Friday, May 22, 2009

மாபெரும் திருக்குர் ஆன் மாநாடு


மாபெரும் திருக்குர் ஆன் மாநாடு

Friday, May 15, 2009

திமுக குண்டர்கள் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல்





தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை. மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார்.

அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை
(Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்போது எமது கட்சி வேட்பாளரைக் கண்டவுடன் அவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட ஆயுதங்களுடன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனே கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ஹைதர் அலி அவர்கள், மத்திய சென்னை தேர்தல் அதிகாரியிடம் மேற்கண்ட அசம்பாவிதங்கள் குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார்.






மேலும் காவல்துறையிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே கலவரச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக குண்டர்கள், மேற்கண்ட 10 வாக்குச் சாவடிகளிலும் எண்ணற்ற கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும் கொடிய ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து தொடர்ச்சியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளார்கள்.

இதனால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல பயந்து தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை. இந்த அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஐஸ்’ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் மனிதநேய மக்கள் கட்சியினருக்கு எதிரான வன்முறையை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் அதிகாரிகளும் அலுவலர்களும் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

இச்சூழ்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வன்முறைகள் நடந்தேறிய வாக்குச் சாவடிகள் எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட பத்து வாக்குச் சாவடிகளில் மத்திய காவல் படை உதவியுடன் மறு தேர்தல் நடத்துமாறும், அதுவரை மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மேலும் திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவும், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.



(மு. ஜைனுல் ஆபிதீன்) செய்தித் தொடர்பாளர், ம.ம.க. செல்: 99942 92932

Wednesday, May 13, 2009

மத்திய சென்னையில் திமுக-மமக மோதல்: ஹைதர் அலியைத் தாக்க முயற்சி-பலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினருக்கும், மனித நேய மக்கள் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே இன்று பெரும் மோதல் மூண்டது. திமுகவினர் சரமரியாக அரிவாள்களால் வெட்டியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். மனித நேய கட்சி வேட்பாளர் ஹைதர் அலியையும் வெட்ட முயன்றனர்.

காவல் நிலையத்திற்குள் ஓடிப் பதுங்கிய மமகவினரும் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்கப்பட்டனர். இதைப் பார்த்த வாக்காளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

தயாநிதி மாறன் திமுக சார்பிலும், மனித நேய கட்சி சார்பில் ஹைதர் அலியும் மத்திய சென்னையில் போட்டியிடுகின்றனர்.

போட்டியிலிருந்து விலகுமாறு தன்னை தயாநிதி மாறன் தரப்பு கேட்டுக் கொண்டதாக முன்னர் ஹைதர் அலி புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று மனித நேய மக்கள் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.

திமுகவினர்தான் முதலில் தாக்குதலைத் தொடுத்ததாக கூறப்படுகிறது. சரமாரியான அரிவாள் வெட்டு விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் ஹைதர் அலி தனது கட்சியினரோடு அங்கு வந்தார். அவரையும் வன்முறைக் கும்பல் தாக்க முயன்றது. இதையடுத்து ஹைதர் அலி காவல் நிலையத்திற்குள் புகுந்து தப்பித்தார்.

அவருடன் மமகவினரும் காவல் நிலையத்திற்குள் புகுந்தனர். ஆனால் உள்ளேயும் புகுந்த வன்முறைக் கும்பல் காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து மனித நேயக் கட்சியினரை வெறித்தனமாக தாக்கியது.

இந்த கண்மூடித்தனமான வன்முறையைப் பார்த்த வாக்காளர்கள் அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடினர். போலீஸாரும் பின்னர் வந்து சேர்ந்தனர்.

யாரும் ஓட்டுப் போட வர வேண்டாம், வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று போலீஸார் கூறியுள்ளதாக தெரிகிறது. அந்தப் பகுதியே தற்போது போர்க்களம் போலக் காணப்படுகிறது. பதட்டமும், பீதியும் நிலவுகிறது.

Monday, May 11, 2009

சிங்கப்பூரில் பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

அல்-மவத்தாஹ் (Al-Mawaddah Masjid) பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஸா அல்லாஹ் வருகின்ற மே 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை புவாங்காக் ரயில் நிலையத்திற்கு (BUANGKOK MRT) எதிரே அமைந்துள்ள
அல்-மவத்தாஹ் பள்ளிவாசல்
திறப்பு விழா நடைபெற உள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திறப்பு விழாவினை தொடரந்து மே 16ம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிமுதல்
மௌலவி. ஹாபிஸ். அப்துல் கையும் பாகவி அவர்கள்
அவர்கள்
(இமாம். பென்கூலின் பள்ளிவாசல்)
“பள்ளிவாசல் ஓர் விளைநிலம்”
என்ற தலைப்பினிலும்
மௌலவி. யூசுப் காசிமி அவர்கள்
(இமாம். சூலியா பள்ளிவாசல்)
“தொழுகை உண்டாக்கும் பண்பாடுகள்”
என்ற தலைப்பினிலும்

இஸ்லாயமியச் சொற்பொழிவுகள் நிகழ்த்திட உள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:
ஷாகுல் ஹமீது - 90621340
அஸ்ரப் அலி - 97870817
இப்ராஹிம் - 91066652
முஹம்மது அசீம் - 90813520




(குறிப்பு : மே 16ம் தேதி இஸ்லாமிய சொற்பொழிவிற்குப் பின் இரவு உணவு வழங்கப்படும்)
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

இணைப்பு : பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ்

தயவுசெய்து இந்த இமெயிலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பார்வேட் செய்யவும்



இறைப்பணியில்
அல்-மவத்தாஹ் பள்ளிவாசல் நிர்வாகக்குழு மற்றும் இந்திய முஸ்லீம் நற்பணிக் குழு
சிங்கப்பூர்

Sunday, May 10, 2009

தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!

தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!
தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி சேவை
போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்
சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழி-தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.

பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.

பி.எஸ்.என்.எல். தொலைபேசி- 044 28447200
டாடா இண்டிகாம் தொலைபேசி- 044 64555100, 64556100

(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Thanks : நீதியின் குரல்