Tuesday, March 31, 2009

பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து தலிபான்களின் பெயரை நீக்க கோரிக்கை

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து தலிபான்களின் பெயரை நீக்க வேண்டுமென ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 142 தீவிரவாதத் தலைவர்களின் பெயர்கள் ஐ.நா.வின் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தலிபான் இயக்கத் தலைவர் முல்லா முகமது ஓமருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய் விரும்புகிறார்.
எனவே, பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் அல்ஹைடா இயக்கத்தில் இடம்பெறாத தலிபான் தீவிரவாதிகளின் பெயரை தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென ஐ.நா.வுக்கு கார்சாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய தூதரகம் உட்பட 103 நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல் திருட்டு; சீனா மீது குற்றச்சாட்டு

இந்தியத் தூதரகம் உட்பட 103 நாடுகளிலுள்ள கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடியதாகவும் உளவு பார்த்ததாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவரது அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் உலகின் பல நாடுகளிலுள்ளன. இந்நிலையில் இந்த அலுவலக கணினிகளில் தகவல்கள் திருடப்படுவதாகவும் உளவு பார்க்கப்படுவதாகவும் தலாய்லாமா அமைப்பினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, இதுபற்றி விசாரணை நடத்துமாறு கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக் கொண்டது. அவர்கள் இத்தகைய சைபர் குற்றங்களைத் துப்பு துலக்குவதில் முன்அனுபவம் பெற்றவர்கள். அதன் அடிப்படையில் இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சீனாவிலிருந்து செயற்படும் ஒரு கணினி உளவுக் கும்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 103 நாடுகளில் 1,295 கணினிகளில் இந்தக் கும்பல் ஊடுருவியுள்ளது. இதற்காக பிரத்தியேகமான மென்பொருளை இக்கும்பல் பயன்படுத்தி வருகிறது. கணினிகளில் திருட்டுத்தனமாகப் புகுந்து ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவதுடன் அந்தக் கணினிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
தலாய்லாமாவை மட்டுமன்றி தெற்கு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசாங்கங்களை குறிவைத்து இக்கும்பல் இயங்கியுள்ளது. தற்போதும் வாரத்துக்கு 10இற்கும் அதிகமான புதிய கணினிகளில் இக்கும்பல் ஊடுருவி வருவதாக இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இந்தக் கும்பல் வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தின் கணினியிலும் ஊடுருவியுள்ளது. பன்னாட்டு (நேட்டோ) படைகளின் கணினியிலும் ஊடுருவியுள்ளது. ஆனால், அமெரிக்க அரசின் அலுவலக கணினிகளில் புகுந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பல்வேறு நாட்டு தூதரகங்கள், வெளியுறவு அமைச்சகங்கள், அரச அலுவலகங்கள், இந்தியா, பிரசெல்ஸ், லண்டன், நியூயோர்க் ஆகிய இடங்களிலுள்ள தலாய்லாமா அலுவலக கணினிகள் ஆகியவற்றில் சீன கணினி உளவுக் கும்பல் ஊடுருவியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தக் கும்பலின் தகவல் திருட்டுக்கு சில ஆதாரங்களும் சிக்கியுள்ளன. உதாரணமாக ஒரு வெளிநாட்டுத் தூதரக அதிகாரியை நேரில் வருமாறு தலாய்லாமா அலுவலகம் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்தது. அதை மோப்பம் பிடித்த சீன அரசு இந்த அதிகாரியை தொடர்பு கொண்டு அங்கு செல்ல வேண்டாம் என்று கூறி தடுத்து விட்டது.
இருப்பினும் இந்த சைபர் குற்றத்தில் சீன அரசுக்கு தொடர்பு இல்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நியூயோர்க் நகரிலுள்ள சீன தூதரகச் செய்தித் தொடர்பாளரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் எவரும் பெரிதாக கவனம் எடுப்பதில்லை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை
கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி முழு அரச வளங்களையும் பயன்படுத்தி வரும் அரசாங்கம் புதிய உத்திகளைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது. தமது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் ஆட்களை பயமுறுத்தி அரசாங்கத்தின் சட்டத்துக்கு முரணான வேலைகளையும் அங்கீகரித்து ஆசீர்வதிக்கும் நிலை உருவாகி வருகிறது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மிரட்டல்களுக்கு ஒரு போதும் அடிபணியாது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு புக்கர் மண்டபத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும் மு.கா.தவிசாளருமான பசீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி எம்.பி.தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் எம்.பி. உட்பட பலரும் இக் கூட்டத்தில் உரையாற்றினர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
கடந்த வருடம் இதே தினம் நான் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தபோது என்னுடன் சேர்ந்து இரண்டு பேர் ராஜிநாமா செய்தார்கள். ஏனெனில், அன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் ஒரு சவாலை எதிர்நோக்க வேண்டி இருந்தது.
எமது கட்சியில் இருந்து ஆட்களைப் பிடுங்கி எடுத்து விட்டு, முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தார். இந்த சவால் கடைசி நேரத்தில் வந்த போது நாமும் தைரியமாக முடிவு எடுத்தோம். எமக்கு பாராளுமன்ற ஆசனங்கள் முக்கியமல்ல. இந்த அரசாங்கத்தின் சவாலை முறியடிக்க வேண்டும் என்பதற்காக திருகோணமலையில் போட்டியிட்டு சவால்களை முறியடித்தோம்.
பரந்த மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டி ஒரு தீர்மானத்திற்கு வருகின்ற போது மனதுக்குள் எமக்கு ஒரு திருப்தியும் தைரியமும் வரும். இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுப்பதற்கு தைரியமான, பதவிகளை கூட தூக்கி எறிந்துவிட்டு வரக்கூடிய, எமக்கு என்றொரு கட்சியும் அதனை சார்ந்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்ற உணர்வு மிகப் பிரதானமானது.
கொழும்பு மாவட்டத்தில் நமது கட்சி 1988 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மாகாண சபைத் தேர்தலிலும், மாநகர சபைத் தேர்தல்களிலும் சேர்ந்து போட்டியிட்டதே இல்லை. எனவே, இப்படியான ஒரு முடிவை இந்த மாகாண சபைத் தேர்தல் மாற்றுவதற்கான எந்த நிர்ப்பந்தமும் எமக்கு ஏற்படவில்லை.
எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பிறகு இம்மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்படும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தனை ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறது என்பது தான் முஸ்லிம்களின் தன்மானம், சுயகௌரவம் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த சமூகத்தின் ஆத்திரமும், ஆவேசமும் இந்த அரசுக்கெதிராக இதன்மூலம் வெளிப்பட்டிருப்பதை சர்வதேச சமூகம் அறிந்து கொள்ளும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் மிகப் பலமாக இருக்கிறது. நான்கு மாநகர சபை உறுப்பினர்களை வைத்திருக்கிறோம். 2 மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம். ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் வைத்திருக்கிறோம்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் பற்றி சர்வதேச ரீதியாக எவரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இது குறித்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்காக இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான அதிகார பரவலாக்கலுக்கு போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அந்தளவுக்கு தமிழ் நாட்டில் அப்படி ஒரு அழுத்தம். இதுவரை 12 பேர் தற்கொலை புரிந்துள்ளார்கள்.
பல தடவைகள் டெல்லிக்கு போயுள்ள நான் அந்தக் கட்சியுடனும், அரசின் மேல் மட்ட உறுப்பினர்களுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். மன்மோகன் சிங் இலங்கை வந்த போது சந்தித்து எமது பிரச்சினை குறித்துப் பேசியிருக்கிறோம். ஆனால், எமது பிரச்சினைகளை இன்னும் கறுப்புக் கண்ணாடியோடு தான் பார்க்கிறார்கள்.
எனவே, முஸ்லிம்களாகிய எமது பிரச்சினை வெறுமனே இலங்கையில் இருந்து மட்டும் தீர்க்கப்படும் பிரச்சினை அல்ல. அது நாட்டு எல்லை கடந்து போன ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது.
அண்மையில் நாம் ஜனாதிபதியைச் சந்தித்தோம். சகல தமிழ் கட்சிகளையும் அழைத்திருந்தார்கள். ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன் பாராளுமன்றத்தில் நான் உரையாற்றியிருந்தேன். அதற்குப் பிறகே சற்று அவசரப்படுத்தி எமக்கான அழைப்பு தொலை நகலில் வந்தது.
"தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கூப்பிட்டிருக்கிறீர்கள். சம்பந்தன் எம்.பி.ஒரு மூத்த தமிழ்த் தலைவர். 50 களில் இருந்து தமிழரசுக் கட்சியோடு இருந்த மிக மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஒருவரை இந்த அரசின் ஜனாதிபதி அழைத்தது ஜனாதிபதி மாளிகைக்கு அல்ல 4 ஆவது மாடிக்கு வருமாறு சீ.ஐ.டி. அழைத்திருந்தது' என்று நான் விமர்சித்திருந்தேன்.
பயமுறுத்தி அடிபணிய வைக்கிற மாதிரியான இந்த அழைப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டிருந்தது. கட்சியை அழைக்கவில்லை. ஆனால், எம்.பி.மாரை அழைக்கிறார்கள்.
இந்த அரசு இன்று வாழ்வதே மற்றைய கட்சிகளின் எம்.பி.மார்களை பிடுங்கியே, ஜனாதிபதியின் கட்சிக்கு சரியாக 56 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் தேவை என்றால் ஒரு பாராளுமன்றத் தேர்தலை நடத்தலாம். ஆனால், பயம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது இருக்கிற தொகை இரண்டு மடங்காகிவிடும். முஸ்லிம் காங்கிரஸ் பழைய நிலைக்கு வந்துவிடும் என்ற பயம். எனவேதான், பாராளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவில்லை.
அடுத்து வரவுள்ள சில ஆண்டுகளில் ஒரு நூற்றாண்டை நினைவு கூற இருக்கிறோம். 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பெரிய இனக் கலவரத்தின் நூற்றாண்டு ஆகும். 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான மிகப் பெரிய கலவரம் இந்நாட்டில் நடந்தது. 1956 இல் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த இந்தக் கலவரத்தின்போது முஸ்லிம்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கலவரத்தின் அடிப்படையே முஸ்லிம்களின் வணிகச் செழிப்பின் மீது கொண்ட பொறாமையாகும். அது இன்று வரை முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.
முஸ்லிம்களாகிய எமக்கு இவ்வளவு நடந்தும் நாம் இன்னும் வன்முறைக்குப் போகவில்லை. நாங்கள் இன்னும் ஜனநாயக ரீதியில்தான் போராடி வருகிறோம். இல்லாவிட்டால் எப்போதோ முஸ்லிம்களும் ஆயுதம் தூக்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

லாகூர் பொலிஸ் பயிற்சி கல்லூரி மீது தாக்குதல் 7 மணிநேரம் போராடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்த படையினர்

பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தீவிரவாதிகள் நடத்திய மோசமான தாக்குதலை 7 மணித்தியால முற்றுகையின் பின்னர் பாகிஸ்தான் இராணுவமும் பொலிஸ் துணைப்படையும் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கூரை மீது நின்றவாறு வானத்தை நோக்கி சுட்டு பாதுகாப்பு படையினர் வெற்றி ஆரவாரமிட்டதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
தாக்குதல் நடத்தியவர்களில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தாக்குதல் நடத்திய ஏனைய 11 பேரினதும் அவர்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்த 35 பேரினதும் நிலைமை தொடர்பாக இன்னமும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணிமீது இம்மாத முற்பகுதியில் தாக்குதல் இடம்பெற்ற பாகிஸ்தானின் லாகூர் நகரத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.
இச்சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கமாண்டோ பாணியிலான இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் 11 பொலிஸ் அதிகாரிகள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கும் இதற்கும் இடையில் ஒத்த தன்மைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரு சம்பவங்களிலுமே நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் துப்பாக்கிகள், கிரனேட்டுகள், ரொக்கட் லோஞ்ஜர்களுடன் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதலில் தாக்குதல் நடத்திய சகல தீவிரவாதிகளும் காயமேதும் இல்லாமல் தப்பிச் சென்றுவிட்டனர். ஆனால், நேற்றுத் தாக்குதல் நடத்தியோர் தப்பியோட முயற்சித்ததாக தோன்றவில்லை. பயிற்சிக் கல்லூரியில் தொடர்ந்து உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது.
நேற்று தாக்குதல் நடத்தியோர் 8 இற்கும் 20 இக்கும் இடைப்பட்ட தொகையினர் என்று கூறப்படுகிறது. அதிகளவு ஆயுதங்களுடன் அவர்கள் வந்து மோதியதாகவும் சிலர் பொலிஸ் சீருடையில் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சிக் கல்லூரிக்குள் தீவிரவாதிகள் இருந்தபோது இராணுவமும் பொலிஸாரும் அங்கு வந்து முற்றுகையிட்டிருப்பதாகவும் பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் ராசீர் நேற்றுப்பகல் தெரிவித்துள்ளார். பொலிஸாரும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளை அங்கு நிறுத்தியிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஸ்தாக்சீ சுக்ஜேரா கூறியுள்ளார்.
பொலிஸ் படையணிக்கு சேர்க்கப்பட்டோருக்கு காலை 8.50 மணிவரை காலைப் பயிற்சி அளிக்கப்படுவது அங்கு வழமையாகும். அந்த நேரத்தில் காலை 7.20 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
10,12 பயங்கரவாதிகள் காணப்பட்டனர். அவர்களில் அரைவாசிபேர் பொலிஸ் சீருடை அணிந்திருந்தனர். மற்றவர்கள் விளையாட்டு நேரத்தில் அணியும் உடையுடன் காணப்பட்டனர். தோல்களில் பைகளை வைத்திருந்தனர் என்று பொலிஸ் அதிகாரி அம்ஜாத் அகமட் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் இரு அணிகளாக அணிவகுப்பு இடம்பெறும் மைதானத்திற்கு வந்ததாகவும் காலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை துப்பாக்கிதாரிகள் நான்கு முனைகளில் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவ இடத்திலிருந்த பொலிஸ் அதிகாரி "த ரைம்ஸ்' செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.
முதலில் அவருக்கு மேலாக கிரேனெட் ஒன்று வந்து வீழ்ந்தது. பின்னர் ஏழு அல்லது எட்டுப் பேர் உட்புறமாக வந்து கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினர் என்று இத்தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயிற்சி பொலிஸ்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Saturday, March 28, 2009

முஸ்லிம்கள் மீது இந்துகளுக்கு வெறுப்பு ஏன்...?

பெரியார் பேசுகிறார்


இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது
- I

('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)
Periyar

தோழர்களே!

எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.


இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.

ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.

இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.

இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.

இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.

இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.


ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.


இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.



அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.


சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.


சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!


எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!தொடரும்.....

Thursday, March 26, 2009

சிங்கப்பூரில் 45,000 புதிய வேலைகள்

சிங்கப்பூரில் 45,000 புதிய வேலைகள் (Tue, 24/03/2009)


சிங்கப்பூரில் இந்தியர்கள் உட்பட இன்னும் பலருக்கு வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
பொருளியல் மந்தநிலை உள்ளூர் வேலை வாய்ப்புச் சந்தையை அலைக் கழிக்கிறது என்றாலும் தொழில் சந்தையில் இன்னும் நம்பிக்கை தரும் துறைகள் இருக்கவே செய்கின்றன.
வேலை இழப்புகள் பற்றி உறுப்பினர் ஐரீன் இங் கேட்ட கேள்விக்கு நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்த இடைக்கால மனிதவள அமைச்சர் கான் கிம் யோங், கட்டுமானம், மருந்தியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, பொது நிர்வாகம், பயணத்துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றார் அமைச்சர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 45,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரில் அமையவிருக்கும் இரு ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களில் 20,000, பொதுத் துறையில் 18,000, தூய்மை தொழில்நுட்பத் துறையில் 1,200, உயிர்மருத்துவத்தில் 900 என்று பல வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்,” என்று திரு கான் சொன்னார்.
இவற்றில் பெரும் பாலான வேலைகள் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலதிகாரிகள், தொழில் நுட்பர்கள் ஆகியோருக்கான வேலைகள் என்றாலும், சில்லறை விற்பனை, உணவு பானம், கட்டுமானம், உபசரிப்பு, பாதுகாப்பு, குழந்தைப் பராமரிப்பு, இருவழி மின்னிலக்க தகவல் சாதனம் போன்ற துறைகளிலும் புதிய வேலைகள் உருவாகும் என்றார்.
நாட்டில் தற்போது நிலவும் வேலையில்லா விகிதம் பற்றிய ஆகக்கடைசி விவரத்தையும் அமைச்சர் கான் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
தொடர்ந்து நான்கு காலாண்டுகளுக்கு வேலையில்லா விகிதம் அதிகரித்து வந்துள்ளதை சுட்டிய அவர், 2008ம் ஆண்டு செப்டம்பரில் 3.3 ஆக இருந்த விகிதம், 2008ம் ஆண்டு டிசம்பரில் 3.7 ஆக உயர்ந்தது என்றார்.
அந்த மாதத்தில் சுமார் 69,900 குடியிருப்பாளர்கள் வேலை இன்றி இருந்தார்கள் என்று கூறிய அமைச்சர், மனிதவள அமைச்சு, ஊழியரணி மேம்பாட்டு வாரியம், சமூக மேம்பாட்டு மன்றத்துடன் இணைந்து வேலை இழந்தவர்களுக்கு மறுவேலை தேடித் தர உதவி வருகிறது என்றார்.

Wednesday, March 25, 2009

நம்ம தமிழக எம்.பி,க்கள் வாய் திறந்த வரலாறு


எங்கிருந்தாலும் பலன் கருதாமல் பணி செய்யும் பண்பாளர்!


அபூசாலிஹ்

ஒரு மனிதன் வெற்றிகரமான முறையில் பணி செய்ய வேண்டு மென்றால் அவனுக்கு அனைத்து நல்ல அம்சங்களும் வாய்த்திருக்க வேண்டும். சோகம் சுமையாகக் கூடாது. கவலைகள் கருக்கொள்ளக் கூடாது. மகிழ்ச்சி தாண்டவமாடும் போது ஒரு எழிலான, அறிவான செயலை செய்வான். தன் கவலைகள் நீங்கினால் மட்டுமே பிறருக்கான பணி செய்யும் மனப்பாங்கு கொண்ட உலகில் இந்த மக்கள் தொண்டருக்கு உள்ள தொண்டுள்ளம் பாராட்டுக் குரியதாக இருக்கிறது.


ஆம் தமுமுக நிறுவனத் தலைவர் சகோ. குணங்குடி ஹனிபா சிறையில் வாடிக் கொண்டிருக்கும் போது கூட அனைத்து சிறைக் கைதிகளுக்காக நடத்தப்படும் உள்ளொளி என்ற மாத இதழின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருவதாக இந்தியா டுடே (ஏப்ரல் 1, 2009) குறிப்பிட்டிருக்கிறது. தமிழக சிறைத்துறை மலரும் மாறுதல் என்ற தலைப்பிட்ட கட்டுரை இதனைக் குறிப்பிடுகிறது.


மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழக சிறைத்துறையும், எங்கிருந்தாலும் நலப்பணி புரியும் குணங்குடி ஹனிபா அவர்களும் மிகவும் பாராட்டுக்குரிய வர்கள்.

Monday, March 23, 2009

தமிழக ஓட்டல்களில் காக்க பிரியாணி 4 பேர் கைது!

தமிழக ஓட்டல்களில் காக்க பிரியாணி!
காக்கா சப்ளை செய்த 4 பேர் கைது!!
‍ஓட்டல்களில் காக்க பிரியாணி!
மோசடியாளர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
கோவையில் சிக்கன் என்ற பெயரில் ஓட்டல்களில் காக்கா பிரியாணி சப்ளை ஜோராக நடந்து வந்துள்ளது. காக்கையை வேட்டையாடி ஓட்டல்களுக்கு சப்ளை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களிடம் விசாரணை நடக்கிறது.
கோவை மதுக்கரை பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சிக்கன் என்ற பெயரில் காக்கை பிரியாணி சப்ளை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. கோவை ரேஞ்சர் சவுந்தரராஜன், பாரஸ்டர் பழனிச்சாமி, நடராஜன் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது 4 பேர் காக்கைகளை வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மதுரை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி (20), சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்த முத்துமாலை (25), உரிச்சான் (40), கிருஷ்ணன் (60) எனத் தெரியவந்தது.
இவர்கள் காக்கைகளை வேட்டையாடி குறைந்த விலைக்கு அங்குள்ள ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். சில்லி சிக்கன், சில்லி பிரை என்ற பெயரில் அசைவ பிரியர்களுக்கு காக்கை இறைச்சி சப்ளை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
காக்கை பிரியாணியும் சிக்கன் பிரியாணி விலையில் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 25 காக்கைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஓட்டல்களுக்கு சப்ளை செய்வதற்காக அவற்றை அவர்கள் தோலுரித்து தயார் நிலையில் வைத்திருந்தனர். வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து அங்கேயே புதைத்தனர்.
4 பேரும் கைது செய்யப்பட்டு, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.எந்தெந்த ஓட்டல்களுக்கு காக்கை சப்ளை செய்யப்பட்டு வந்தது என்பது பற்றியும், ஓட்டல் உரிமையாளர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. காக்கையை வேட்டையாடி ஓட்டல்களுக்கு விற்பனை செய்வோர் மீதும், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...

வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள பெயர்கள் சேர்க்க தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்திலேயே http://www.elections.tn.nic.in/forms.htm படிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.

Sunday, March 15, 2009

முத்துப்பேட்டையில் கம்யூ. நகர செயலாளருக்கு அரிவாள் வெட்டு

முத்துப்பேட்டையில் கம்யூ. நகர செயலாளருக்கு அரிவாள் வெட்டு

மர்ம நபர்களுக்கு வலை

முத்துப்பேட்டை, மார்ச் 14:

முத்துப்பேட்டையில் பஞ்சாயத்து பேசிவிட்டு வந்துகொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளரை சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் மார்க்ஸ்(45). இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர். இவர் நேற்றிரவு நம்மங்குறிச்சி பகுதியில் இரு சமூகத்தினரிடை யே ஏற்பட்ட இடப்பிரச்னை தொடர்பாக பஞ்சாயத்து பேசிவிட்டு இரவு 11மணிக்கு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

நம்மங்குறிச்சி பிரிவு ரோட்டில் வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் பைக்கை வழிமறித்து, அரிவாளால் மார்க்சை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த மார்க்ஸ் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து முத்தரையர் சங்க மாநில இளைஞர் அணி செயலாளர் தீரன் உள்பட 4பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் சிலரை தேடிவருகின்றனர்.

Monday, March 9, 2009

இனியாவது ஒன்று படுமா நமது சமுதாயம்.

இனியாவது ஒன்று படுமா நமது சமுதாயம்.

இனியாவது ஒன்று படுமா நமது சமுதாயம்.

நமது சமுதாயத்திற்காக 2002 ஆண்டில் ஜனாப்.அப்துல் லத்திப் சட்டமன்றத்தில் MLA ஆக இருந்தார், அதன் பிறகு யாருமில்லை என்பதுதான் உண்மை,நமக்கு முறையான அரசியல் கட்சியும் இல்லை, அப்படி இருப்பதாக நோக்கினால் முஸ்லீம் லீக் முன்று பிரிவுகளாகவும் , இண்டியன் யூனியன் முஸ்லீம் லீக் இரு பிரிவுகளாகவும்,(காதர் மொய்தீன், தாவுது மியா கான் ), மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் - உமர் பாரூக் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் - ஷேய்க் தாவுத், இந்திய தேசிய லீக், தமிழ் மாநில தேசிய லீக், தேசிய லீக் முன்று பிரிவு களாகவும், தலைவர்கள், தொண்டர்கள் ஆக மொத்தம் பாத்து வேனில் அடக்கி விடலாம், அதே செல்வாக்கும் இல்லை, நோன்பு நேரங்களில் மாற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு கஞ்சிக்கு அழைப்பு கொடுத்து பத்திரிக்கைகளில் பதிய வைப்பார்கள், அதே நேரம் செல்வாக்குள்ள சில இஸ்லாமிய அமைப்புகளும் உண்டு அதில் த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரோன்ட் ஆப் இந்தியா (ப்பிய்) இம்மூன்று அமைப்புகளும் அமைப்புகளாகும் , இதற்கு அடுத்தநிலையில்ஜாக் (J.A.Q.H), ஜமாத்தே இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாத் , அமைப்புகஇருந்தாலும் இந்த அமைப்புகளுக்கு அரசியல் ஆர்வம் கிடையாது, இந்தநிலையில் த.மு.மு.க,PFI,த.த.ஜ, ஆகிய அமைப்புகள் கருத்துக்கள்வேறுபட்டாலும் அரசியல் தளத்தில் ஒன்று பட்டு மூன்று காலவரையில்இவர்கள் தேர்தலை முன்னிட்டு நன்மையை விரும்பி ஒன்று பட்டு லாம் ,

மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சி யார் விரும்பினாலும்விரும்பவிட்டளும் ஒரு எழுச்சியான கட்சி என்பது மறுக்க இயலாது, இதுவரை பல லீக் களாலும் திரட்ட இயலாததை செய்து இருக்கிறது, கூட்டத்தைமட்டுமல்ல ஒரு எழுச்சியையும் உருவாக்கி உள்ளதை த.த.ஜ, PFI, ஜாக் (J.A.Q.H), இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஆகிய அமைப்புகளை சார்ந்தசகோதரர்களும் வரவேற்று உள்ளார்கள் , ஏனன்றால் ஒரு தயாநிதி மாறன்அல்லது TTV .தினகரனுக்கோ அவர்களுடைய வெற்றிக்காக பாடுபடுவதைவிட, நாம் ஏன் நம்முடைய சகோதரனுக்கு உழைக்கக்கூடாது என்ற எண்ணம்நம்மிடைய மேலோங்கி உள்ளது, எவனோ ஒருவன் வெற்றிபெற போதுநாம் ஏன் ம.ம.க விற்கு ஆதரவு கொடுக்க கூடாது ? , அதற்கேற்ப சமிபகாலமாக த.மு.மு.க வின் வார இதழ் க்கூட முஸ்லீம் லீகை தவிர மாற்றநமது அமைப்புகளை சாட வில்லை, பீஜே மற்றும் பாகர் பிரிவை கூட தனதுஇதழில் தவிர்த்து வந்தது என்பது குறிப்பிட தக்கது, பாக்கரை தூண்டி விடவாய்ப்புகள் அதிகம் ஆனால் நடுநிலையோடு இருந்து வந்தது, த.த.ஜ வுடன்சுமுகமான உறவை பேண ம.ம.க மாநாடு அழைப்பிதல் கூட நேரில்கொடுக்கப்பட்டது, இரு அமைப்புகளின் தொண்டர்களுக்கும் கூட சுமுகஉறவையே விரும்புகிரரர் , இரு அமைப்புகளும் கொஞ்சம் இறங்கி பேச்சுநடத்தினால் சமுதாயத்திற்கு நல்லது, இதே போலே மனிதநீதி பாசறைஉடன் த.மு.மு.க சில வேறுபாடுகள் இருந்தாலும் கொழிகொடில் நடந்தமாநாட்டில் த.மு.மு.க தலைவர் ஜவதிருள்ள் கலந்துகொண்டதுகுறிப்படத்தக்கது, ஜாக் (J.A.Q.H), ஜமாத்தே இஸ்லாமி, போன்றஅமைப்புகள் அதிகாரபூர்வமற்ற வகையில் ஆதரவு தெரிவித்து உள்ளது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கூட வாழ்த்து அனுப்பி உள்ளது, ஆக இந்தஅமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு நமது சமுதாயத்தில் ஒருமாற்றத்தை கொண்டு வரலாம், பதினைந்து தினங்களில் பேசி நல்ல முடிவுஎடுக்க வேண்டும், இதை பிரிண்ட் செய்து நமது சகோதர்களுக்கு எடுத்துசொல்லுங்கள்.

insa allah.... வெற்றி பெறுவோம்....

- ஆதம்.ஆரிபின் ( மண்ணடி காக்கா)

Sunday, March 8, 2009

உங்கள் கருத்து என்ன? மாபெரும் கருத்துகணிப்பு!



1)உங்கள் வாக்கு யாருக்கு...?



2)முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்"கை" நிறைவேற்றியதா...?


3)முஸ்லிம்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் கட்சி எது...?


4)மனித நேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி சேரவேண்டும்...?


5)நான் படிக்கும் தமிழ் நாளிதழ்கள்!


6)நான் படிக்கும் பருவ இதழ்கள்!



உள்ளிட்ட கேள்விகளுடன் "கருத்து களம்" வலைப்பூ மாபெரும் கருத்துகணிப்பு நடத்துகிறது.

அதில் கலந்துக்கொண்டு உங்கள் உணர்வுகளை பதிவு செய்யுங்கள்...!


அன்புடன் கருத்துகளம்