வாகிகள் அறிவிப்பு


புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையிலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியலில் சக்திப்படுத்தும் நோக்கில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா என்ற அரசியல் கட்சி இன்று டெல்லி பத்திரிகையாளர் சங்கத்தில் வைத்து பிரகடனப்படுத்தப்பட்டது.
ஈ.அபூபக்கர்(தலைவர்), வழக்கறிஞர் ஸாஜித் சித்தீகி(துணைத்தலைவர்), எ.ஸயீத்(பொதுச்செயலர்), முஹம்மது உமர்கான்(பொதுச்செயலர்), சி.ஆர்.இம்திஹாஸ்(செயலர்), மொய்தீன்குட்டி ஃபைஸி(செயலர்), ஃபவுஸியா கபீர்(செயலர்), இஸ்லாமுதீன் குரைஷி(பொருளாளர்)ஆகியோர் கட்சியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா உட்பட்ட மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத்தேர்தல்களில் அப்போதைய அரசியல் சூழலுக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று கட்சியின் நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். கேரளாவில் எந்த கூட்டணியை ஆதரிப்பது என்பது பற்றி சூழ்நிலைகளை கணக்கில் எடுத்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது, "கட்சி உறுப்பினர்கள், கேடர்கள் என்று இரண்டுவிதமான அங்கங்கள் கட்சியில் இருப்பார்கள். கட்சியின் சட்டதிட்டப்படி கிளை கமிட்டியிலிருந்து தேசிய செயற்குழு வரை அதனுடைய நிர்வாக கட்டமைப்பு செயல்படும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, நகரம், மாவட்டம், மாநிலம் என அதனுடைய கமிட்டிகள் செயல்படும். கமிட்டிகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் 16 மாநிலங்களில் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் அக்டோபர் 18 ஆம்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு முன்பு மாநிலக்கமிட்டிகள் செயல்பட ஆரம்பிக்கும்." என்று அவர்கள் கூறினர். பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

Thursday, July 30, 2009

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. - குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.
வடக்கில் சிந்திய முதல் ரத்தம்
வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.
1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.

ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்... இந்திய சரித்திரமே மாறியிரக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க,நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.


தெற்கின் முதல் போராளியோடு...


தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரவாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டப்பொம்மன். இராமநாதபுரத்திற்கு­ ஜாக்ஸன் துரையைச் சந்தித்த கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல். அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை,
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்...

- என்று பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் புகழ்கிறது.
ழூ
(ழூ செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.36)
கட்டபொம்மன் படையில் வீராகளாகவும் ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர். அவர்கள் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச முடியாதவர் என்ற பொருளுடைய ஆழுழுமுயுர் என்னும் உருது வார்த்தையால் அழைத்ததைக் கர்னல் வேல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்ழூழூ
இச்செய்திகள் தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து இம்மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
(ழூழூ செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்;.38)
கிளிங்கர்கள்
மலேசிய திருநாட்டின் பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் முன்பு கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால் அழைக்கப்பட்டனர். கிளிங்கர்கள் என்ற பினாங்கு வாழ் தமிழர்களின் பட்டப் பெயரின் பின்னால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களி; தியாக வரலாறு ஒன்று உழிந்திருக்கின்றது.

தமிழகத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்திதுப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்டுது வரலாறு. மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு திருப்தியடையாத ஆங்கில அரசு, அன்னாரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியது.

அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர். நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேரிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.

அக்கைதிகளில் இருவருக்கும் மட்டும் நடக்கக் கூட முடியாத அளவிற்கு சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக் கைச்சங்கிலியில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக் கைதிகள் கூட்டத்தில் தலைமை சான்றவர்களாவர்.

அவர்களில் உருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. முற்றவர் முக்கிய படைத்தளபதிகளில் உருவihன சேக் உசேன் எனற் இஸ்லாமிய இளைஞர்ழூ. யார் இந்த சேக்உசேன்?

(ழூ ஆடைவசல உழளெரடவயவழைளெஇ ஏழட.307(19.1.1803)இ P.1249- இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது.பார்வை:மேற்படி பக்கம்.45.)

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி ஜ1800-1801ஸ முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (முhயn-i-துயா-முhயn)இ மராத்தியில் சிமோகா (ளூiஅழபய) பகுதியை ஆண்ட தூண்டாஜிவோக் (னூழனெயதi றுயரப), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுக'கல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷாகான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது.

இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுல்ல பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். ஆந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் களீஷாகான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷாகான் ஈடுபட்டார்.ழூ ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சிஙில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (ஆயஉடநழன) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்ழூழூ
(ழூ மு.சுயதயலலயnஇ ளுழரவா ஐனெயைn சுநடிநடடழைnஇ வுhந குசைளவ றுயச ழக ஐனெநிநனெநnஉந. 1800-1803இஇ PP.110-111.)
(ழூழூடiடின.இP.125)
அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர்.ழூ இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாத்தாக(கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட் தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.

இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள் ஒருவர்தான் பினாங்குக்கு நாடுகடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்;சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.ழூழூ
இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பச் பட்டினியால் வாடி அங்கேயே காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச்சென்று தியாக வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய தீரர்கள் விளங்கியுள்ளனர்.

(ழூ செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம் 41.)
(ழூழூ மு.சுயதயலலயnஇ ளுழரவா ஐனெயைn சுநடிநடடழைnஇ வுhந குசைளவ றுயச ழக ஐனெநிநனெநnஉநஇ 1800-1803..இPயபந.274.)

Wednesday, July 29, 2009

இலங்கை முஸ்லிம்கள் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் பேருவலை - மஹகொட


இலங்க-பேருவலை - மஹகொட
மஸ்ஜிதுக்குள் மனித மிருகங்களின் வெறியாட்டம்

பேருவலை - மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நிகழ்வாகப் பதிவாகி விட்டது. பேருவளை, தர்கா டவ்ன் பகுதிகளில் பல தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வீடுகளிலும், பொதுப் பள்ளிகளிலும் பல ஏச்சுப் பேச்சுகள், எதிர்ப்புக்கள், கல்லெறிகளுக்கு மத்தியில் தொடரப்பட்ட பிரச்சாரம், உண்மை உதயம் ஆசிரியரும், சகோதரர் தவ்பீக் மதனி அவர்களும் கடத்தப்பட்டுக் கர்ண கொடூரமாகத் தாக்கப்பட்டதன் பின்னர் புது வடிவம் பெற்றது. எமக்கெனத் தனிப் பள்ளிவாசல்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் பின்னர் தர்கா நகரில் தனிப் பள்ளிவாசல் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யாவினால் தனியான ஜும்ஆப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.

இவ்வாறே, பேருவளை சீனன் கோட்டை, மஹகொட பகுதிகளிலும் தனி நபர் வீடுகளில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு சைனா போர்ட்டில் பிரச்சினைகள் எதுவும் இன்றி ஏகத்துவம் வளர்ந்து, ரியாளுஸ் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளியாக மலர்ந்துள்ளது. மஹகொட பிரதேசத்தில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. நவாஸ் ஹாஜியார் இல்லத்திலும் மற்றும் பலரின் வீடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம், தகரத்தால் அமைக்கப்பட்ட தற்காலிகப் பள்ளியில் முன்னெடுக்கப்பட்டது. ஒரு நாள் அதிகாலை ஸுபஹ் தொழுதுகொண்டிருக்கும் போது தொழுகையாளிகளைக் கொலை செய்யும் நோக்கில் கை குண்டு வீசப்பட்டு அல்லாஹ்வின் அருளால் அந்த குண்டு வெடிக்காததினால் ஏகத்துவச் சகோதரர்கள் உயிர் தப்பினர். படுகொலை முயற்சி நடந்த அதே இடத்தில், ஜம்இய்யத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியாவினால் ஷமஸ்ஜிதுர் ரஹ்மான்| என்ற பெயரில் இரு மாடி கொண்ட பிரமாண்டமான மஸ்ஜிதும், அதை ஒட்டி இரு மாடி மத்ரஸாவும், வாசகசாலையும், அத்துடன் சிறிய வைத்திய நிலையம் ஒன்றும் 2002 இல் கிட்டத்தட்ட 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, அமைதியான முறையில் அந்த மஸ்ஜித் சென்ற வெள்ளி வரை இயங்கி வந்தது.


23-07-09 அன்று அங்கு குத்பா உரை நிகழ்த்தியவர் கந்தூரிக்கு எதிராகப் பேசியுள்ளார். புகாரிப் பள்ளியில் இஸ்லாத்தில் குறிப்பிடப்படாத கந்தூரி செய்ய முடியுமாக இருந்தால், ஏகத்துவப் பள்ளியில் கந்தூரிக்கெதிரான இஸ்லாமிய நிலைப்பாட்டைப் பேசப் பூரண உரிமை உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதே வேளை, மாற்றுத் தரப்பினர் தமது உரைகளில் ஏகத்துவவாதிகளைக் கேவலமாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் பின்னர் சிலர் வெள்ளி மாலை மஸ்ஜிதுக்குக் கல்லெறிந்துள்ளனர். பின்னர் வந்த ஒரு குழு கல்லெறிந்த மஸ்ஜிதைச் சேதப்படுத்தியது மட்டுமன்றி ஒருவரைக் கத்தியாலும் குத்தியுள்ளனர்.

பின்னர் திட்டமிட்டு அரசியல் பின்னணியுடன் காலியிலிருந்து காடையர்களை வரவழைத்துப் பெரும் திரளாகப் பள்ளியைச் சூழ்ந்து பள்ளியைத் தாக்கியுள்ளனர்.


அப்போது பள்ளியில் இருந்த 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட சகோதரர்களின் மோட்டார் சைக்கிள்கள், புஷ் சைக்கிள்களை ஒன்றாகச் சேர்த்து எரித்துப் பள்ளியைப் பற்ற வைத்துள்ளனர்.

பள்ளியின் அனைத்துக் கண்ணாடிகளையும் உடைத்துக் காட்டு தர்பார் நடத்தியுள்ளனர். அங்கிருந்த சகோதரர்களைக் கதறக் கதறக் கருவறுத்துள்ளனர். வுழூச் செய்யுமிடத்தில் 6 இடங்களில் மாடு அறுத்தது போல் காட்சியளிக்கும் இரத்த வெள்ளம், கலகக்காரர்களிடம் கடுகளவு கூட இஸ்லாமிய உணர்வோ, ஈவு இரக்கமோ இல்லை என்பதற்கான இரத்த சாட்சியங்களாகத் திகழ்கின்றன. அத்துடன் மத்ரஸாவும், அதனுடனிருந்த அறபு இஸ்லாமிய வாசிகசாலையும் எரிக்கப்பட்டுள்ளது. அறபுக் கிதாபுகள், குர்ஆன் பிரதிகள் எதுவும் இதயமற்றவர்களின் கண்களுக்குப்படவில்லை.

அத்துடன் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வந்த மருத்துவ நிலையம் தகர்த்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களினதும் அனைத்துக் கட்டமைப்புக்களும் கச்சிதமாகத் தகர்க்கப்பட்டுள்ளன. காட்டு மிராண்டிகளின் காட்டு தர்பாரில் இருவர் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 13 பேர் பாரிய வால், கத்தி வெட்டுக் காயங்களுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு அநியாயங்களும் சில மணி நேரங்களில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ள காவல் நிலையம் கண்ணை மூடிக்கொண்டிருந்துள்ளது. பல முனைகளில் முயற்சி செய்யப்பட்டும் அவர்கள் அசையவில்லை.

கடமை தவறிய காவல் துறையும், அவர்களின் கரங்களைக் கட்டிப் போட்ட அரசியல் அதிகாரிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாகும். இந்த அநியாயத்தைச் செய்தவர்கள், தூண்டி விட்டவர்கள், துணை நின்றவர்கள் அனைவரும் குற்றவாளிகளே! தண்டிக்கப்படவேண்டியவர்களே! அவர்களுக்கு இந்த உலகத்திலேயே உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க எமது சகோதரர்களும், மனித நேயம் மிக்க நடுநிலை மக்களும் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளனர். இரண்டு உயிர்களுக்காக என்றில்லாவிட்டால் கூட, அல்லாஹ்வின் கலாம் குர்ஆனைத் தீயிலிட்டு அல்லாஹ்வை ஸுஜூது செய்த மாளிகையைக் கேவலப்படுத்திக் காஃபிர்களை விட மோசமாக நடந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காகவாவது நடுநிலை சகோதரர்களும், இது வரை கந்தூரிக்கு ஆதரவளித்து வந்தவர்களும் தங்கள் நிலை பற்றிச் சிந்தித்து இந்த அநியாயத்திற்கு எதிராக அணி திரளக் கடமைப்பட்டுள்ளனர்.

இதே வேளை, அந்த இரண்டு உயிர்கள்! சிந்தப்பட்ட இரத்தங்கள்! எதுவும் அல்லாஹ்வின் முன் வீண் போகாது!

இவர்களின் பண-பலமும், அரசியல் அதிகாரமும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் முன் அடிமைப்படும் நாள் வரும். இந்தக் கொடூரங்களுக்கெல்லாம் பின்னால் நின்றவர்களை நிச்சயம் அல்லாஹ் தண்டிப்பான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்குள்ளது. எனவே, அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் இறுதி வெற்றி எமக்குக் கிடைக்கும் என்ற அடிப்படையில் நாம் நிம்மதி பெறுவோம். அதே வேளை, இந்த உலகத்தில் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவும் பாடுபடுவோம்! அந்த விதவைப் பெண்களின் கண்ணீரும், அனாதைகளாக்கப்பட்ட அரும்புகளின் ஏக்கமும் நிச்சயமாக இவர்களை ஒரு நாள் எரித்துப் போடும். அங்கு தொழுகைக்காகக் கூடிய ஆயிரக் கணக்கான மக்களின் அழுகையும், சாபமும் இவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் அல்லாஹ்வை நம்பிய எமக்கு நம்பிக்கையுண்டு!

இவ்வேளையில் பாரபட்சமாக நடந்த பேருவலைப் பொலிஸ் அதிகாரிகளையும், அநியாயத்திற்குத் துணை நின்ற ஆன்மிக(?)-அரசியல் தலைமைகளையும், செய்தி ஊடகங்களில் பிழையான தகவல்களைப் பரப்பிய (சன்டே டய்ம்ஸ் போன்ற) ஊடகங்களையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் எமது சகோதரர்கள் பொறுமை காத்து நிதானமாகச் செயற்படவேண்டும். எதையும் சட்ட ரீதியாகப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சிதைக்கப்பட்ட மஸ்ஜித் குறித்து ஆக்கபூர்வமான முறையில் சிந்தித்துக் காரியமாற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வை நல்ல படிப்பினையாக எடுத்து எமது தஃவாவை அமைதியாகவும், நிதானமாகவும் முன்னெடுக்க வேண்டும். எமது உரைகள் அடுத்தவர்களுக்கு உண்மையை உணர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர உள்ளங்களைக் காயப்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. சத்தியத்தைச் சொல்ல வேண்டும்ளூ அதை அழகிய வார்த்தைகளில் நிதானமான நிலையோடு சொல்ல வேண்டும் என்ற பாடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஓரிருவரின் அவசரப் புத்தியும், அனுபவமும் அமைதியும் அற்ற நிலையும் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்து விடும் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும். இன்ஷா அல்லாஹ்! இவர்களின் இந்த அக்கிரமம் பேருவலைப் பகுதியில் ஏகத்துவ எழுச்சிக்கும், கந்தூரியின் வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! 'அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்த முயல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அச்சமுடையவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்கு அவர்களுக்குத் தகுமானதல்ல. அவர்களுக்கு இம்மையில் இழிவும் மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.' (2:114)

குறிப்பு:- மஹகொட, தர்கா நகர், சைனா போர்ட் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று ஜும்ஆப் பள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு மஸ்ஜிதுகள் துயுளுஆ இனால் கட்டப்பட்டதாகும். 1990 களின் இறுதிப் பகுதிகளில் இப்பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வரலாறுகளையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு, வுNவுது இணைய தளத்தில் இலங்கை வரலாற்றில் இது வரை காலமும் எந்த ஆலிமும் சொல்லாத அளவுக்கு அவர்களின் ஆலிம் சத்தியத்தை உடைத்துச் சொல்லியிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளனர். 50 வருடங்களாக இலங்கையில் நடக்கும் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தமது ஏகபோக உரிமையாக மாற்ற முற்பட்டுள்ளனர். இவ்வளவு தெளிவான விஷயத்திலேயே இப்படிப் பகிரங்கமாகப் பொய் சொல்பவர்கள் தனிப்பட்ட விவகாரங்களில் கூறும் செய்திகளை எவ்வாறு நம்ப முடியும்? அவர்கள் குறிப்பிட்ட ஆலிம் சத்தியத்தைச் சொன்னாலும் அதை முறைகேடாகக் கூறி இலங்கை வரலாற்றிலேயே இது வரை ஏற்படாத ஒரு கறை படிந்த நிகழ்வுக்குக் காரணமாக அமைந்ததை இவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். சத்தியத்தைச் சொன்னவர் துணிந்து கந்தூரி நடக்கும் இடத்துக்குச் சென்று கூறியிருந்தால் அவரின் துணிவைப் பாராட்டியிருக்கலாம். அல்லது பேசி விட்டு பிரச்சினை நடக்கையில் களத்துக்குச் சென்றிருந்தால் பாராட்டியிருக்கலாம். தான் பேசிய பேச்சால் ஏற்பட்ட முறுகலால் கொலை செய்யப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் பார்க்கவோ, இறந்தவர்களின் ஜனாஸாவில் பங்கேற்கவோ, பொலிஸுக்கெதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவோ முடியாமல் ஓடி ஒழிந்தவர்தான் இலங்கை வரலாற்றில் இது வரையும் யாரும் கூறாத அளவுக்கு சத்தியத்தைக் கூறியுள்ளாராம். வுNவுது இலங்கையில் இரத்தம் சிந்தும் தஃவாக் களமொன்றை உருவாக்க முயற்சிக்கின்றது. இதற்கு இலங்கை மக்களே நீங்கள் இடமளிக்க விரும்புகிறீர்களா?

Tuesday, July 28, 2009

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இடவசதி இல்லாததால் விண்ணப்பதாரர்கள் அவதி !

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இடவசதி இல்லாததால் விண்ணப்பதாரர்கள் அவதி


மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வெளிïர் விண்ணப்பதாரர்கள் உட்கார இடமின்றி தவிக்கின்றனர்.

இடநெருக்கடி

மதுரை ரேஸ்கோர்ஸ் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு மதுரை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல், பெயர், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக நேரில் வருகிறனர்.
தினமும் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வருவதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை சந்திப்பதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் உட்காருவதற்கு இடவசதி செய்து தர முடியாத சூழ்நிலை உள்ளது.

புதிய கட்டிடம்

இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஜோஸ்.கே.மாத்ï கூறும்போது, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி கிடையாது. மேலும், மத்திய அரசு அலுவலகமாக இருப்பதால் இங்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கும் வழியில்லை.

இதனால் வெளிïர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளது. இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளோம். தமிழக அரசு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு என நிலம் ஒதுக்கி தந்தால் புதிய அலுவலகம் கட்டப்படும். அப்போது தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று கூறினார்.

செளதி சிறையில் தவித்த தமிழர் மீட்பு!!!

செளதி அரேபியாவில் சிறையில் தவித்து வந்த கடையநல்லூரை சேர்ந்த தொழிலாளி விடுதலை செய்யப்பட்டார்.நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகரை சேர்ந்த நயினார் முகமது சில ஆண்டுகளுக்கு முன் செளதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.

ஆனால், சென்றதில் இருந்து அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை.
நயினார் முகமதுவின் மனைவி மரியம் பீவி இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் கட்சியினர் ஏற்பாட்டில் கடந்த மே மாதம் 22ம் தேதி அப்போதைய கலெக்டர் பழனியாண்டியிடம் இது குறித்து மனு கொடுத்தார்.

இது குறித்து தமிழக அரசு மூலமாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதையடுத்து மத்திய அரசு தலையிட்டு செளதி அரேபியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இந்தியர்களை மீட்டுள்ளது.இதில் நயினார் முகமதும்வும் ஒருவர். கடையநல்லூர் திரும்பிய இவரை இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட துணை செயலாளர் முகமது அலி, மாநகர் மாவடட செயலாளர் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் திராளானோர் வரவேற்றனர்.

சென்னை-அவசரமாய் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்!!


சென்னையிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் அவசரமாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் மிக அவசரமாகத் தரையிறங்கியது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏர் அரேபியா ஏர்வேஸ் விமானம் 128 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார் விமானி.இதைத் தொடர்ந்து அந்த விமானம் 9.30 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.விமானத்தில் இருந்த 128 பயணிகளும் இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Monday, July 27, 2009

தம்மாமில் IFF நடத்தும் மாபெரும் கருத்தரங்கம்!!



அழைப்பிதழை பெரிதாக்கிப் படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

Friday, July 24, 2009

திண்டுக்க‌ல்லில் அமானா வெல்ஃபேர் அசோஸியேஷ‌ன் டிர‌ஸ்ட் ஆர‌ம்ப‌ விழா!!

திண்டுக்க‌ல்லில் அமானா வெல்ஃபேர் அசோஸியேஷ‌ன் டிர‌ஸ்ட் ஆர‌ம்ப‌ விழா ம‌ற்ற்ம் ஐக்கிய‌ ந‌ல‌க் கூட்ட‌மைப்பு சேவைக்குழு அறிமுக‌ விழா 26.07.2009 ஞாயிற்றுக்கிழ‌மை காலை 9.30 ம‌ணிய‌ள‌வில் மானா மூனா ப‌ள்ளிவாச‌ல் வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ உள்ள‌து.

விழாவிற்கு த‌மிழ்நாடு முஸ்லிம் தொண்டு இய‌க்க‌ த‌லைவ‌ர் ஹாஜி கே.எம்.ஏ. முஹ‌ம்ம‌து அலி த‌லைமை வ‌கிக்கிறார்.

தாம‌ரைப்ப‌ட்டி அந்நூர் இஸ்லாமிய‌க் க‌ல்லூரி நிறுவ‌ன‌ர் ம‌வ்ல‌வி ஹாபிழ் எம்.ஒய். ர‌ஹ்ம‌த்துல்லாஹ் பாக‌வி முன்னிலை வ‌கிக்கிறார்.

நாக‌ல்ந‌க‌ர் ஜும்ஆ ப‌ள்ளிவாச‌ல் இமாம் ம‌வ்ல‌வி எம். அப்துர் ர‌ஹ்மான் யூசுபி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார். கே. எம். இஸ்மாயில் சேட் அறிமுக‌ உரை நிக‌ழ்த்துகிறார்.

சென்னை ஐக்கிய‌ ந‌ல‌க்கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் ஹாஜி முஹ‌ம்ம‌து அன்வ‌ர்தீன், சென்னை அல்ஹ‌ர‌மைன் டிர‌ஸ்ட் ம‌ற்றும் ஐக்கிய‌ ந‌லக்கூட்ட‌மைப்பின் செய‌லாள‌ர் ஹாஜி முஹ‌ம்ம‌து ர‌பீக், சென்னை ம‌க்கா ம‌ஸ்ஜித் த‌லைமை இமாம் ம‌வ்ல‌வி ஷ‌ம்சுத்தீன் காஸிமி உள்ளிட்டோர் சிற‌ப்புரை நிக‌ழ்த்துகின்ற‌ன‌ர்.

திண்டுக்க‌ல் முத்த‌வ‌ல்லிக‌ள் கூட்ட‌மைப்பின் க‌ன்வீன‌ர் ர‌ஹ்ம‌த்துல்லாஹ் ந‌ன்றியுரை நிக‌ழ்த்துகிறார்.



இவ்விழாவின் நோக்க‌ங்க‌ள் :
வ‌ட்டியில்லா க‌ட‌ன், ஜ‌க்காத் வ‌சூலித்து பைத்துல்மால் முறையில் விநியோக‌ம், வியாபாரிக‌ளுகான‌ சிறுசேமிப்புத் திட்ட‌ம், வ‌ட்டியில்லா டெபாஸிட் திட்ட‌ம், அர‌சு ந‌லத்திட்ட‌ உத‌வி, சுய‌வேலைவாய்ப்பு வ‌ழிகாட்டுத‌ல், க‌ல்வி ஆலோச‌னை

த‌க‌வ‌ல் உத‌வி :
ஜாப‌ர் சாதிக், திண்டுக்க‌ல்
9894057709
jabarsathik@yahoo.co.in

Thursday, July 23, 2009

துபாயில் ப‌ரோடா வ‌ங்கியின் 101 ஆவ‌து ஆண்டு விழா!!



துபாய் : துபாயில் பரோடா வ‌ங்கியின் 101 ஆவ‌து ஆண்டு விழா 21.07.2009 செவ்வாய்க்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இவ்விழாவில் வ‌ங்கியின் த‌லைமை செய‌ல் இய‌க்குந‌ர் அசோக் குப்தா, அமீர‌க‌ நிதித்துறை இய‌க்குந‌ர் ச‌யீத் ர‌ஷீத் அல் ய‌த்தீம், அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர் த‌ல்மிஷ் அஹ்ம‌த் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

ப‌ரோடா வ‌ங்கியின் வ‌ணிக‌ம் அமீர‌க‌த்தில் 2010 க்குள் 20 பில்லிய‌னாக‌ அதிக‌ரிக்கும் என‌ த‌லைமை செய‌ல் இய‌க்குந‌ர் குப்தா தெரிவித்தார். க‌ட‌ந்த‌ ஆண்டை விட‌ இவ்வாண்டு வ‌ங்கியின் முத‌லீடு 5 பில்லிய‌ன் அதிக‌ரித்துள்ள‌தாக‌ தெரிவித்தார். மேலும் இவ்வ‌ங்கியின் மூல‌ம் இந்தியாவுக்கு அனுப்பும் ப‌ண‌மும் அதிக‌ரித்துள்ள‌து என்றார் அவ‌ர்.
ப‌ரோடா வ‌ங்கி உல‌க‌ முக்கிய‌ வ‌ணிக‌ ந‌க‌ர்க‌ளான‌ நியூயார்க், ல‌ண்ட‌ன், புருஸெல்ஸ், துபாய், ஹாங்காங் ம‌ற்றும் சிங்க‌ப்பூர் உள்ளிட்ட‌ இட‌ங்க‌ளில் த‌ன‌து கிளைக‌ளைக் கொண்டுள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

Wednesday, July 22, 2009

திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து - ம‌ன‌ம் திற‌க்கிறார் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அப்துர் ர‌ஹ்மான்!







* உங்களின் இளமைக்காலம், பெற்றோர், படிப்பு ஆகியன குறித்து சொல்லுங்களேன்...
காயிதே மில்லத் (ரஹ்) அவர்களோடும் சிராஜுல் மில்லத் அப்துல் சமத் அவர்களோடும் என் தகப்பனாருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததுண்டு. என்னுடைய பாட்டனாரும் முஸ்லிம் லீகில் ஆரம்பக் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர். ஆக என்னுடைய பரம்பரையே முஸ்லிம் லீக்குடன் ஈடுபாடு கொண்டு இருந்ததால் சிறு வயதிலிருந்தே எனக்கும் முஸ்லிம் லீக் மீது ஈடுபாடு இருந்தது. சமூக, அரசியல் ரீதியாக சமுதாயத்தை சரியான பாதையில் முஸ்லிம் லீக்கால் மட்டுமே செலுத்த முடியும் என்பது சிறுவயதிலிருந்தே என் எண்ணத்தில் பதிந்த ஆழமான அழுத்தமான நம்பிக்கை. அந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும், வலிமைப்படுத்த வேண்டும் எனும் எண்ணம் இருந்தாலும் கூட ஆங்காங்கே உள்ள பலவீனங்கள் முஸ்லிம் லீக் வளர்ச்சியிலே சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பலவீனங்கள் இருக்கின்றன என்பதனால் நாம் ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்தி விட முடியாது.
என்னுடைய படிப்பு என்பது என்னுடைய பாட்டனார் துவக்கி வைத்த ஆரம்பப் பள்ளியில் 1 முதல் 5 வது வரை படித்தேன். என்னுடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை. ஒரு காலத்தில் நம்மவர்கள் படிப்பதற்கு என்று தனியாக பள்ளி இல்லாத காலத்தில் மதரஸதுல் முஹம்மதிய்யா என்ற ஆரம்பப் பாடசாலையை மார்க்கக் கல்வி போதனையோடு என்னுடைய பாட்டனார் அரசாங்க அங்கீகாரத்தோடு ஆரம்பித்தார். அந்தப் பள்ளியில்தான் நான் 1 முதல் 5 வரை முடித்தேன். இப்பொழுது அந்தப் பள்ளியின் பொருளாளராக நான் இருக்கிறேன். அதன் பிறகு ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியில் 6 முதல் 10 வரை என்னுடைய படிப்பை முடித்தேன். பிறகு கல்லூரிப் படிப்பு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில். மாஸ்க் ஹாஸ்டல் என்று சொல்லப்படுகிற ஏழை மாணவர்கள் அதிகமாகத் தங்கிப் படிக்கிற விடுதியில் தங்கிப் படித்தேன். அங்குதான் என்னுடைய பட்டப் படிப்பையும் முதுகலை படிப்பையும் முடித்தேன்.
* நீங்கள் சிறுவயதிலிருந்தே முஸ்லிம் லீக்குடன் இணைந்து இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது முஸ்லிம் லீக்கில் இளைஞர்களே இல்லை எனச் சொல்லப்படுகிறது, இது சரியா?
இல்லை; இது தவறான கருத்து. அந்தந்தப் பகுதிகளில் அமைப்பை வழி நடத்தக் கூடியவர்களின் பலவீனங்களால் சில இடங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில பகுதிகளில் முஸ்லிம் லீக் நல்ல வலிமையோடு இருக்கும். சில பகுதிகளில் நடுத்தரமாக இருக்கும். சில பகுதிகளில் பலவீனமாக இருக்கும். சில பகுதிகளில் கிளை கூட இல்லை என்பதை நாம் மறுக்க முடியாது. உடனே தலைமையைக் குறை சொல்லி விட முடியாது. அந்தந்தப் பகுதிகளில் பொறுப்பாளர்களின் வீரியத் தன்மையைப் பொறுத்து அமைப்பின் செயல்பாடுகளின் வலிமை இருக்கும். இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் எல்லாரும் முஸ்லிம் லீகில்தான் இருக்கிறார்களா என்றால் இல்லை. மற்ற இயக்கங்களில் இளைஞர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வீரமாகச் செயல்பட வேண்டும், புரட்சியாகச் செயல்பட வேண்டும் என்றெல்லாம் கூறி நல்லிணக்கத்தைக் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய இயக்கங்கள் இளைஞர்களை சரியாக வழிநடத்தவில்லை என்பதை உணர்ந்து சமுதாயப் பணி ஆற்ற சரியான களம் முஸ்லிம் லீக்தான் என்பதை உணர்ந்து பல இளைஞர்கள் முஸ்லிம் லீக்கில் இணைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
* வேலூர் தொகுதியின் வேட்பாளராக முதலில் பேராசிரியர் காதர் மொய்தீன் பெயர்தான் அறிவிக்கப்பட்டது. பிறகு உங்கள் பெயரை அறிவித்தார்கள். உண்மையில் என்ன நடந்தது?
இதில் ஒன்றும் இரகசியம் இல்லை. செயற்குழு கூட்டத்தில் "கடந்த முறை வேட்பாளராக நின்று 5 ஆண்டுகள் பணி ஆற்றினேன். ஆனால் இந்த முறை என்னால் வேட்பாளராக நிற்க முடியாது. நமது கட்சியின் சார்பாக புதிய வேட்பாளர் ஒருவரை அறிமுகம் செய்ய வேண்டும்' என்று பேராசிரியர்தான் முன்மொழிந்தார்.
ஆனால் செயற்குழுவில் வந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக நீங்கள்தான் மறுபடியும் நிற்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் பேராசிரியர் அவர்கள் மனமின்றி ஒப்புக் கொண்டார்.
அதன் பிறகு பேராசிரியருக்கு ஏணி சின்னத்தில்தான் அதாவது சொந்தச் சின்னத்தில்தான் நிற்க வேண்டும். வேறு கட்சியின் சின்னத்தில் நிற்பதை மாற்றியாக வேண்டும் என்பது முஸ்லிம் லீக்கில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அத்தகைய நிலையில் பேராசிரியர் ஏணி சின்னத்தில் நிற்பார் என்று அறிவித்து இருந்தோம்.
ஆனால் இரண்டு காரணங்களால் இந்த முடிவு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. 1. ஏணி சின்னம் என்பது மக்கள் மனதில் ஒரு சுயேட்சை சின்னம்தான் என்றிருக்குமே தவிர அது முஸ்லிம் லீக்கின் சின்னம் என்று பதிய வைக்க முடியாது. இந்தச் சின்னத்தை பஞ்சாயத்து தேர்தல், நகராட்சி, மாநகராட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எனப் படிப்படியாக கொண்டு வந்து அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கலாமே தவிர திடீரென பாராளுமன்றத் தேர்தல் என்ற மிகப் பெரிய சமுத்திரத்தில் கொண்டு சென்று நிற்பது என்பது சொந்தச் சின்னத்தில் நின்றோம் என மார் தட்டிக் கொள்ளலாமே தவிர நமது இலக்கான பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோமோ என்ற கவலையும் பலருக்கு இருந்தது.
இத்தகைய நிலையில் உதயசூரியன் சின்னத்தில் நிற்போம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பேராசிரியர் அவர்கள் முஸ்லிம் லீக்கின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருப்பதனால் அவர் வேறு கட்சியின் சின்னத்தில் நிற்க முடியாது. இத்தகைய நிலையில் மாநில செயற்குழு மீண்டும் கூடி என்னை வேட்பாளராக்குவது என்றும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
* திமுக சின்னத்தில், திமுக உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நீங்கள் ஒரு முஸ்லிம் லீகராக செயல்பட முடியுமா?
நிச்சயமாக முடியும். முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் முழுமையாகச் செயல்படக் கூடிய உரிமையை திமுக தந்திருக்கிறது. திமுகவே வெளியிடுகின்ற அறிக்கைகளில் கூட முஸ்லிம் லீக் வேட்பாளர் என்றுதான் சொல்கின்றார்களே தவிர, திமுக வேட்பாளர் என்று சொல்லவில்லை. அத்தகைய அங்கீகாரத்தை அவர்கள் தருகிறார்கள். நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் ஒலிப்பதற்கு திமுக எத்தகைய இடர்பாடும் செய்வதில்லை. நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுடன் பேசும் பொழுதும் கூட சிறுபான்மை சமுதாயத்தின் விஷயங்களை முழுமையாக எடுத்து வைக்கும்படியும் அதில் எந்தத் தயக்கமும் காட்ட வேண்டாம் என்றும் அவர்களே சொல்கிறார்கள். அதனடிப்படையில் சமுதாயத்தின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் என்னுடைய பணி தொடரும்.
* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததா?
நிச்சயமாக. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம் தொடர்ந்து அந்தத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் நல்லவர்கள்; ஒழுக்கமானவர்கள்; சராசரி அரசியல்வாதி போல் செயல்பட மாட்டார்கள்; ஆக்கபூர்வமான அரசியல் செய்பவர்கள் என்ற கருத்து தொகுதி மக்களிடையே இருக்கிறது. அதே போன்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசு செய்திருக்கிற சாதனைகள் ஏழை எளிய அடித்தள மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. அவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் முன்னால் தேர்தலில் ஒரு சவால் என்று வருகின்ற பொழுது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் மக்களிடம் இருந்துள்ளது. ஆக இந்த இரண்டு காரணங்களாலும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது.
* தேர்தலில் உங்களுக்குக் கிடைத்த சமுதாய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
அந்தத் தொகுதியைப் பொறுத்தவரை சமுதாயத்தின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. எத்தகைய நிலையிலும் சமுதாயத்தின் எண்ணங்கள் மாறுபட்டு இருக்கவில்லை. இத்தனைக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சமுதாயத்தினரின் வாக்குகள் இந்தத் தேர்தலில் எனக்குக் கிடைத்துள்ளன. முஸ்லிம் சமுதாயத்தின் விழுக்காடு 13 முதல் 15 சதவீதம் மட்டுமே. சமூக ரீதியாகத் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று இந்தத் தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. அதனடிப்படையில் நமது உணர்வுகளை மதிக்கக் கூடிய, கூட்டணி தர்மத்தைப் பேணக் கூடிய எந்தத் தலைமை இருக்கின்றதோ அத்தகைய தலைமையோடு ஒத்துப் போய் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் நமது பிரதிநிதித்துவத்தை எப்படி அடைய முடியுமோ அப்படி அடைய சிந்தித்துச் செயல்படக் கூடிய தலைவர்களால் மட்டுமே சமுதாயத்தை வழிநடத்த முடியும். அந்த வகையில் முஸ்லிம் லீக் தன்னுடைய பணியைச் சரிவர நிறைவேற்றி இருக்கிறது என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.
* வேலூர் தொகுதியின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்கள் தீட்டியுள்ளீர்கள்? எந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?
வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஏழை மக்கள் அதிகம் வாழக் கூடிய தொகுதி. இன்னும் பல துறைகள் தன்னிறைவு பெறாத தொகுதி. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ அத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதனடிப்படையில் முதலாவதாக குடிநீர்த் திட்டம், அடுத்து சுகாதார வசதி, மருத்துவமனை, அடுத்து சாலை மேம்பாடு, அடுத்து கல்வித்துறை. கல்வி நிலையங்களை ஏற்படுத்துவது, புதிய கல்லூரிகள், கல்வி நிறுவனங்களின் விரிவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் செயலாற்றத் திட்டமிட்டுள்ளேன். மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையுடன் நம் சமுதாயப் பிரமுகர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி எந்தெந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து செயல்பட முடியுமோ அதன்படி இன்ஷா அல்லாஹ் செயல்படுவேன்.
* நீங்களே ஒப்புக் கொண்டீர்கள், வேலூர் தொகுதி ஏழை மக்கள் அதிகம் வாழும் தொகுதி என்று! கடந்த 60 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் ஏராளமான பீடித் தொழிலாளர்கள் மருத்துவம் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வறுமையிலும் நோயிலும் வாடி வருகிறார்கள். அவர்களின் கல்வி பொருளாதார மறுவாழ்விற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
பீடித் தொழிலாளர்களின் நிலை உடனடியாக மாற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும் கூட அதனைத் தொடர்ந்து குலத் தொழிலாகச் செய்து வருபவர்களுக்கு மத்தியில் உடனடி மாற்றம் கொண்டு வருவது இயலாததாகும். பீடித் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன நலத்திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அவற்றைக் கொண்டு வர முயற்சி செய்வேன். அவர்களின் நிலை மேம்பாடு அடைய அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர்களின் நிலை மேம்பாடு அடையும். பொருளாதாரத் தீர்வு என்பதெல்லாம் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல், அவரவர் நிலைகளுக்கு ஏற்றாற் போல மாறுபடும். ஆக பொருளாதார முன்னேற்றம் என்பதெல்லாம் ஒரு தற்காலிகத் தீர்வாகுமே தவிர அரசாங்கமே முன்வந்து ஏதேனும் நலத்திட்டங்களை வழங்கி கடனுதவிகள் வழங்கி செயல்பட்டாலும் உடனடியாக அவர்களுடைய வாழ்வில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது. இதற்கு ஒரே தீர்வு பீடித் தொழிலை குலத் தொழிலாகச் செய்து கொண்டு வருகின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை முடித்து மேல்படிப்பு கற்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். பீடித் தொழிலாளர்களின் குடும்பங்
களில் கல்வி விழிப்பு உணர்வை ஏற்படுத்தி அவர்கள் குடும்பங்களில் படித்த பட்டதாரிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறார்கள் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆவல். இந்த ஆவலைப் பூர்த்தி செய்ய முழு கவனம் செலுத்துவேன். இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு வீடாக படித்தவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். தனிப்பட்ட முறையில் என்னால் ஒவ்வொரு வீடாகச் செல்ல முடியாவிட்டாலும் கூட அந்தந்தப் பகுதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக பீடித் தொழிலாளர்கள் குடும்பங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு படித்தோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும். அதற்காக நானும் துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள்.
* உள்ளூர் வேட்பாளரையே தேர்தலுக்குப் பிறகு பார்ப்பது அரிதாகி விட்ட இன்றைய அரசியல் சூழலில் வெளியூர்க்காரரான நீங்கள் உங்கள் தொகுதி மக்களின் மனக்குறையை எப்படிப் போக்குவீர்கள்?
வேலூர் மக்களைப் பொறுத்தவரையில் உள்ளூர்க்காரரா வெளியூர்க்காரரா என்று பார்ப்பதில்லை. நல்ல எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றுகிறார்களா என்றுதான் பார்க்கிறார்கள். அதனடிப்படையில் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். தொகுதி மக்கள் என்னை நேரடியாகச் சந்திப்பதற்கும் அவர்களின் கோரிக்கைகளையும் மனுக்களையும் பெறுவதற்கு வேலூரிலே அலுவலகம் அமைத்து, அதிகப்படியான நேரம் தொகுதியிலே இருப்பதற்கும், தொகுதி முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்வதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தொகுதி மக்களின் மனக்குறையை முழுமையாகப் போக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது; என் தொகுதி மக்களுக்கும் இருக்கிறது.
* வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக கவிக்கோ அப்துர் ரஹ்மான் நியமிக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் நல்லவர். சிறந்த மனிதர். சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டப்படக் கூடியவை. அதனடிப்படையில் வக்ஃபு வாரியத்தின் தலைவராகத் திறம்படச் செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருடைய பணிகள் சிறப்பாக அமையும்.
* வக்ஃபு வாரியத்தின் பணிகளை மேம்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?
ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது. கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது நாம் எல்லாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவருடைய பணிகள் பட்டறிவுடனும் சிறப்பாகவும் அமையும்.
* சமுதாயத்தில் ஒற்றுமை மலர என்ன செய்ய வேண்டும்?
சமுதாயத்தில் சிதறிக் கிடக்கின்ற அமைப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தலைமையின் கீழ், ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் பிரதிநிதித்துவமும் முழுமையாகக் கிடைக்கும். நாளுக்கு நாள் சிதறுண்டு போவதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும். சிதறிப் போயிருக்கின்ற சமுதாயத்தின் தலைவர்கள் எல்லாம் ஏதோ தங்களையும் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதிக் கொண்டு தாமும் ஏமாந்து சமுதாயத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தின் சக்தி நாளுக்கு நாள் வீணாகிக் கொண்டிருக்கிறது என்கிற கவலை சமீப காலமாக எனக்கு அதிகரித்து உள்ளது. ஆகவே, சிதறிப் போய் இருக்கிற சமுதாயத்தை ஒன்றிணைக்க நான் கடுமையான முயற்சி எடுத்து இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இனிமேலும் சமுதாயத்தை ஒன்றிணைக்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
* சார்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; மாற்று அரசியலுக்கு வழி காண வேண்டும் என ம.ம.க. இந்த தேர்தலில் களம் இறங்கி படுதோல்வி கண்டுள்ளது. இது குறித்து...?
இந்தத் தோல்வி குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். தமுமுகவின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், மேலிடப் பிரதிநிதிகள் ஆகியோருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக ம.ம.க. அறிவிக்கப்பட்ட உடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எப்படியும் ஒரு சீட் கிடைக்கும் என்ற சந்தோஷம் எனக்கு இருந்தது. ஆனால் சிறு சிறு விஷயங்களைப் பெரிதாக்கிக் கொள்வதனால் நமது பிரதிநிதித்துவம் என்கிற இலக்கை அடைவதில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றுதான் நினைக்கிறேன். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கிடைக்கப் பெற்ற ஒரு தொகுதியினைக் கையகப்படுத்தி இருந்தால் முஸ்லிம் சமுதாயத்தின் இன்னும் ஒரு வேட்பாளர் இன்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்திருப்பார். இனி வருகின்ற காலத்தில் அந்த இயக்கத்தின் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் சமுதாயத்தின் இயக்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து நமது இலக்கான பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
* நீங்கள் பணியாற்றும் இஸ்லாமிய வங்கி குறித்து கூறுங்களேன்?
இஸ்லாமிய வங்கி என்பது ஏதோ முஸ்லிம்களுக்கான வங்கி என யாரும் நினைத்து விடக் கூடாது. அப்படி நினைத்தால் அது தவறு. பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும், வட்டிக் கொடுமையிலிருந்தும் அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பாற்றும் ஒரு சிறந்த, பொருளியல் திட்டம்தான் இஸ்லாமிய வங்கி முறை. இந்த வங்கி முறையே மிகச் சிறந்தது என உணர்ந்து மிகப் பெரிய பொருளாதார வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்டு, முஸ்லிம் நாடுகளையும் தாண்டி இப்பொழுது மேலை நாடுகள் கூட இதனை ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த வங்கி முறை இந்தியாவில் வர வேண்டும் என்று கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்பொழுது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அரும் பாடுபட்டு வருகிறது.
1987இல் ராமகிருஷ்ண ஹெக்டே கர்நாடக மாநில முதல்வராக இருந்த போது அவருக்கு இஸ்லாமிய வங்கி குறித்து எடுத்துச் சொல்லி இருக்கிறேன். ரிசர்வ் பேங்க் அதிகாரிகளுக்கும் இது குறித்து விளக்கி இருக்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக இஸ்லாமிய வங்கி முறை வந்து விடக் கூடாதென அதிகாரிகள் சிலர் செயல்பட்டதால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கக் கூடிய காங்கிரஸ் தலைமையிலான அரசு இஸ்லாமிய வங்கி முறையை செயல்படுத்துவதற்கு முயற்சி செய்யும் என முழுமையான எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அப்துர் ரகீப் அவர்களின் தலைமையிலான குழுவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்வேன்.
* கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக சச்சார் குழு அளித்துள்ள பரிந்துரைகள் செயல்வடிவம் பெற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
எந்தத் துறை சார்ந்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டாலும் அதில் சமூக ரீதியாக சச்சார் குழு பரிந்துரைகள் செயலாக்கம் பெற தொடர்ந்து பாடுபடுவேன். பல மாநிலங்களிலிருந்து அகில இந்திய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 பேரையும் ஒன்றிணைத்து சச்சார் கமிட்டி பரிந்துரையை அமலாக்குவதற்கான அவசியத்தை அவர்களிடம் விளக்கி அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவேன். இது குறித்து ஏற்கெனவே காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சதீதுத்தீன் உவைசி எம்.பி. இலட்சத்தீவு எம்.பி. ஆகியோரிடம் விவாதித்து இருக்கிறேன். இதனடிப்படையில் அடுத்த 3, 4 மாதங்களுக்குப் பிறகு முஸ்லிம் எம்.பி.க்களின் குழு சமூக நீதியை வலியுறுத்தியும் மதநல்லிணக்கத்திற்காகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை மீட்பதற்கும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இத்தகையக் கருத்தோட்டம் அனைத்து எம்.பி.க்களிடமும் காணப்படுகிறது. செயல்பாடுகளை வருகின்ற காலத்தில் காண்பீர்கள்.
* நீங்கள் வேலூர் தொகுதி எம்.பி. ஆக இருந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறது என்பதை உணருகிறீர்களா?
நான் பெருமையாகக் கருதுகிறேன். அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் நான் ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினராக இருந்தாலும் கூட ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பதாக உணருகிறேன். அத்தகையக் கடமையும் உணர்வும் எனக்கு உண்டு. எந்த ஒரு பாகுபாடும் இன்றி இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் வலுப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் முஸ்லிம்களால் மட்டுமே இட்டுச் செல்ல முடியும் என்ற வரலாற்றை உண்மைப்படுத்தும் வகையில் என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
* "சமரசம்' 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது...
மிகுந்த மகிழ்ச்சி. 30 ஆண்டுகளாக சமுதாயப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிற சமரசத்திற்கும் சமரசக் குழுவிற்கும் வாழ்த்துகள். நான் சமரசத்தோடு மிகவும் சமரசமானவன். சமரசத்தைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டிய விஷயத்தை யார் மனதும் புண்படாமல் வெளியிடுகிறீர்கள். இன்று ஆர்எஸ்எஸ்ஸும் பிஜேபியும் கூட பயன்படுத்தாத வார்த்தைகளை இன்று இருக்கக் கூடிய முஸ்லிம் வாராந்
திரப் பத்திரிகைகள் ஒருவரையொருவர் அவமானப்படுத்துவதற்கும் கேவலப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிற நேரத்தில் சமரசம் ஒரு நல்ல சமூகப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறது. "சமரசம்' வீட்டிற்கு வந்து விட்டது என்றால் அதை நாம் படிப்பதற்கு முன்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தரக் கூடிய ஒரு நன்மதிப்பை சமரசம் பெற்றுள்ளது. சமரசப் பணிகள் தொடர என்னுடைய வாழ்த்துகள்.
சந்திப்பு : M. முஹம்மது கவுஸ்


ந‌ன்றி : ச‌ம‌ர‌ச‌ம் மாத‌மிருமுறை இத‌ழ்

சென்னை செங்குன்றத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா!






சென்னை செங்குன்ற‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழாசென்னை செங்குன்ற‌ம் அருலிலுள்ள‌ கோணிமேட்டில் உருவாகி வ‌ரும் குட்வேர்ட் ப‌ப்ளிக் ஸ்கூல் வ‌ளாக‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழா இன்ஷா அல்லாஹ் ஜுலை 26 ஞாயிறு காலை 11 ம‌ணிய‌ள‌வில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்விற்கு ஜ‌மாஅத்தே இஸ்லாமி ஹிந்த‌ த‌மிழ்நாடு & பாண்டிச்சேரி த‌லைவ‌ர் ஏ. ஷ‌ப்பீர் அஹ்ம‌த், வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அர‌பிக் க‌ல்லூரி முன்னாள் முத‌ல்வ‌ர் ம‌வ்லானா பி.எஸ்.பி. ஜைனுலாபுதீன் பாக‌வி ஹ‌ஜ்ர‌த் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்க‌ உள்ளார்.

சென்னை ஆயிஷா ம‌ருத்துவ‌ம‌னையின் த‌லைவ‌ர் ஷேக் முஹ்ஸின், ர‌ஹ்ம‌த் ப‌திப்ப‌க‌ மொழிபெய‌ர்ப்புக் குழு மேலாய்வாள‌ர் ம‌வ்ல‌வி அ. முஹ‌ம்ம‌து கான் ஃபாஜில் பாக‌வி, எல்.கே.எஸ். த‌ங்க‌ மாளிகை த‌லைவ‌ர் எல்.கே.எஸ். சைய‌த் அஹ்ம‌த், இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் ட்ர‌ஸ்ட் துணைத்த‌லைவ‌ர் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌த் உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்க‌ உள்ள‌ன‌ர்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

தொட‌ர்புக்கு : 988 430 6902 / 98 401 23536

Monday, July 20, 2009

கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு: எம்.பி. கோரிக்கை!!

திருநெல்வேலி, ஜூலை 18: கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளித்து ஜமாஅத் பதிவு முறை தொடர தமிழக அரசு வழி செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

திருநெல்வேலியில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

தமிழ்நாட்டில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், ஜனநாயக முற்போக்கு கூட்டணித் தலைவரான முதல்வர் கருணாநிதி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்போம். ஐந்து தொகுதிகளிலும் எந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், எங்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுவது போலவே எண்ணி அவர்களது வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்றுவோம்.

திருமண பதிவுச் சட்டம்: தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லீம்களுக்கு விலக்கு அளிக்க முதல்வரிடமும், துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

முஸ்லீம்கள் இதுவரையில் தங்களது திருமணங்களை அவர்கள் சார்ந்துள்ள ஜமாஅத்துகளில் பதிவு செய்து வருகின்றனர். அந்த பதிவு ஆவணங்கள் நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இப்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு என்பது, ஜமாஅத் பதிவு முறையை குலைத்துவிடும் என அஞ்சுகிறோம். எனவே, ஜமாஅத் பதிவு முறை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். நடப்பு சட்டப் பேரவைக் கூட்டம் முடிவடைந்த உடன் இந்த பிரச்னைக்கு நல்லதொரு அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.

சச்சார் கமிட்டி பரிந்துரைகளில் குறைந்தபட்ச பரிந்துரைகளை அமல்படுத்தக்கூட தற்போது அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதாது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கை, லிபரான் ஆணைய அறிக்கை ஆகியவற்றை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் நம்புகிறோம்.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டில் தற்போது 3080 பேருக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இது கடந்த 1991 ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் ஆனது. இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.

எங்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 1-ல் குற்றாலத்தில் நடைபெற உள்ளது. அதில், கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்கள் பாராட்டப்பட உள்ளனர் என்றார் அப்துர் ரஹ்மான்.

பேட்டியின்போது, மாநில பொதுச்செயலர் கே.ஏ.எம். அபுபக்கர், மாநில துணைத் தலைவர் கோதர்மைதீன், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாநகர் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். மில்லத் இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ புனித‌ மிஃராஜ் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி!!






துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித‌ மிஃராஜ் இரவினையொட்டி சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியினை தெய்ரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் 19.07.2009 ஞாயிற்றுக்கிழ‌மை இர‌வு ந‌ட‌த்திய‌து.
புனித‌ மிஃராஜ் சிறப்பு நிக‌ழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் கூத்தாந‌ல்லூர் அஹ‌ம‌து முஹைதீன் த‌லைமை வ‌கித்தார். ம‌வ்ல‌வி க‌லீலுர் ர‌ஹ்மான் பிலாலி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

ஈமான் அமைப்பின் ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். க‌ல்வித்துறை செய‌லாள‌ர் ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் சிற‌ப்புப் பேச்சாள‌ர் அலி அஸ்க‌ருக்கு பொன்னாடை அணிவித்து கௌர‌வித்தார்.

ம‌வ்ல‌வி அலி அஸ்க‌ர் பிலாலி புனித‌ மிஃராஜ் இர‌வின் சிற‌ப்புக்க‌ளை விவ‌ரித்தார். ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றி கூறினார்.

நிக‌ழ்ச்சியினை ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா தொகுத்து வ‌ழ‌ங்கினார். அத‌னைத் தொட‌ர்ந்து பாம்புகோவில்ச‌ந்தை ம‌வ்ல‌வி ஹ‌னீஃப் ம‌ன்பஈ த‌வ்பா தொழுகை ந‌ட‌த்தினார். துஆவிற்குப் பின்ன‌ர் நிக‌ழ்ச்சி நிறைவுற்ற‌து.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

த‌க‌வ‌ல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Friday, July 17, 2009

பாட‌க‌ர் குல் முஹ‌ம்ம‌துவுக்கு க‌லைமாம‌ணி விருது!!

காரைக்காலைச் சேர்ந்த‌ பாட‌க‌ர் ஹாஜி இ. குல் முஹ‌ம்ம‌துவுக்கு புதுவை அர‌சு கலைமாம‌ணி விருது வ‌ழ‌ங்கி கௌர‌வித்துள்ள‌து.

ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌ விழாவில் க‌லைமாம‌ணி விருதினை புதுவை முத‌ல்வ‌ர் வைத்திய‌லிங்க‌ம் வ‌ழ‌ங்கினார். விழாவில் பொதுப்ப‌ணித்துறை அமைச்ச‌ர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜ‌ஹான், அமைச்ச‌ர் க‌ந்த‌சாமி, பாண்டிச்சேரி மேய‌ர் உள்ளிட்ட‌ பிர‌முக‌ர்க‌ள் ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

பாட‌க‌ர் குல் முஹ‌ம்ம‌துவின் பாட‌ல்க‌ளைக் கேட்க‌ :

http://www.youtube.com/watch?v=u40fPJiOkrk

http://tamilmuslimtube.magnify.net/video/TAMIL-MUSLIM-SONG-NAGORE-KALAI-3


விருதுபெற்ற‌ குல் முஹ‌ம்ம‌துவை வாழ்த்துகிறோம்.

Wednesday, July 15, 2009

திறன் குன்றிய மாணவர்களுக்கு 'சிறப்பு கல்வி'

இளம் மார்க்க அறிஞர்களே! பல்கலைப் பட்டம் பெறலாம் வாரீர்!!


சென்னையில் ஆலிம்களின் சொற்பொழிவு

இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!

இஸ்ரேல் இந்த பூமிப் பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. மண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது. ஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.

இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக் கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது. நரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.

அதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர். அரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.

இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது. மத்திய அரசின் உயர் அதிகாரி களையும் இந்நிறுவனம் உரிய(?) விதத்தில் அணுகி வருகிறது.

Israel International Co-operation Institute (IICI) என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர். 14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

சொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் (ஈங்ற்ழ்ஹப் நங்ழ்ஸ்ங்ழ்) பதிவு செய்யப்படும்.

இதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் (டங்ழ்ள்ர்ய்ஹப்) இஸ்ரேல் பார்வையிட முடியும்.
பயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.

மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம்.

Monday, July 13, 2009

சென்னை செங்குன்ற‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழா!!

சென்னை செங்குன்ற‌ம் அருலிலுள்ள‌ கோணிமேட்டில் உருவாகி வ‌ரும் குட்வேர்ட் ப‌ப்ளிக் ஸ்கூல் வ‌ளாக‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழா இன்ஷா அல்லாஹ் ஜுலை 26 ஞாயிறு காலை 11 ம‌ணிய‌ள‌வில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்விற்கு ஜ‌மாஅத்தே இஸ்லாமி ஹிந்த‌ த‌மிழ்நாடு & பாண்டிச்சேரி த‌லைவ‌ர் ஏ. ஷ‌ப்பீர் அஹ்ம‌த், வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அர‌பிக் க‌ல்லூரி முன்னாள் முத‌ல்வ‌ர் ம‌வ்லானா பி.எஸ்.பி. ஜைனுலாபுதீன் பாக‌வி ஹ‌ஜ்ர‌த் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்க‌ உள்ளார்.

சென்னை ஆயிஷா ம‌ருத்துவ‌ம‌னையின் த‌லைவ‌ர் ஷேக் முஹ்ஸின், ர‌ஹ்ம‌த் ப‌திப்ப‌க‌ மொழிபெய‌ர்ப்புக் குழு மேலாய்வாள‌ர் ம‌வ்ல‌வி அ. முஹ‌ம்ம‌து கான் ஃபாஜில் பாக‌வி, எல்.கே.எஸ். த‌ங்க‌ மாளிகை த‌லைவ‌ர் எல்.கே.எஸ். சைய‌த் அஹ்ம‌த், இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் ட்ர‌ஸ்ட் துணைத்த‌லைவ‌ர் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌த் உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்க‌ உள்ள‌ன‌ர்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

தொட‌ர்புக்கு : 988 430 6902 / 98 401 23536

Sunday, July 12, 2009

மைசூர்:பாப்புலர் ஃபிரண்ட் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் அராஜகம்,ஏராளமானோர் காயம்,நூற்றுக்கணக்கானோர் கைது









கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று மைசூரில் பள்ளிவாசல் காம்பவுண்டில் பன்றியின் மாமிசத்தை எறிந்ததால் ஏற்பட்ட கலவரத்தில் அபாண்டமாக குற்றம் சுமத்தி 200 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததைக்கண்டித்தும் அவர்களை உடனே விடுதலைச்செய்யக்கோரியும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது கர்நாடகா காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் கைதுச்செய்யப்பட்டுள்ளனர்.இதில் பாப்புலர் ஃபிரண்ட் மாநிலத்தலைவர் கே.அப்துல்லத்தீப் மற்றும் பொதுச்செயலாளர் அஃப்ஸர் பாஷா ஆகியோரும் அடங்கும். கைதுச்செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலைச்செய்யப்படவில்லை. இச்சம்பவத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயலகம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் ஆலிம்களின் சொற்பொழிவு !!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!



பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16.07.2009 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 11:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'மண்ணு வ ஸல்வா உணவகம்' முதல் தள அரங்கத்தில் குவைத் இந்திய தூதரகத்தில் பதிவு பெற்ற அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்' ஏற்பாடு செய்யும் 'மாபெரும் இஸ்ரா ஃ மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி'... அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் நடைபெற இருக்கின்றது.

சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி, சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரி (இலங்கை) மற்றும் சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்றுவார். துஆவுடன் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இனிதே நிறைவுபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார்கள், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விழாக்குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற என்றும் மாறா அன்புடன்...

குவைத்திலிருந்து...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை!!


த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை
த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை வ‌ழ‌ங்கும் க‌ல்வி உத‌வித் தொகை குறித்து தின‌த்த‌ந்தி நாளித‌ழில் வெளிவ‌ந்த‌ விப‌ர‌ம் இத்துட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌னை ச‌முதாய‌ மாணாக்க‌ர்க‌ள் ப‌ய‌ன் பெறும் வ‌ண்ண‌ம் அந்த‌ந்த‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் த‌க‌வல் ப‌ல‌கையில் இட‌ம்பெற‌ச் செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

உலகத் தமிழர் பேரவைக்கு வ.களத்தூர் முகைய்யதீன் நியமனம்!!


உலகத் தமிழர் பேரவைக்கு வ.களத்தூர் முகைய்யதீன் நியமனம்

உலகத் தமிழ்க் கவிஞர் பேரவைக்கு பாவலர் வ.களத்தூர் கவிஞர் மு. முகைய்யத்தீன் தமிழ் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உளுந்தூர் பேட்டை நகர தலைவராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். முப்பது ஆண்டுகளாக இலக்கியப் பணி செய்யும் மு. முகைய்யதீன் எழுதிய கவிதைகள் 50 க்கும் மேற்பட்ட இதழ்களில் 600 க்கும் மேற்பட்ட கவிதைகள் இடம் பிடித்துள்ளன.

இவர் சிறந்த கவிஞரும், மனிதநேய மிக்கவரும் ஆவார். இவரை உலகத்தமிழ்க் கவிஞர் பேரவையின் பொதுச்செயலாளர் பனப்பாக்கம் புலவர் சீத்தா தமிழ் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்தார்.

இந்த உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையில் முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மலேசியா டத்தோ சாமிவேல் ஆகிய இருவரும் சிறப்பு புரவலராக உள்ளனர்.
மற்றும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, புதுடெல்லி, கர்நாடகா, கேரளா, மும்பை, இலங்கை, புதுவை ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் அறிஞர்களும் இந்த உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை அமைப்பில் உள்ளனர்.

நன்றி : மணிச்சுடர் 17/18 ஜுன் 2009

நீதிமன்ற காவலில் இருந்த முஸ்லிம் மீது 6 பொய் வழக்கு!!


திரு. அப்துல் ரசாக் அவர்கள்


மதுரை: வேறு ஒரு வழக்கில் கோர்ட் காவலில் இருந்த போது போலீசார் பொய்யாக பதிவு செய்த 6 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோரிய மனு குறித்து டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தைசேர்ந்த மக்கள் விக்டரி இயக்க தலைவர் அப்துல் ரசாக் ( 9443465765) தாக்கல் செய்த ரிட் மனு: நான், ஊனமுற்றவர்கள், விபத்தில் பாதிக்கப்படுவோர், முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். ராமநாதபுரத்தில் கடந்தாண்டு நவம்பரில் மழை பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்ட போது பாரதிநகர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். இதை மனதில் வைத்து என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். இவ்வழக்கில் நான் முன்ஜாமீன் பெற்றேன். பிறகு 2008 டிச., 5ல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னை போலீசார் கைது செய்தனர். மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் என்னை விடுவிக்கும்படி அன்று மாலை 4 மணிக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில் " அன்று காலையில் நடந்த மறியல் போராட்டத்தில் கைதாகி ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் போலீஸ் வாகனங்களின் இருக்கைகளை சேதப்படுத்தியதாக,' என் மீது 6 வழக்குகளை போலீசார் பொய்யாக பதிவு செய்தனர். போலீசாருக்கு எதிராக போராடுவதால் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜின்னா ஆஜரானார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ""மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், டி.ஜி.பி., எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப,'' உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர்

Friday, July 10, 2009

தமிழக ஹஜ் யாத்ரீகர்கள் எண்ணிக்கை உயர்வு!!

சென்னை: இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்பி விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தமிழக ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு இதுவரை 16 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி செயல் அதிகாரி முகம்மது ஓவைஸ் கூறியுள்ளார்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் போலீஸ் விசாரணை நடைமுறையை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஓவைஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விண்ணப்பிக்கும் யாத்ரீகர்ள் 2 மாதங்களுக்குள் பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக போலீஸ் விசாரணை நடைமுறையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாஸ்போர்ட் எட்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் அது புதுப்பிக்கப்பட மாட்டாது. ஒரு வேளை இந்த பாஸ்போர்ட்டை நிரந்தரமாக்க விரும்புவோர், ஹஜ்யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டால் பாஸ்போர்ட் நிரந்தரமாக்கப்படும்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்பி இதுவரை 3.57 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஹஜ் கமிட்டி மூலம் 1.04 லட்சம் பேர் செல்லலாம்.
இதில், தனியார் மூலம் 45,000 பேர் செல்ல முடியும்.
மற்றவை அரசு கோட்டா ஆகும்.ஹஜ் யாத்திரையில் தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை வந்துள்ளது.

அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.ஹஜ் யாத்திரையின்போது யாத்ரீகர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை, கடைப்பிடிக்கக் கூடாதவை ஆகியவை குறித்து உருது மற்றும் இந்தியில் மாத இதழ் ஒன்றை வெளியிட்டு வருகிறோம். இதன் ஆங்கிலப் பதிப்பு விரைவில் வெளியாகும் என்றார் ஓவைஸ்.

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு!!

துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் 'கோடையும் வாடையும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புக் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு 10.07.2009 வெள்ளிக்கிழ‌மை காலை க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற்ற‌து.
கோடையும் வாடையும் என்ற‌ சிற‌ப்பு க‌விதை நிக‌ழ்ச்சியின் ந‌டுவ‌ர்க‌ளாக‌ திருப்ப‌த்தூர் அப்துல் வாஹித், ப‌ழ‌னி ஆகியோர் இருந்த‌ன‌ர். க‌விஞ‌ர்க‌ள் சிம்ம‌ பார‌தி, ஜியா, ச‌ந்திர‌சேக‌ர், க‌மால், ந‌ர்கிஸ், ம‌லிக்கா, நிலாவ‌ண்ண‌ன், அமுதா ப‌த்ம‌நாப‌ன், ஜெயா ப‌ழ‌னி, வேலூர் க‌ந்த‌நாத‌ன், கிளிய‌னூர் இஸ்ம‌த், ராஜா க‌மால் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌விதை வாசித்த‌ன‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியின் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா, க‌ராமா மெடிக்க‌ல் சென்ட‌ர் டாக்ட‌ர் ச‌ம்ப‌த் குமார், முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளி ஓய்வுபெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

த‌மிழ்த்தேர் இத‌ழை டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை உத‌ய‌குமார் பெற்றுக்கொண்டார்.

சிற‌ப்புவிருந்தின‌ர்க‌ள் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கியும் கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ள் குறித்த‌ அறிமுக‌த்தை க‌லைய‌ன்ப‌ன் ம‌ற்றும் முதுவை ஹிதாய‌த் ஆகியோர் செய்த‌ன‌ர்.

க‌விஞ‌ர் நிலாவ‌ண்ண‌ன் தாய‌க‌ம் செல்வ‌தையொட்டி அவ‌ருக்கு பிரியாவிடை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. அவ‌ருக்கு நினைவுப் ப‌ரிசும் வ‌ழ‌ங்கப்ப‌ட்ட‌து. அத‌னைத்தொட‌ர்ந்து அவ‌ர் ஏற்புரை நிக‌ழ்த்தினார்.
செயலாள‌ர் ச‌ந்திர‌சேக‌ர் ந‌ன்றி கூறினார். நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ஜியாவுத்தின், சிம்ம‌பார‌தி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ஏற்பாடு செய்த‌ன‌ர்

Thursday, July 9, 2009

துபாயில் ஜும்ஆ அல் ம‌ஜித் க‌லாச்சார‌ மைய‌ம்.








துபாயில் ஜும்ஆ அல் ம‌ஜித் க‌லாச்சார‌ மைய‌ம் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து. இங்கு ப‌ழ‌ங்கால‌ அரிய‌ வ‌கை நூல்க‌ள். திருக்குர் ஆனின் ப‌ழைய‌ பிர‌திக‌ள், க‌லாச்சார‌ த‌க‌வ‌ல்க‌ள் உள்ளிட்ட‌வை சேக‌ரிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.
தொழில‌திப‌ர் ஜும்ஆ அல் ம‌ஜித் த‌ன‌து சுய‌ ஆர்வ‌த்தின் கார‌ண‌மாக இத‌னை உருவாக்கி உல‌கெங்கிலும் இருந்து வ‌ரும் ஆராய்ச்சியாள‌ர்க‌ளுக்கு ப‌ய‌ன‌ளிக்கும் வித‌மாக‌ இத‌னை செய‌ல்ப‌டுத்தி வ‌ருகிறார். இங்கு சிற‌ப்பு வாய்ந்த‌ நூல‌க‌மும் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.
ச‌மீப‌த்தில் த‌மிழ‌க‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்த‌ மார்க்க‌ அறிஞ‌ர்க‌ள் ம‌வ்ல‌வி அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம், ம‌வ்ல‌வி உம‌ர்ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ ஆகியோர் இங்குள்ள‌ நூல்க‌ள் குறித்து த‌ங்க‌ள‌து ம‌கிழ்வினை வெளியிட்டன‌ர். மேலும் த‌ங்க‌ பிளேட்டிலான‌ திருக்குர்ஆனைப் பார்த்து விய‌ந்த‌ன‌ர். ப‌ல்வேறு நூல்க‌ள் குறுந்த‌க‌டுக‌ளாக‌ வெளியிட‌ப்ப‌டுகிற‌து.
இத‌னை அனைவ‌ரும் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ அவ‌ர்க‌ள் வேண்டுகோள் விடுத்த‌ன‌ர். இம்மைய‌த்தின் தொட‌ர்பு முக‌வ‌ரி

Tel.:04-2624999
Fax:04- 2696950
P.O.:55106- Dubai - UAE
E-mail:info@almajidcenter.org

www.almajidcenter.org

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இடவசதி இல்லாததால் விண்ணப்பதாரர்கள் அவதி

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இடவசதி இல்லாததால் விண்ணப்பதாரர்கள் அவதி


மதுரை, ஜுலை.9-

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வெளிïர் விண்ணப்பதாரர்கள் உட்கார இடமின்றி தவிக்கின்றனர்.

இடநெருக்கடி

மதுரை ரேஸ்கோர்ஸ் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு மதுரை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல், பெயர், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக நேரில் வருகிறனர்.

தினமும் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வருவதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை சந்திப்பதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் உட்காருவதற்கு இடவசதி செய்து தர முடியாத சூழ்நிலை உள்ளது.

புதிய கட்டிடம்

இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஜோஸ்.கே.மாத்ï கூறும்போது, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி கிடையாது. மேலும், மத்திய அரசு அலுவலகமாக இருப்பதால் இங்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கும் வழியில்லை.

இதனால் வெளிïர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளது. இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளோம். தமிழக அரசு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு என நிலம் ஒதுக்கி தந்தால் புதிய அலுவலகம் கட்டப்படும். அப்போது தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று கூறினார்.

Wednesday, July 8, 2009

தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் இமாம் காலமானார் !!


புதுதில்லி, ஜூலை 8- புகழ்பெற்ற தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் ஷாஹி இமாம் மவுலானா சயத் அப்துல்லா புஹாரி இன்று காலமானார். அவருக்கு வயது 87.
இத்தகவலை ஜும்மா மசூதியின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவுலானா சயத் அப்துல்லா புஹாரி தில்லி ஜும்மா மசுதியின் 12வது ஷாஹி இமாம் ஆவார். அவரது தந்தை மவுலானா சயத் ஹமீத் புஹாரி 11வது ஷாஹி இமாமாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் உள்ள சம்ஹார் என்னும் ஊரில் பிறந்த மவுலானா சயத் அப்துல்லா புஹாரி தில்லியில் உள்ள அப்துர் ரப் மதரஸôவில் கல்வி பயின்றார். 1946ல் இவர் ஜும்மா மசூதியின் துணை ஷாஹி இமாமாக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இதில், அகமது புஹாரி என்னும் மகன் தான் தற்போது ஜும்மா மசூதியின் ஷாஹி இமாமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

த‌மிழ‌க‌ அர‌சின் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்ட முன்வடிவு!!



மறுபரிசீலனை செய்ய முஸ்லிம் லீக்கின் த‌லைமையில் ச‌முதாய‌ அமைப்புக‌ள் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் திருமணங் கள் அனைத்தையும் கட்டா யமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் களின் ஐயப்பாட்டை தமிழக அரசு போக்க வேண்டுமென முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொண்டு முஸ்லிம் அமைப்புகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

திருமணங்களை கட் டாயமாக பதிவு செய்வ தற்கு வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக முஸ்லிம்களிடையே எழுந் துள்ள அச்ச உணர்வை போக்கவும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு அதனை கொண்டு செல்ல வும் ஒருமித்த கருத்தை பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் 7-7-09 செவ்வாய் மாலை 5.30 மணிக்கு சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் பிரசி டெண்டில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட்டில் நடை பெற்ற இக் கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் ஆம்பூர் எச். அப்துல் பாஸித், சட்ட மன்ற முன்னாள் இந்திய தேசிய லீக் உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், மாநில பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், அணிகளின் அமைப்பா ளர்கள் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், என். ஹாமித் பக்ரீ, கே.எம். நிஜாமுத்தீன், மில்லத் இஸ்மாயில், தமிழ் நாடு வக்ஃபு வாரிய உறுப் பினரும், தமிழ்நாடு மாநில தேசிய லீக் பொதுச் செயலாளருமான திருப்பூர் அல்தாப், த.மு.மு.க. மாநிலச் செயலாளர் ஏ.எஸ். முஹம்மது ஜுனைது, த.மு.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் பி.எல்.எம். யாசின்,
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொறுப்பாளர் அப்போலோ முஹம்மது ஹனீபா, சென்னை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினருமான எம். முஹம்மது சிக்கந்தர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அ.ச. உமர் பாருக், ஐக்கிய சமாதான அறக்கட்டளை பொறுப்பாளர் சி. அபூபக்கர் சித்திக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை செய்தித் தொடர்பாளர் கே.எம். இல்யாஸ் ரியாஜி, சுன்னத் ஜமாஅத் ஆன்மீக பேரவை தலைவர் தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் எஸ். என். சிக்கந்தர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர், தமிழக சட்டமன்ற முன்னாள் இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம். நாகூர் மீரான், பேராசிரியர் டாக்டர் சையத் ரபீக் அஹமது, பேராசிரியர் ஆர்.என். இக்பால் அஹமது ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு-
தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களை யும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.

தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப்பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.

நடைபெற்ற நாடாளு மன்ற தேர்தல் அறிக்கை யில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த தி.மு.க. பாடுபடும் என்று டாக்டர் கலைஞர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரி சீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம் களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து பின் னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் என். ஜெய்னுல் ஆபிதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மவ்லவி ஹாமித் பக்ரீ இறைமறை ஓதினார்.

இக் கூட்டத்தில் மாநில முஸ்லிம் லீக் விவசாய அணி துணை அமைப் பாளர் திருச்சி வி.எம். பாரூக், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, செயலாளர் ப+வை எம்.எஸ். முஸ்தபா, வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.எச். இஸ்மாயில், மாநில முஸ்லிம் லீக் கல்வி மேம் பாட்டு துணை அமைப் பாளர் ஏ. ஷேக் மதார், யு. முஹம்மது சலீம் சித்தீக், கே.எம். ஹசன் சேக், வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. எம். ரஃபி, பூவை காதர், டி.எம்.கே. ஹாஜா நஜ் முத்தீன், திருவான்மியூர் காஜா, சுன்னத் ஐக்கிய ஜமாஅத் பேரவை கிருஷ் ணாம்பேட்டை கிளை செயலாளர் எம்.ஏ. முஹம் மது இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹ், ஜமாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மவ்லவி சலீம் சிராஜி துஆ ஓதினார்.