Friday, October 22, 2010

குர்பானி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குர்பானி

அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை பெருவதற்காக நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் காட்டிய வழிமுறையில் கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) ஏதாவது ஒன்றை அறுத்து பலியிடுவதற்கு குர்பானி என்று கூறப்படும்.

இறைவன் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை சோதிக்க நாடி, அவர்களது பாச மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து தியாகம் செய்ய கட்டளையிட்டான். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனது திருமறைக் குர்ஆனில் ……

“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)

இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச் செய்தான்.

வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப் பகரமாக்கிக் கொடுத்தோம். (37;107)

குர்பானி ஓர் கடமை:

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நமக்கு ‘குர்பானி’ கடமையாக்கப்பட்டது.

அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில்………

ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக! (108;02) என்று கட்டளையிட்டுள்ளான்.

மேலும், நபி(ஸல்) அவர்கள், கருப்பு நிறம் கலந்த கொம்புள்ள இரண்டு வெள்ளை ஆடுகளை தங்களது திருக்கரத்தால் அருத்துப் பலியிட்டார்கள். முதல் ஆட்டை அறுத்த போது, அல்லாஹ்வே! இது முஹம்மதாகிய எனக்கும், என் குடும்பத்தாருக்காகவும் என்றார்கள். பின்பு இரண்டாவதை அறுத்தபோது, இது எனது உம்மத்(சமுதாயத்திற்)காக என்று துஆச் செய்தார்கள்.

குர்பானி கொடுக்கத் தகுதியானவை:

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற) கால்நடைப்பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக, குர்பானியை நாம் ஏற்படுத்தினோம். (22;34)

மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து கொடுக்கலாம். ”ஆடு” தனி நபராக கொடுக்க வேண்டும்.

ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்ததாகவும், ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்ததாகவும் இருக்க வேண்டும்.

குர்பானி கொடுக்கும் நேரம்:

துல்ஹஜ் பிறை-10 (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னாலிருந்து …, பிறை – 13 வரை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனில் ……..

“ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக” (108;02)

”நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்”, என்று (நபியே!) நீர் கூறுவீராக! (6;162)

என்று முதலில் தொழுகையையும், அடுத்ததாக குர்பானியையும் குறிப்பிட்டுள்ளான்.

பராஉ இப்னு ஆஜிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) “யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பின்) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தனக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவராக மாட்டார்” என்று கூறினார்கள். (புகாரி)

குர்பானி கொடுப்பவர் பின்பற்ற வேண்டியவை:

குர்பானி கொடுக்க நாடி விட்டால், துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் குர்பானியை நிறைவேற்றும் வரை, நகம் வெட்டுவதையும் முடிகளை நீக்குவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் அதை (குர்பானியை) நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை களைவதை தவிர்த்துக் கொள்ளட்டும். (முஸ்லிம்)

குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெருநாள்) தொழுகையிலிருந்து திரும்பும் வரை உண்ணமாட்டார்கள். பின்னர், குர்பானி இறைச்சியை உண்பார்கள். (ஜாதுல் மஆது)

குர்பானியின் நோக்கம்:

(குர்பானி பிராணிகளாகிய) அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருக்காலும் அல்லாஹ்வை அடைவதில்லை; என்றாலும், உங்களிலுள்ள தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். (22;37)

*********************************************************************

மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி (துபாய்)

Saturday, October 9, 2010

அதிராம்பட்டினம் பிரச்சினை முடிவுக்கு வந்தது!

அதிராம்பட்டினத்தில் நூற்றாண்டு காலமாக நிலவிவந்த ஊர் பெயர் பிரச்சினை முடிவுக்கு வந்ததுள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊர். இங்கு நீண்ட காலமாக அதிராம்பட்டினத்தை அதிவீரராம பாண்டியன்தான் ஆட்சி செய்தான் அதனால்தான் அதிராம்பட்டினம் என பெயர் வந்தது. சிலர் நம்பியும் பேசியும் வந்தார்கள்.

இந்நிலையில் அதிரைவரலாறு  http://adiraihistory.blogspot.com/  என்னும் வலைப்பூ அதிராம்பட்டினத்திற்கும் அதிவீரராம பாண்டியனுக்கும் அறவே சம்மந்தமோ,தொடர்போ இல்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறார்கள்.

இந்த இனிய செய்தியை தமிழுலகம் முழுவதும் இணையம், பேஸ்புக், ஓர்குட், மின் குழுமம், மின்மடல்,sms உள்ளிட்ட சகல வழிகளிலும் எடுத்து சென்று மக்கள் பார்வைக்கு வைப்பதுடன் நாமும் கருத்துக்கூறி நல்ல வரலாற்று தளத்திற்கு ஆதரவு கரம் நீட்டுவோமாக!

வலைப்பூ உள்ளவர்கள் இந்த செய்தியை வெளியிடவும்.

Wednesday, November 11, 2009

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org

Monday, October 5, 2009

விபச்சாரிகளுக்கு புர்கா அணிவித்து முஸ்லிம் பெண்களை இழிவு படுத்தும் காவல்துறையின் போக்கைக் கண்டித்து காவல்துறை ஆணையரிடம் தமுமுக மனு

(தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜா கனி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:)விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகின்ற புர்காவை அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன.

மேலும், விபச்சார வழக்கில் கைதாகும் கழிசடைப் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுக்கே உரிய கண்ணியமான புர்காவை அணிவித்து, அழைத்து வரும் கயமைத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது.இதனால் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கேலி செய்யப்படும் வாய்ப்பும் இதனால் உருவாகியுள்ளது. விபச்சாரிகளுக்கு புர்கா அணிவிக்கும் தரங்கெட்ட செயûலைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வருக்கும், தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமுமுக மாநிலச் செயலாளர் , பி.எஸ்.ஷாகுல் ஹமீத், வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.செய்யது அபூதாஹிர் ஆகியோர் தமுமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.

Sunday, October 4, 2009

பகுத்தறிவு இயக்கத்தினருடன் விவாதம்

இன்ஷா அல்லாஹ் சென்னையில் வருகின்றது 11-10-2009 மற்றும் 12-10-2009 ஆகிய தேதிகளில் பகுத்தறிவு இயக்கத்தினருடன் விவாதம் நடைபெற உள்ளது.விவாதத்தில் பங்கு பெற்று கேள்வி கேட்க விரும்புவோர்கள், மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் (+91 9952057222) அவர்களை தொடர்பு கொள்ளலாம்

இந்த விவாதம் குறித்து போஸ்டர்களில் இடம் பெற வேண்டடிய வாசகங்கள் பின்வருமாறு;தவ்ஹீத் ஜமாஅத்VSபகுத்தறிவு இயக்கத்தினர்மாபெரும் விவாதம்
இறைவன் இருக்கின்றானா?
உலகம் தானாக தோன்றியதா?
மனிதன் குரங்கிலிருந்து வந்தானா?
திருக்குர்ஆன் இறைவேதமா?
முஹம்மது நபி இறைதூதரா?
சொர்க்கம் நரகம் உண்டா?
விதி என்பது உண்மையா?
மூட நம்பிக்கை நிறைந்தது பகுத்தறிவு இயக்கமே!விவாதமும் குறுக்கு விசாரனையும்11, 12 அக்டோபர் 2009 இறைவன் நாடினால்!சென்னையில்..இவண் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இறை நம்பிக்கையாளர்களுக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் நடக்கும் இந்த விவாதத்தை இன்ஷா அல்லாஹ் நமது www.tntj.net இணைய தளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்ய இருக்கிறோம்.காணத்தவறாதீர்கள்.

போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு ஊர்வலம்: ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 500 பேர் கைது


கோவை: கோவையில், போலீஸ் தடையை மீறி சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த 500 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலனும் தடையை மீறி கைதானார்.
ஆயினும், முன்னறிவிப்பின்றி நான்கு இடங்களிலிருந்து கிளம்பிய ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்திவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 84ம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் அந்த அமைப்பினர் சீருடை அணிவகுப்பு நடத்துகின்றனர். கோவையிலும் அணிவகுப்பு நடத்த முன்அனுமதி கோரியிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தடையை மீறி அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, காந்திபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.


இந்நிலையில், நேற்று மாலை,கோவை - காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன், மாநில செயலர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் மாரிமுத்து, கோவை மாநகர தலைவர் ராமநாதன், பி.எம்.எஸ். அகில பாரத செயலர் ராஜகோபால் உள்ளிட்ட, 200க்கு மேற்பட்ட தொண்டர்கள் பிரார்த்தனைப் பாடலைப் பாடினர். அதன் பின், அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்றனர். ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்தனர். அதே நேரத்தில்,மற்ற இடங்களில் ஊர்வலம் நடத்த முயன்றவர்களும் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, ஐநூறு பேர் கைது செய்யப்பட்டனர்.

Friday, October 2, 2009

15 வயது மாணவியின் ஸ்கார்ப் சக மாணவிகளால் எரிப்பு

ஆஸ்திரியா:15 வயது மாணவி ஒருவர் தலையில் அணிந்திருந்த ஸ்கார்பிர்க்கு தீ வைத்த இரண்டு மாணவிகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.

இந்த இருவர் டயானா என்ற 15 வயது இஸ்லாமிய மாணவியை அவர்கள் பள்ளி பயணத்தின் போது தாக்கி அவர் அணிந்திருந்த ஸ்கார்பிர்க்கு தீ வைத்தனர். இவர்கள் Catholic charity Caritas என்ற வணிக தொழில் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்று வருபவர்கள்.

பள்ளியின் செய்தி தொடர்பாளர் Harald Schmied இது பற்றி கூறுகையில், இந்த தாக்குதலுக்கான காரணம் தனிப்பட்ட விரோதம் தான் என்றும் மத சம்பந்தப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை என்று கூறினார்.

Schmied மேலும் கூறுகையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அந்த இரண்டு மாணவிகளும் இனி இது போன்று அசம்பாவிதங்கள் ஏதும் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எழுத்து மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

பல வித கலாச்சாரங்களை சார்ந்த மாணவிகள் பயிலும் இந்த கல்வி நிறுவனத்தில் மாணவிகள் ஒருவரோடு ஒருவர் நேசம் பாராட்டி நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள் என்றும், எதிர் பாராமல் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் இருட்டடிப்பு செய்யப்படாமல் ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காணப்படுகிறது என்று கூறினார்.

உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி


ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள்.

தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.
இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.

இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.

இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர்.
ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி.

அட ங்கோ… குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?
கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.
தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’,என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக தெரியக்கூடிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது . ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கே… இதுல யுகங்கள் தோறுமா?

ஒன்று நிச்சயம் இத்திரைப்படத்துறையன்றி எத் துறையானாலும் அதில் முஸ்லிம்கள் முழுமையாக கால்ப்பதிக்காதவரை இதுபோன்ற பாப்பான்கள் தொடர்ந்து ஆடத்தான் செய்வார்கள்.

ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள் முஸ்லிமாக மாறினர்

சவுதியில், ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில், முஸ்லிம்களாக மாறினர். சவுதியின், மெக்கா மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக, 450 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தை பல கோடி ரூபாய் ஒபந்தத்தில் சீன ரயில்வே கம்பெனி ஒன்று எடுத்துள்ளது.
இந்த கம்பெனியில் வேலை பார்த்த, 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில் முஸ்லிம்களாக மதம் மாறினர்.

இது குறித்து மெக்காவைச் சேர்ந்த அதிகாரி அப்துல் அசிஸ் அல்குதைரி கூறுகையில், "சீனர்கள் பணியாற்றிய பகுதியில், அவர்கள் மொழியில், இஸ்லாமிய புத்தகம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில், இந்த மதமாற்றம் நிகழ்ந்துள்ளது' என்றார்.ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றும், 5,000 சீன பணியாளர்கள் இடையே, இஸ்லாம் தொடர்பான தகவல்களை பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இலங்கையிலிருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு


இலங்கையிலிருந்து தமிழுலகிற்கு புதியதொரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வந்து சேர்ந்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸீன்னத்தில் முஹம்மதிய்யாவும், சர்வ தேச நூல் வெளியீட்டாகமான தாருஸ் ஸலாமும் இணைந்து இப்பணியைச் செய்துள்ளன.

இதுவரை தமிழில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தாலும் இலங்கையிலிருந்து வெளிவரும் முதல் தமிழ் மொழியாக்கம் என்ற அடிப்படையில் இது சிறப்புப் பெருகின்றது.


அத்துடன் இது தனிநபர் முயற்சியாக அல்லாமல் கூட்டு முயற்சியால் உருவான புது வரவு என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.


அன்ஸாருஸ் ஸின்னாவின் அறிஞர் குழுவான எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), எம்.ஜெ.எம். ரிஸ்வான் மதனி, எம்.எச்.எம். அஸ்பர் பலாஹி ஆகியோர் இதன் மொழியாக்கப் பணியில் ஈடுபட எம்.சி. அன்ஸார் ரியாதி, என்.பி. ஜூனைத் மதனி, எம்.எஸ்.எம். ரிஸ்வி மதனி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டுள்ளனர். அத்துடன் அன்ஸாரிஸ் ஸþன்னாவின் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம். அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் கண்கானிப்பின் கீழ் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.


அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் மதிப்புரையில் ''இம்மொழியாக்கத்தின் தமிழ்நடை எளிமையானதாகவும் அடைப்பு குறிகள் குறைவானதாகவும் இருப்பது இதன் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். அதேவேளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஸலபுஸ் ஸா­ஹீன் களது விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இம்மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழாக்க மற்றும் மேற்பார்வை குழுவினரின் முன்னுரையில் ''ஏற்கெனவே பல மொழி பெயர்ப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் திருக் குர்ஆனைத் தமிழில் தரும் பணியைச் செய்த அப்துல் ஹமீத் பாகவி (ரஹ்) அவர்களை இவ்வகையில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். இவருக்குப் பின்னரும் பலரும் இப்பணியைச் செய்துள்ளனர். அவர்கள் அனை வரையும் நன்றி யுடன் நாம் நிறைவு கூர்கின்றோம்'' எனக் குறிப் பிட்டுள்ளமை இக்குழுவின் பணிவையும் பண்பாட்டையும் பறை சாட்டுகின்றது.


கடந்த காலத்தில் பணியாற்றியவர்களையெல்லாம் குறைகூறி கேவலப் படுத்திவிட்டு தமது பணியைத் தூக்கி நிறுத்தும் தவறான போக்கு அவர்களிடம் தென்படாமை இஸ்லாமியப் பணியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.


அத்துடன் பலர் பங்கு கொண்ட பணி என்றாலும் இதில் தவறுகளும் குறை களும் இடம் பெற வாய்ப்பு உள்ளமையை நிச்சயமாக நாம் மறுக்க மாட்டோம். எனவே, எமது தமிழாக்கத்தில் குறைகளை யும், தவறுகளையும் காணும் வாசகர்கள் அவற்றைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளப் பெரிதும் உதவியாக அமையும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்'' என்று குறிப்பிட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.


அழகிய வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தமிழாக்கத்தின் இலங்கை தவிர்த்த ஏனைய நாடுகளுக்கு பதிப்புரிமையை சவூதியை தலைமையகமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவை சார்பாக சென்னையில் ரமலானில் நடைபெறும் தொடர் சொற்பொழிவில் பங்குக் கொள்ள சென்னை வந்திருந்த குழுவைச் சேர்ந்த மவ்லவி இஸ்மாயில் சலபி, தமுமுக தலைவருக்கு அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸீன்னத்துல் முஹம்மதிஸ் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதி ஒன்றை வழங்கினார். தாருஸ்ஸலாம் வெளியீட்டு உரிமையை தன்னுடைமையாக்கியுள்ளது.


இந்த புதிய வரவு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நிச்சயமாக இது நல்ல வரவேற்பையும் பெறும் எனக் கட்டியம் கூறலாம்.

Sunday, September 27, 2009

ஹஜ் பயணிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஹஜ் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி உதவியுடன் 2 நாட்கள் நடக்கிறது.
ஹஜ் பயணத்தின் போது சவுதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழி முறைகள், ஹஜ் குழு, ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரக ஏற்பாடுகள் பற்றி முகாமில் விளக்கப்படும்.

28ம் தேதி திங்கள் உருது மொழியில் சென்னை சூளை சட்டண்ண நாயக்கன் தெருவில் உள்ள ஆனைக்கார் மெட்ரிக்குலேஷன் பள்ளி கலையரங்கிலும் 29ம் தேதி தமிழில் சூளை டிமெல்லோஸ் சாலையில் உள்ள ஹஜ் ஹவுசிலும் பயிற்சி முகாம் நடைபெறும்.

இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் மறுவாழ்வு நிதி விண்ணப்பிக்க அழைப்பு

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் இழப்பீடு கோரியும், முதல்முறையாக சிறு குற்றம் செய்து தண்டனைக்கு உள்ளான சிறுபான்மையினர் மறுவாழ்வு நிதி கோரியும் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், உடல் உழைப்பு இயலாத நிலையிலோ, பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலோ இருக்க வேண்டும்.
உடல்ரீதியான பாதிப்பு குறித்து அரசு மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழும், பொருளாதார ரீதியான பாதிப்பு குறித்து வட்டாட்சியரிடமும் வருமானச் சான்றிதழும் பெற வேண்டும்.

மறுவாழ்வு நிதி கோர, தண்டனை பெற்றவர் ஆண்டு வருமானம் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு ரூ. 38 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் வசிப்போருக்கு ரூ. 24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இழப்பீடு கோருவோர், இழப்பின் அளவு குறித்து சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.

Thanks fr கலீல் பாகவீ

வருகிறது மத்திய அரசின் மதரஸா நலவாரியம்







தேவை - இஸ்லாமியக் குற்றவியல் சட்டம்...!




திருவண்ணாமலையில் தீபாவளி விற்ப்பனைக்கு வைத்திருந்த பட்டாசு வெடித்து வீடு தரைமட்டம், 13 பேர் பலி


தரைமட்டமான கட்டடம் மற்றும் மீட்ப்புப்பணியில் ஈடுபடும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த வீட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 3 அடுக்குகளை கொண்ட கட்டடம் நொறுங்கி தரைமட்டமானது. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்க்கப்பட்ட 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

திருவண்ணாமலை முகல் புறா தெருவைச் சேர்ந்தவர் பாபா பாய். ஜவுளி வியாபாரி. தனது சொந்த வீட்டின் தரை தளத்தில் வசித்து வருகிறார். இவ்ருக்கு 4 மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி இந்த வீட்டிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் 2 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்தனர்.
பாபா பாய் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்கி வைத்து விற்பனை செய்வாராம். அதே போல் இந்த ஆண்டும் 5லட்சம் ரூபாய்க்கு சிவகாசியிலிருந்து ஏராளமான தீபாவளி பட்டாசுகளை தன்னுடைய வீட்டில் வாங்கி வைத்து இருந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் பட்டாசுகளில் திடிரென தீப்பிடித்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் 3 மாடிகளும் இடிந்து விழுந்து அந்த கட்டிடமே தரைமட்டமானது. நகரமே அதிரும் வண்ணம் வெடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்து ஒடிவந்தனர். கட்டிடத்தில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
பொதுமக்களுடன் திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடிவிடிய நடந்த மீட்புபணியில் இன்று காலை வரை 13 உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 13 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளனர் .மேலும் 6 பேரை காணவில்லை. இடிபாடுகளுக்கிடையே இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விபத்தில் இறந்தவர்களின் விவரம்:
பாபாவின் மகன்கள் பரக்கத்(32)இஷ்ரத்(37),நூருல்லாஹ் மகன் ரியாஸ்(10),ஷாதிக்பாஷா(55),நிஷா(6)அப்ஷர்(6),அஷ்ரத்(11),அக்பர்(13),ஷாபிரா பானு(40),அலிமாபீவி(39),ஆசிப்(11) மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண முடியவில்லை.மற்ற உடல்களையும் மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
செல்போன் மூலமாக காப்பாற்ற அழைப்பு விடுத்தவர்...
இவ்விபத்தில் உயிரிழந்த ஷாதிக் உயிரிழப்பதற்கு முன்னால் தனது உறவினர் ஜமால் என்பவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். 10நிமிடத்துக்குப் பின் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இடிபாடுகளுக்கிடையே அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டும் சுமார் 12 மணியளவில் சடலமாகத்தான் மீட்க்கமுடிந்தது. சமையல் சிலிண்டரும் வெடித்தது....
வெடியுடன் சமையல் 3 சிலிண்டரும் வெடித்ததால் சேதம் அதிகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தால் திருவண்ணாமலை நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இவ்வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Wednesday, September 23, 2009

ஹலால் சான்றிதழ் இந்தியாவிலும்...


அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...நாங்கள் Halal India Pvt Ltd எனும் இந்திய அரசு அங்கீகாரம்பெற்ற ஓர்நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளோம்.


அது இந்தியாவில்தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள்,அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்குசட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.உலகின் பல நாடுகளில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமேமுஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர், ஹலால்சின்னம் பொறிக்கப்படாத பொருட்களைமுஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுகின்றனர் என்பதுநடைமுறையாகும்.


ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும்இந்திய£வில் இதற்கான விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.எனவே, இந்தியமுஸ்லிம்கள் தாம் உபயோகிப்பது ஹலால்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளஇயலாத சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்க்கும் விதமாகவே Halal India Pvt Ltdஎனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.இது இந்திய£வின் அனைத்து மாநிலங்களிலும் தலைசிறந்த முஸ்லிம் அறிஞர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களைக்கொண்ட நிறுவனமாகும்.


இந்திய£வின்பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதில்தகுதியானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகத்தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் Halal India Pvt Ltd வழங்கும் ஹலால்சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யவேண்டும் என்ற உறுதிமொழியையும் பெற்றுள்ளோம்.


இந்தசேவையில் நீங்களும் பங்கேற்கும் விதமாக நீங்கள் ஓர்பயனீட்டாளர்(consumer) என்ற உரிமையில் கடைகள், shopping centre களில்பிஸ்கட்,சாக்லேட், மென்பானங்கள் -cool drinks- போன்ற உணவுப்பொருட்கள்,இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றைவாங்கும்போது இதில் ஹலால் சின்னம் பொறிக்கப்படவில்லையே, நாங்கள் இதைஎப்படி உபயோகிக்க முடியும் என்பது போன்ற விழிப்புணர்வுக் கேள்விகளைக்கேட்பதன் வழியே அவை விரைவில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நீங்களும்துணைசெய்யலாம்.


எமது சேவைகள் குறித்த விபரங்களைத்தெரிந்து கொள்ளவும் தங்களது மேலானஆலோசனைகளை வழங்கவும் தொடர்புகொள்க.



மத நல்லிணக்கத்தின் அடையாளம்


ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் உத்தரவு