வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.
வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
1. Hardware and Networking ,2 C, C++ 3,DTP, 4,Tally, with MS office
(10லிவது வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
இப்பயிற்சி கீழ்க்காணும் இடங்களில் அளிக்கப்பட உள்ளன,
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளுர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை, இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, தாராபுரம், விருத்தாச்சலம், சிதம்பரம், திண்டிவனம், மார்த்தாண்டம், தக்கலை, திருச்செந்தூர், நாசரேத், கோவில்பட்டி, ஆரணி, செய்யார், போளுர், செங்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஆத்தூர், இராசிபுரம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடியாத்தம், பேரணாம்பட்டு, அரக்கோணம், பள்ளப்பட்டி, அரவங்குறிச்சி, குளித்தலை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையாங்குடி, தேவக்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூந்தமல்லி,கூத்தாநல்லூர், பர்க்கூர், தர்மபுரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேலப்பாளையம், விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளியங்குடி, கடயநல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, குன்ணூர், மேட்டுப்பாளையம்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் கீழ்க்கா÷ம் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
5. Multimedia @ Animation
(10லிவது வகுப்பில் தேர்ச்சி (ம) தோல்வி அடைந்தவர்கள், (ம) மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
6. Dot.net (.net)
(பட்டதாரிகளும் (ம) பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
இப்பயிற்சியில் சேர்வதற்குக் கீழ்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்.
1) பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,00,000/லிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2) மாணவ/மாணவியர் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
(இசுலாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சீயர்கள்)
சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்)
1) சாதிச் சான்றிதழ் நகல்
2) குறைந்த பட்சம் 10லிஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்குமேல் படித்திருப்பின் அதற்குரிய நகல்களை இணைக்கலாம்.
3) வருமான சான்றிதழ் நகல்
4) பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்.
நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி அளிக்கப்படும் விவரங்கள்
CSC ComputerEudcation(தொலைபேசி எண் Chennai 044 - 25393783, 65698566) மூலம் மேற் குறிப்பிட்ட எல்லா 92 இடங்களிலும்.
IECT(தொலைபேசி எண். 044-42066684/85) மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் , புதுக்கோட்டை ஆகிய இடங்களில்.
Hindustan Sorfware Ltd(தொலைபேசி எண், 044-28511411,2,3) மூலம் மதுரை, கோயம்பத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில்.
Jayaram InfoTech (தொலைபேசி எண், 98421 58228, 9894288350) மூலம் அரியலூர், பெரம்பலூர், நாகபட்டிணம், கோயம்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில்.
Students Software training (தெலைபேசி எண், 98847 58845) மூலம் தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகபட்டிணம் (ம) மதுரை ஆகிய இடங்களில்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் உடனே சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இப்பயிற்சியின் மூலம் 8818 சிறுபான்மையின் மாணவ/ மாணவியர்கள் பயனடைவார்கள்.
www.muthupet.org
Saturday, February 28, 2009
Friday, February 27, 2009
சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டு கோள் விடுத்துள்ளது.
சென்னை, பிப்.27-
சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டு கோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சிறு பான்மையினர் நடத்தும் தொடக்கப்பள்ளிகள் 56, நடுநிலை பள்ளிகள் 87, உயர்நிலைப்பள்ளிகள் 208, மேல்நிலைப்பள்ளிகள் 216 ஆக 567 பள்ளிகள் உள் ளன.
இந்த பள்ளிகளில் 2500 ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர். ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட மாணவர் கள் கல்வி கற்கின்றனர்.
இந்த பள்ளிகள் கிராமப் பகுதிகளிலும் தரமான கல்வியை ஏழை - எளிய மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன.
1991-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இந்த ஆசிரி யர்களுக்கான அரசு ஊதி யம் நிறுத்தப்பட்டு விட் டது. கடந்த 18 ஆண்டு களுக்கும் மேலாக சுய நிதி பள்ளி நிர்வாகங்கள் தருகின்ற குறைந்தபட்ச ஊதியத்திலேயே இவர்கள் வேலை பார்க்கின்றனர்.
சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண் டும் என உச்சநீதி மன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த ஊதியம் ரூ.200 கோடியை தாண்டும் என காரணம் காட்டி இது வரை மறுக்கப்பட்டு வருகி றது. ஆனால், சிறுபான்மை யினர் நடத்துகின்ற பள்ளி ஆசிரியர் களுக்கான ஊதி யம் ஆண்டுக்கு ரூ.62 கோடி மட்டுமே என தெரிய வந் துள்ளது.
சிறுபான்மையினரு டைய நலனுக்காகவும், கிராமப்புறத்து மாணவர் களின் கல்வி வளர்ச்சிக்காக வும் எண்ணற்ற சேவை திட்டங்களை நிறைவேற்றி தருகின்ற முதல்வர் கலைஞரின் அரசு, சிறு பான்மை கல்வி நிறுவனங் களின் கோரிக்கையை ஏற்று நடப்பு கல்வியாண் டிலிருந்து இங்கு பணி யாற்றுகின்ற ஆசிரியர் களுக்கு அரசு ஊதியம் வழங்க உத்தரவிட வேண் டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்டுக் கொண்டுள்ளது.

Wednesday, February 25, 2009
பிப்ரவரி 27 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மானுட வசந்தம்
பிப்ரவரி 27 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மானுட வசந்தம்
துபாய் ஈமான் ( www.imandubai.org ) அமைப்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பங்கு பெறும் மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு துபாய் இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது.
இந்நிகழ்வில் இஸ்லாம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க
இருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது.
தமிழன் தொலைக்காட்சி வாரந்தோறும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும்
இந்நிகழ்ச்சி துபாயிலும் பதிவு செய்யப்படுகிறது.
இஸ்லாம் பற்றிய உங்களது சந்தேகங்களை எந்த தயக்கமும் இன்றி
கேட்கலாம்.
பாரபட்சமில்லாத உங்கள் உணர்வுகளை உன்னதமாக உணர்த்தலாம்.
சகோதர சமுதாயத்தினர் சமர்ப்பிக்கும் கேள்விகளை
முன்னுரிமையாக்கலாம்.
இந்நிகழ்சி முழுவதும் தமிழன் தொலக்காட்சியில் ஒளிபரப்பாக
இருக்கிறது.
அனைத்து சமூகத்தினரும் அணி திரண்டு வாரீர்
குறிப்பு : இரவு உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு
050 51 96 433 / 050 58 53 888 / 050 467 4399

திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு
ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகளை பெற்றுத்தரும் திருமறையினை ஓதத் தெரியாமல் பல சகோதரர்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பவர்களுக்காகவும் மற்றும் சிறுவர்களுக்காகவும் துபை நாஸர் சதுக்கத்தில் உள்ள ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் ஹதீத் அலுவலகத்தில் வாரத்தில் 4 நாட்கள் திருக்குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறுவர்களுக்கு - அஸர் தொழுகையிலிருந்து மக்ரிப் தொழுகை வரை உள்ள நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு - பஜ்ர் தொழுகைக்கு பிறகு
மேலதிக விபரங்களுக்கு மெளலவி நூருல் அமீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் - 055 6462745
தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப்படுத்துங்கள்...
அன்புடன்
ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீத்
துபை

Tuesday, February 24, 2009
கோழிக்கோட்டில் முஸ்லிம்களின் எழுச்சி!
தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் பெயரில் “அதிகாரம் மக்களுக்கே” என்ற கோஷத்துடன் தேசிய அரசியல் மாநாட்டைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 13.02.2009ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ. உறுப்பினர்கள் உட்பட இலட்சகணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்காற்றினர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சகோதரத்துவக் கூட்டம் நடந்தது. இதில், பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், ஐக்கிய அரபு எமிரேட், கத்தர், பஹ்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
அன்று மாலையில் சயீத் திப்பு சுல்தான் நகரில் 'அரசியல் அதிகாரமளித்தலும் மாற்று வகைகளும்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடந்தது. பாப்புலர் பிரண்ட் பொதுச் செயலர் ஷரீப் தலைமையில் நடந்த இந்தக் கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த நாள் காலையில் மனித உரிமைகள் ஆர்வலர் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில், ஓட்டல் ஸ்பேனில் அரசியல் ஆர்வலர்களின் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பி.எப்.ஐ.யின் முன்னாள் தலைவர் அபூபக்கர் தலைமை வகித்தார். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள அரசியல் சார்ந்த முஸ்லிம் அமைப்பினர் பங்கு பெற்றனர். அன்று மாலை 3 மணிக்கு சயீத் பகத் சிங் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தை, மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே துவக்கிவைத்தார். இதில், கான்பூரைச் சேர்ந்த சுவாமி லட்சுமி சங்கராச்சார்யா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரசாந்த் பூஷன், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதி நாளான 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கேரள பாப்புலர் பிரண்ட் தலைவர் நசிருதீன் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து விவாதித்தனர். அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு 'தேஜஸ் டெய்லி'யின் ஆசிரியர் கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன் துவக்கிவைத்தார். இதில் இந்தியாவின் பலப் பாகங்களிலிருந்தும் பல்வேறு செய்தி, ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பத்திரிக்கையின் பல்வேறு மாற்று வழிகளைப் பற்றி அலசப்பட்டது. குறிப்பாக, "முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக வன்முறையைச் சில பத்திரிகை, தொலைகாட்சிகள் செய்கின்றன. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உண்மையைப் பதிவு செய்யவேண்டும்" என்று பேசப்பட்டது. "மதவாதத்திற்கு எதிரான செய்திகளைத் தவறாமல் பதிவு செய்யவேண்டும்; செய்தி வெளியிடுவதைக் கடந்து சமூகத்தையே மாற்றக்கூடிய பத்திரிக்கையாளர்கள் தங்கள் பலம் உணர்ந்து சமூக பங்களிப்பு ஆற்ற வேண்டும்" என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் நக்கீரன், ஜு.வி, புதிய காற்று போன்ற பத்திரிகைகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர். மொத்தத்தில் செய்தித் தளத்தில் ஒரு மாற்று வழியை இக்கருத்தரங்கம் அறிமுகப்படுத்தியது.
மற்றொரு இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம்” என்ற தலைப்பில் நடந்தது.
தேசியப் பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில் ஜம்மியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார், அமெரிக்காவைச் சேர்ந்த மரியம் இஸ்மாயில், புது தில்லி ஹசீனா ஹாசிய ஆகியோர் கலந்து கொண்டார்.
"உலகம் முழுக்க எங்கு வன்முறை, இனப் படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பெருகிவிட்டன. இந்தப் பாசிசத்தை எதிர்க்கப் பெண்கள் அணிதிரள வேண்டும். இந்த எதிர்ப்புப் போரில் பங்களிக்க வேண்டும்.
அதே போல் நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருக முக்கியக் காரணம் முதலாளித்துவ கலாச்சாரங்கள்தாம். அவை பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் பண்பாட்டை வளர்கின்றன. அவற்றை நாம் அடித்து விரட்ட வேண்டும். நாட்டில் உள்ள பெண்கள் ஓர் அணியில் ஒன்று திரளவேண்டும். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்பன போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்தக் கருத்தரங்கம் இஸ்லாமியப் பெண்களிடம் புதிய கருத்துப் பாய்ச்சலை உருவாக்கி உள்ளது எனலாம்.
15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்புப் பேரணி நடந்தது. இப்பேரணியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ. தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில் உள்ள திடலை அடைந்தது. அங்கு, இரவு 7 மணிக்குப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தைத் தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல் துவக்கி வைத்தார்.
இதில், தமிழக பி.எப்.ஐ. தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே மனிதக் கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது.
இக்கூட்டத்தில் பேசிய பி.எஃப்.ஐ தமிழகத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
"இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் - குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் - பலியாகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில்கூட குண்டுகள் வீசப்படுகிறது.
சிங்கள அரசின் இந்த அராஜகப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும் மத்திய அரசு இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை.
அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது பேச்சில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
சிறுபான்மையினர் என்போர் தமிழர்களுக்கு எதிரானவர்களாகவே காலங்காலமாய்ச் சித்தரிக்கப் பட்டுவரும் வேளையில், பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்திருப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
நன்றி : சத்தியமார்க்கம்
Monday, February 23, 2009
வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்
வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்
அப்துல் பாசித் எம்.எல்.ஏ. பேட்டி
வாணியம்பாடி,பிப்.23-
வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கே ஒதுக்கும்படி தி.மு.க. விடம் கேட்போம் என அப்துல்பாசித் எம்.எல்.ஏ. கூறினார்.
வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அப்துல்பாசித் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனி நல வாரியம்
சமீபத்தில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் இந்திய ïனியன் முஸ்லீம் லீக் சார்பில் உலமாக்களுக்கு என தனிவாரியம் அமைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் நலவாரியம் அமைத்த தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மதரசா பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கான மின்கட்டணம் சாதாரண வகையில் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளது. இவற்றிக்கு மர்கஸ் என்ற தலைமை அமைப்பு உள்ளது. இவ்வமைப்பை கலந்து பேசிய பின்பு வக்பு வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
எங்கள் கட்சிக்கு ஒதுக்க கேட்போம்
இலங்கை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் இலங்கை தமிழர்களுக்கு உதவும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் அரசை குறை கூறி வருகிறார். இது கண்டிக்க தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கும் மீண்டும் ஒதுக்ககோரி தி.மு.க. தலைமையிடம் கோருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுப்புதல், முதுவை ஹிதாயத்

Sunday, February 22, 2009
2 ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்..
லாஸ் ஏன்ஜெல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவி்ல் ஒரு விருதும், 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஜெய் ஹோ பாடலுக்கான விருதை ரஹ்மானுடன் சேர்த்து அதை எழுதிய பாடலாரிசியர் குல்சாரும் பெற்றுள்ளார்.ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.சவுண்ட் மி்க்சி்ங்-பூக்குட்டிக்கு: இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.மேலும் சிறந்த படம், இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 6 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் 8 விருதுகளை வென்றுள்ளது.முதல் தமிழ் கலைஞர்!இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982-ம் ஆண்டு 'காந்தி' படத்துக்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான ஆஸ்கர் விருதை பானு அதையா வென்றார்.கடந்த 1992-ல் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான சத்யஜித் ரே-வுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' ஆஸ்கர் வழங்கியது. சத்யஜித்ரே இருந்த மருத்துவமனைக்கே ஆஸ்கர் விருதுக் குழுவினர் தேடிவந்து இந்த விருதினை வழங்கினர். இந் நிலையில், ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்திய திரைப்பட இசைக் கலைஞர் என்ற பெருமையை, தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார்.
ரஹ்மான்: தமிழகத்தில் உற்சாகம்-கொண்டாட்டம்
சென்னை: ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.விருது அறிவிக்கப்பட்ட பின் ரஹ்மான் வீட்டை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும் ரஹ்மானை வாழ்த்தியும் கோஷமிட்டபடி உள்ளனர்.ரஹ்மானுடன் அவரது தாயாரும் அமெரிக்கா சென்றுள்ளார்.பிரதமர் வாழ்த்து:ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு, உலக அளவில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட இந்தியத் தலைவர்கள் அனைவரும் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்
''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்
திங்கள்கிழமை, பிப்ரவரி 23, 2009, 10:32 [IST]
லாஸ் ஏஞ்செல்ஸ்: 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான்,''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

Subscribe to:
Posts (Atom)