சென்னை, பிப்.27-
சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டு கோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சிறு பான்மையினர் நடத்தும் தொடக்கப்பள்ளிகள் 56, நடுநிலை பள்ளிகள் 87, உயர்நிலைப்பள்ளிகள் 208, மேல்நிலைப்பள்ளிகள் 216 ஆக 567 பள்ளிகள் உள் ளன.
இந்த பள்ளிகளில் 2500 ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர். ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட மாணவர் கள் கல்வி கற்கின்றனர்.
இந்த பள்ளிகள் கிராமப் பகுதிகளிலும் தரமான கல்வியை ஏழை - எளிய மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன.
1991-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இந்த ஆசிரி யர்களுக்கான அரசு ஊதி யம் நிறுத்தப்பட்டு விட் டது. கடந்த 18 ஆண்டு களுக்கும் மேலாக சுய நிதி பள்ளி நிர்வாகங்கள் தருகின்ற குறைந்தபட்ச ஊதியத்திலேயே இவர்கள் வேலை பார்க்கின்றனர்.
சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண் டும் என உச்சநீதி மன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த ஊதியம் ரூ.200 கோடியை தாண்டும் என காரணம் காட்டி இது வரை மறுக்கப்பட்டு வருகி றது. ஆனால், சிறுபான்மை யினர் நடத்துகின்ற பள்ளி ஆசிரியர் களுக்கான ஊதி யம் ஆண்டுக்கு ரூ.62 கோடி மட்டுமே என தெரிய வந் துள்ளது.
சிறுபான்மையினரு டைய நலனுக்காகவும், கிராமப்புறத்து மாணவர் களின் கல்வி வளர்ச்சிக்காக வும் எண்ணற்ற சேவை திட்டங்களை நிறைவேற்றி தருகின்ற முதல்வர் கலைஞரின் அரசு, சிறு பான்மை கல்வி நிறுவனங் களின் கோரிக்கையை ஏற்று நடப்பு கல்வியாண் டிலிருந்து இங்கு பணி யாற்றுகின்ற ஆசிரியர் களுக்கு அரசு ஊதியம் வழங்க உத்தரவிட வேண் டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்டுக் கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment